கேரட் சூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A cream of carrot soup with bread
ரொட்டியுடன் கேரட் சூப்
A cream of carrot soup
ரொட்டியுடன் கேரட் சூப்

கேரட் சூப் (Carrot soup) (referred to in French as Potage de Crécy, Potage Crécy, Potage à la Crécy, Purée à la Crécy and Crème à la Crécy)[1][2][3][4] என்பது கேரட்டை முதன்மை மூலப்பொருளாகக் கொண்டுத் தயாரிக்கும் சூப் வகையைச் சார்ந்தாகும்.[5] இதை ஒரு கிரீம்- அல்லது குழம்பு பாணி சூப்பாகவும் தயாரிக்கலாம். மேலும் அதன் தயாரிப்பில் கூடுதலாக காய்கறிகள், வேர் காய்கறிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது. இது சூடாகவோ அல்லது குளிராகவோ வழங்கப்படும். மேலும் பல சமையல் வகைகளும் இதில் உள்ளன. கேரட் சூப் பிரஞ்சு உணவு வகைகளில் "கிளாசிக்" உணவாக விவரிக்கப்பட்டுள்ளது. 1346 க்ரெசி போரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26 அன்று எட்வர்ட் VII என்ற அரசர் இந்த கேரட் சூப்பினை அருந்தினார் என அறிய வருகிறது..


தயாரிப்பு முறை[தொகு]

கேரட் சூப்பை கிரீம் பாணி சூப்பாக தயாரிக்கலாம்[6][7] மற்றும் ஒரு குழம்பு பாணி சூப்பாகவும் தயாரிக்கலாம்.[8][9] காய்கறிகள்[10] அல்லது கோழியினைக் கொண்டும் சூப்பின் இரு பாணிகளிலும் பொருட்களாகப் பயன்படுத்தலாம்.[11][12] வேர் காய்கறிகள் உட்பட பிற காய்கறிகளையும் இதன் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் பின்னர் பூண்டு[8] வெங்காயம்,[7] சாலட்,[2] உருளைக்கிழங்கு,[9][13][14] டர்னிப்[15] கேரட் சாறு மற்றும் ஆரஞ்சு சாறு போன்றவற்றைக் கொண்டும் தயாரிக்கப்படுகின்றது.[5][16][17][18] ஒரு சில வகை சூப்கள் "ப்யூரிட்" கேரட் கொண்டும் தயாரிக்கப்படுகின்றன.[14][19] சூப்பினை சமைத்தபின், அதை ஒரு சல்லடை மூலம் வடிகட்டப்படும்.[14][20][21] பயன்படுத்தப்படும் கேரட்டின் மேல்தோலினை உரித்தும் அல்லது உரிக்காமலும் பயன்படுத்தலாம். தோல் உரிக்கப்படுகிற கேரட்டுகளின் பயன்பாடு தயாரிப்பின் சுத்திகரிப்பும் அதிக மென்மையையும் வழங்கும்.[19] "ப்யூரிட்" கேரட்டுடன் தயாரிக்கப்படும் சூப்பானது தடிமனான நிலைத்தன்மையைக் கொண்டிருக்கும். ஆனால் அதே நேரத்தில் அமைப்பில் மென்மையாக இருக்கும்.[22] பயன்படுத்தப்படும் கேரட்டின் நிறத்தின் அடிப்படையில் சூப்பின் நிறம் மாறுபடும்.[23] இளம் கேரட் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சூப்பானது தித்திப்பாகவும், பிரகாசமான ஆரஞ்சு நிறத்துடன் காணப்படும், அதே நேரத்தில் பழைய, பெரிய கேரட் குறைந்த இனிப்பையே கொண்டிருக்கும், மற்றும் மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.[2] உட்புறத்தில் உடைந்த அமைப்பைக் கொண்ட பழைய கேரட்டுகளின் பயன்பாடு தரம் குறைந்த ஒரு சூப்பை உருவாக்க முடியும்.[2]

