துருக்கிய-மங்கோலிய கலாச்சாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1335 இல் ஆசியா

துருக்கிய-மங்கோலியம் அல்லது துருக்கிய-மங்கோலிய கலாச்சாரம் என்பது ஆசியாவில் 14ம் நூற்றாண்டின் போது தங்க நாடோடிக் கூட்டம் மற்றும் சகதை கானேடு ஆகிய அரசுகளின் ஆளும் வர்க்கத்தினர் இடையே வளர்ந்த இன கலாச்சார தொகுப்பு ஆகும்.

இந்த கானேடுகளின் ஆட்சி செய்த மங்கோலிய ஆளும் வர்க்கத்தினர் அவர்கள் வென்று ஆட்சி செய்த துருக்கிய மக்களுடன் இறுதியாக ஒன்றினர். இவ்வாறாக அவர்கள் துருக்கிய-மங்கோலியர் என்று அழைக்கப்பட்டனர். இந்த ஆளும் வர்க்கத்தினர் படிப்படியாக இஸ்லாம் மதம் (முந்தைய மதங்களான தெங்கிரி மதம் போன்றவற்றிலிருந்து) மற்றும் துருக்கிய மொழிகளை ஏற்றுக்கொண்டனர். அதே நேரத்தில் மங்கோலிய அரசியல் மற்றும் நீதி அமைப்புகளை அப்படியே தொடர்ந்தனர்.[1]

துருக்கிய-மங்கோலியர்கள் மங்கோலிய கானேடுகளின் வீழ்ச்சிக்கு பிறகு அதன் வழியில் பல்வேறு அரசுகளை நிறுவினர். உதாரணமாக நடு ஆசியாவில் தங்க நாடோடிக் கூட்டம் மற்றும் தைமூரிய பேரரசுகளை பின் தொடர்ந்த தாதர் கானேடுகளை கூறலாம்.

உசாத்துணை[தொகு]