திருச்செந்தூர் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 8°30′09″N 78°07′03″E / 8.5025°N 78.1175°E / 8.5025; 78.1175
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்செந்தூர் தொடருந்து நிலையம்
Tiruchendur railway station
இந்திய இரயில்வே தொடருந்து நிலையம்
திருச்செந்தூர் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்மா.நெ 176 திருச்செந்தூர் , தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்8°30′09″N 78°07′03″E / 8.5025°N 78.1175°E / 8.5025; 78.1175
உரிமம்இந்திய இரயில்வே
நடைமேடை3 [1]
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
தரிப்பிடம்இருக்கிறது
துவிச்சக்கர வண்டி வசதிகள்இருக்கிறது
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுTCN
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே

திருச்செந்தூர் தொடருந்து நிலையம் (Tiruchendur railway station) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்நிலையம் திருச்செந்தூரை மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு புனித யாத்திரை இடங்களுடன் இணைக்கிறது.[2]

வரலாறு[தொகு]

திருநெல்வேலிக்கு இரயில் இணைப்பு கிடைத்ததும், சில்லா வாரிய உறுப்பினராக இருந்த ஆறுமுகநேரி மேல வீடு எசு.பி.பொன்னையா நாடார் திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிகு இரயில் போக்குவரத்தை ஏற்படுத்த முயற்சி எடுக்கத் தொடங்கினார். இவர் முன்னெடுத்த முயற்சிகளைத் தொடர்ந்து, திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையே இரயில் பாதை இணைப்பை நிறுவுவதற்கு ஆதரவாக 1900 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி காலனித்துவ அரசு ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து, 1903 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23 ஆம் தேதியன்று நடைபெற்ற சில்லா வாரியக் கூட்டம் இரு நகரங்களுக்கு இடையே இரயில் பாதை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது. 1903 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட வாரியத்தால் முன்மொழியப்பட்ட இந்த பாதை தென்னிந்திய இரயில்வே நிர்வாகத்தால் 1904 ஆம் ஆண்டு மாவட்ட வாரியத்தின் செலவில் ஆய்வு செய்யப்பட்டது. இதன் நீளம் 37.60 மைல் என்றும் குறுகிய பாதை அமைக்க ரூ 20,52,000 செலவு பிடிக்கும் என்றும் திட்டமிடப்பட்டது. இதன் நிதியுதவிக்கான முன்மொழிவுகள் மாவட்ட வாரியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் மாவட்டத்திற்கு இரயில்வே கட்டுமான நிதியை உருவாக்குவதற்காக சிறப்பு வரி விதித்தனர்.[3] [4] முதல் இரயில் சேவை 1923 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.[5]

நிர்வாகம்[தொகு]

திருச்செந்தூர் தொடருந்து நிலையம் தென்னக இரயில்வே பிரிவைச் சேர்ந்த மதுரை கோட்டத்திற்கு உட்பட்டு இயங்கியது.[6]

சேவைகள்[தொகு]

திருச்செந்தூரிலிருந்து புறப்படும் இரயில் வண்டிகள்:

  • திருச்செந்தூர் அதிவிரைவு வண்டி (திருச்செந்தூர்- சென்னை எழும்பூர்)
  • பாலக்காடு சந்திப்பு-திருச்செந்தூர் பயணிகள் இரயில் வண்டி (பழனி வழியாக)
  • திருநெல்வேலி-திருச்செந்தூர் பயணிகள் இரயில் வண்டி (முன்பதிவு செய்யப்படாதது)
  • தூத்துக்குடி-திருச்செந்தூர் பயணிகள் இரயில் வண்டி (முன்பதிவு செய்யப்படவில்லை)

வண்டிகளின் வரிசை[7][தொகு]