கேரட் சூப் தயாரிப்புகளின் மூலப்பொருள்களில் பல வேறுபாடுகள் உள்ளன. சில கேரட் சூப்கள் தேங்காய்ப்பால், இளநீர், தேங்காய் வெண்ணெய் அல்லது தேங்காய் துண்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.[16][23][24][25] சில தயாரிப்புகள் இஞ்சியை ஒரு மூலப்பொருளாகக் கொண்டுள்ளது[26][27][28] மற்றும் ஒரு சில கறியைக் கொண்டு தயாரிக்கபடுகின்றன.[16][24] பச்சை கேரட் இலைகள் (பச்சை) கேரட்டின் மேல் ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தலாம்[13] வெட்டப்பட்ட புதினா இலைகளைக் கொண்டும் சில வகை சூப் தயாரிக்கப்படுகிறது.[5][29] இது குளிரூட்டப்பட்டோ அல்லது சூடாகவோ பறிமாறப்படும்.[9][22][23][30] உப்பு மற்றும் மிளகு ஆகியவைகளும் இதில் பயன் படுத்தப்படும்,[8] மற்றும் ஜாதிக்காய் சில நேரங்களில் ஒரு சுவையூட்டலாக பயன்படுத்தப்படுகிறது.[31][32][33] இதில் சில நேரங்களில் தயிர், தயிர் சாஸ், புளிப்பு கிரீம் மற்றும் பிற பொருட்கள். ஆகியவற்றைக் கொண்டும் பறிமாறப்படும்,[10][12][23][34][35]

யுனைட்டெட் கிங்டமில், வெற்று கேரட் சூப்பை விட மிகவும் பிரபலமான ஒரு தனித்துவமான சூப் வகை கேரட் மற்றும் கொத்தமல்லி சூப் வகையாகும். கரடுமுரடான நறுக்கப்பட்ட அல்லது அரைத்த கேரட், வெள்ளைப்பூண்டு மற்றும் கொத்தமல்லி விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.[36][37]

ஆரஞ்சின் மூலப்பொருள் உணவை அழகுப் படுத்தவும், உனவின் சுவைக் கூட்டவும் போன்ற இருவழிகளில் பயன்படுகிறது. [16][17][30][38] கூடுதல் அழகுபடுத்தல்களில் வெந்தயம், மற்றும் கேரட் இலைகள் பயன்படுத்தப் படுகின்றது. [7][34] அரைத்த, துண்டு துண்டாக வெட்டப்பட்ட அல்லது துண்டுகளாக்கப்பட்ட கேரட்,[23] இனப்பூண்டு,[10][29] மற்ற புதிய, நறுக்கப்பட்ட மூலிகைகள், க்ரூட்டன்கள் மற்றும் சிற்றுண்டி சதுரங்கள்,[1][11][14][15][21] போன்றவைகளைக் கொண்டும் கேரட் சூப்பினை தயாரிக்கலாம் நனிசைவம் உணவு மற்றும் பிஸ்கேவாகவும் தயாரிக்கலாம்.[25] கேரட் சூப்பில் நைத்திரைற்று குறிப்பிடத்தக்க அளவு இருக்கும்.[39]

பிரஞ்சு உணவுகளில்[தொகு]

(பொட்டேஜ்)பிரெஞ்ச் வகை சூப்

பொட்டேஜ் எனப்படும் கேரட் சூப் பிரஞ்சு உணவுகளில் ஒரு உணவாக பறிமாறப்படுகிறது மேலும் அந்நாட்டின் உணவு வகைகளில் "கிளாசிக்" மற்றும் "பிரபலமான" உணவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1][22][40] பொட்டேஜ் என்பது பலவகையான சூப்கள், அவை அடர்த்தியான நிலைத்தன்மையைக் கொண்டுள்ளன.[41][42] வடக்கு பிரான்ஸ் நாட்டில் சிறந்த சுவையுடன் கேரட் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.[43][44]

