எருமைத்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருமைத்தீவு

எருமைத்தீவு (ஆங்கிலம்:Buffalo Island) மட்டக்களப்பில் நாலாபுறமும் வாவியால் சூழப்பட்ட தீவுகளில் இதுவும் ஒன்று இது அண்ணளவாக 11Km சுற்றளவு கொண்டது. இதனை பெரியகளம் எனவும் அழைப்பர். இதன் கிழக்கே கல்லடி, கல்லடி உப்போடை, நொச்சசிமுனை, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய், காத்தான்குடி, ஆரையம்பதி ஆகிய ஊர்களையும் வடக்கே மட்டக்களப்பு நகர்,கல்லடித்தெரு, கோட்டைமுனை ஆகிய இடங்களையும் மேற்கே வீச்சுக்கல்முனை, திமிலதீவு, கன்னன்குடா,சிறையாத்தீவு போன்ற இடங்களையும் தெற்கே மண்முனை போன்ற ஊர்களால் சூழப்பட்டுள்ளது.

இத்தீவின் கரையோரப்பகுதிகளாக கிழக்கே வில்லுப்பங்குத்துறை இடப்பிட்டி, அறுகம்குடாவும் வடக்கே பூவரசையடிக்குடாவும், பீக்குடாவும் மேற்கே  பெரியமுனை, வெள்ளைக்கல், கொளுத்திமுனையும் தெற்கே விரிசலாறும் அமைந்துள்ளது. எருமைத்தீவு வாழ்வியலும் வரலாற்றுப் பதிவுகளும்.. 2019. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-624-95021-0-9. 

சொல்லிலக்கணம்[தொகு]

1795 இல் ஆங்கிலேயர் வருகைக்கு முன் கோபத்திலிருந்த பஸ்கோமுதலி 1728-1795 வரை மட்டக்களப்புக்கு வந்து போடிமார்களுடன் சண்டையிட்டு போடிமார்களை கொன்றும், சிறைப்பிடித்தும், வயல்நிலங்களை அபகரித்தும் சிறைப்பிடித்தவர்களை சிறையாத்தீவில், எருமைத்தீவில் வைத்திருந்ததாகவும் அப்போது இவர்களைக்கொண்டு எருமை, குதிரை மேய்க்க வைத்ததாகவும், ஆங்கிலேயரின் வருகையின் பின் இந்த நிலை மாற்றம் அடைந்ததாகவும், சிறைப்பிடித்த இடம் சிறையாத்தீவு எனவும் எருமை வளர்த்த காரணத்தால் எருமைத்தீவு எனவும் பெயர்பெற்றது. எருமைத்தீவு வாழ்வியலும் வரலாற்றுப் பதிவுகளும்.. 2019. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-624-95021-0-9. 

தாவரங்கள்[தொகு]

இங்கே காணப்படும் கண்டல் தாவரங்களாக கண்ணா, கிண்ணை, கீரி, தில்லை போன்ற தாவரங்களும் ஆனைஅறுகு எனும் புல்லினமும் அடர்ந்து காணப்படுகிறது. ஆலை, அரசு, மஞ்சவண்ணா, நாவல், வேம்பு , பனை, பூவரசு போன்ற மரங்களையும் காணக்கூடியதாக உள்ளது.

உயிரினங்கள்[தொகு]

பறவைகள்[தொகு]

கொக்கு இனங்களாக நாரை, வேள்நாரை, உன்னிக்கொக்கு மற்றும் அடசல்மான், சாம்பலனாரை போன்ற பெரிய கொக்கு இனங்களும் அத்துடன் நீர்க்காகம், சில்லித்தாரா, கீச்சான், ஆக்காண்டி போன்ற பறவை இனங்களும் காணப்படுகிறது.

மிருகங்கள்[தொகு]

மிருகமாக நரியும், எலியும் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றன.

கோயில்கள்[தொகு]

கோயில்களாக பிள்ளையார் திடலில் பிள்ளையார் கோவிலும், நாகதம்பிரானும் காணப்படுகிறது.

கண்டங்கள்[தொகு]

எருமைத்தீவானது 26 கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

  1. கறுப்பன் குளம்  
  2. குளுப்ப மேடு
  3. நாகுண்டாப்போடி குளம்
  4. காலையடிக்குளம்
  5. மரணகண்டி
  6. கிளித்தீவு
  7. கீரைப்பாத்தித்திடல்
  8. விட்டுமுறிச்சான்
  9. பால்புக்கமடு
  10. கெழித்திமுனை
  11. வானம் பாதி
  12. வில்லுப்பங்கு
  13. புரன்குளம்
  14. வேப்பையடிக்குளம்
  15. யோசுவன்னியர் குளம்
  16. மண்மேட்டுக்காணி
  17. பள்ளக்குளம்
  18. உப்புக்குளம்
  19. சண்டைவெளி
  20. சின்னக்குளம்
  21. கீற்றுப்பத்து
  22. கொட்டான்பத்து
  23. பழவேளி
  24. கரச்சை
  25. புதுமேடு
  26. காலையடி வட்டை


மேற்சான்றுகள்[தொகு]

எருமைத்தீவு வாழ்வியலும் வரலாற்றுப் பதிவுகளும். எருமைத்தீவு கமநல அமைப்பு. 2019. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-624-95021-0-9.  

Monograph of the Baticaloa district. 

மட்டக்களப்புத் தேசம் வரலாறும் வழக்காறுகளும். 

மட்டக்களப்பு மான்மியம். 

"https://ta.wikipedia.org/w/index.php?title=எருமைத்தீவு&oldid=2824142" இலிருந்து மீள்விக்கப்பட்டது