எண். பெயர் புறப்படும் இடம் சேரும் இடம் சேவை நாட்கள் நேரம் வழித்தடம்
16105 செந்தூர் விரைவுவண்டி சென்னை எழும்பூர் திருச்செந்தூர் தினமும் 06.50
06405 திருச்செந்தூர் திருநெல்வேலி விரைவு வண்டி திருச்செந்தூர் திருநெல்வேலி சந்திப்பு தினமும் 07.20 காயல் பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சன்னாவிலை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, திருவைகுண்டம், தாதன் குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை
06674 திருச்செந்தூர் திருநெல்வேலி விரைவு வண்டி திருச்செந்தூர் திருநெல்வேலி சந்திப்பு தினமும் 08.25 காயல் பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சன்னாவிலை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, திருவைகுண்டம், தாதன் குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை
06673 திருநெல்வேலி திருச்செந்தூர் விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு திருச்செந்தூர் தினமும் 09.00
06675 திருநெல்வேலி திருச்செந்தூர் விரைவுவண்டி திருநெல்வேலி சந்திப்பு திருச்செந்தூர் தினமும் 12.10
16732 திருச்செந்தூர் பாலக்காடு விரைவு வண்டி திருச்செந்தூர் பாலக்காடு சந்திப்பு தினமும் 12.20 காயல் பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சன்னாவிலை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, வாஞ்சிமணியாட்சி சந்திப்பு, விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, பழநி, பொள்ளாச்சி சந்திப்பு.
06679 வாஞ்சி மணியாச்சி திருச்செந்தூர் விரைவு வண்டி வாஞ்சி மணியாச்சி சந்திப்பு திருச்செந்தூர் தினமும் 13.35
06680 திருச்செந்தூர் வாஞ்சி மணியாச்சி விரைவு வண்டி திருச்செந்தூர் வாஞ்சி மணியாச்சி சந்திப்பு தினமும் 14.30 காயல் பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சன்னாவிலை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, திருவைகுண்டம், தாதன் குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, தாழையூத்து, கங்கை கொண்டான், நாரைக்கிணறு
16731 பாலக்காடு திருச்செந்தூர் விரைவு வண்டி பாலக்காடு சந்திப்பு திருச்செந்தூர் தினமும் 15.15
06676 திருச்செந்தூர் திருநெல்வேலி விரைவு வண்டி திருச்செந்தூர் திருநெல்வேலி சந்திப்பு தினமும் 16.35 காயல் பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சன்னாவிலை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, திருவைகுண்டம், தாதன் குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை
06409 திருநெல்வேலி திருச்செந்தூர் விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு திருச்செந்தூர் தினமும் 17.50
06678 திருச்செந்தூர் திருநெல்வேலி விரைவு வண்டி திருச்செந்தூர் திருநெல்வேலி சந்திப்பு தினமும் 18.15 காயல் பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சன்னாவிலை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, திருவைகுண்டம், தாதன் குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை
16106 செந்தூர் விரைவுவண்டி திருச்செந்தூர் சென்னை எழும்பூர் தினமும் 20.10 காயல் பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், நாசரேத், திருவைகுண்டம், செய்துங்கநல்லூர், திருநெல்வேலி சந்திப்பு, விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு,திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம்.
06677 திருநெல்வேலி திருச்செந்தூர் விரைவு தொடருந்து திருநெல்வேலி சந்திப்பு திருச்செந்தூர் தினமும் 20.20

மேற்கோள்கள்[தொகு]

  1. https://indiarailinfo.com/station/blog/tiruchendur-tcn/3754
  2. "Madurai Division System Map" (PDF). Southern Railway. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
  3. HISTORIES OF RAILWAY PROJECTS, INCLUDING TRAMWAYS, CORRECTED UP TO 30TH JUNE 1906 Page no. 46
  4. https://eparlib.nic.in/bitstream/123456789/55498/1/lsd_01_03_14-02-1953.pdf Page no.2
  5. "Tirunelveli–Tiruchendur rail service centenary celebrations held". The Hindu. 23 February 2023. https://www.thehindu.com/news/cities/Madurai/tirunelvelitiruchendur-rail-service-centenary-celebrations-held/article66544470.ece. 
  6. "SR MDU Division" (PDF).
  7. https://etrain.info/in?STATION=TCN

புற இணைப்புகள்[தொகு]