பிரஞ்சு உணவுகளில், க்ரெசி சூப் பொதுவாக அரிசியுடன் தயாரிக்கப்படுகிறது, இது ஒரு பக்க உணவாகவும் வழங்கப்படுகிறது.[2][21][45][46] அரிசி கெட்டியாக சேர்த்து ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.[47][48] மேலும், வாற்கோதுமையும் பயன்படுத்தப்படுகிறது.[47]

வரலாறு[தொகு]

நவீன இனிப்பு ஆரஞ்சு கேரட் 16 ஆம் நூற்றாண்டு வரை உற்பத்தி செய்யப்படவில்லை என்றாலும், குறைந்த நாடுகளில், இது ஒரு பாரம்பரியமாக பயிரடப் பட்டுள்ள்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிரெசி போரின் ஆண்டுவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 26 அன்று ஆண்டுதோறும் ஆங்கிலேயர் கிரெசி சூப் சாப்பிடுவது வழக்கமாக கொண்டிருந்தனர். இது 1346 இல் பிரான்சிலுள்ள கிரெசியில் நிகழ்ந்தது.[31][43] 1901 மற்றும் 1910 க்கு இடையில், போரின் ஆண்டுவிழா நாளில், எட்வர்ட் VII கிரெசி சூப் சாப்பிட்டுள்ளார்.[31] அவரது மூதாதையரின் நினைவாக ,[31] போர் முடிந்ததும் வெற்றிகரமான ஆங்கில வீரர்களுக்கு இந்த சூப் வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.[4] எர்ன்ஸ்ட் மோரோ என்ற ஆஸ்திரிய குழந்தைகள் மருத்துவர் "பேராசிரியர் மோரோ" என்ற கேரட் சூப்பைக் கண்டுபிடித்தார் , இது பாக்டீரியாவால் ஏற்படும் வயிற்றுப்போக்குக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று காட்டப்பட்டுள்ளது.[49]

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Shulman, Martha Rose (January 22, 2009). "Pureed Carrot Soup Recipe". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் December 6, 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 David, E.; Child, J.; Renny, J. (1999). French Provincial Cooking. Penguin twentieth-century classics. Penguin Publishing Group. பக். 189–190. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-101-50123-8. https://books.google.com/books?id=_-WZjjQsKzAC&pg=PA189. 
  3. Foskett, D.; Rippington, N.; Paskins, P. (2015). Practical Cookery for the Level 2 Professional Cookery Diploma, 3rd edition. Hodder Education. பக். 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4718-3962-7. https://books.google.com/books?id=pQVsCgAAQBAJ&pg=PR156. 
  4. 4.0 4.1 Smith, H. (1900s). The Master Books of Soups. London: Spring Books. பக். 170. https://archive.org/stream/masterbookofsoup00smitiala#page/170/mode/2up.  Note: More information about The Master Books of Soups from: Google Books and Internet Archive.
  5. 5.0 5.1 5.2 Traunfeld, J. (2013). The Herbfarm Cookbook. Scribner. பக். 24–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4767-6250-0. https://books.google.com/books?id=3eEeAAAAQBAJ&pg=PA24. 
  6. HuffPost (October 10, 2012). "Recipe Of The Day: Creamy Carrot Soup". The Huffington Post. பார்க்கப்பட்ட நாள் December 6, 2015.
  7. 7.0 7.1 7.2 Creasy, R. (2008). Rosalind Creasy's Recipes from the Garden. Cookery, Food and Drink Series. Tuttle Publishing. பக். 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8048-3768-2. https://books.google.com/books?id=ara-8q1FlE4C&pg=PA87. 
  8. 8.0 8.1 8.2 "Michael Anthony's Carrot Soup With Coconut Milk". ABC News. பார்க்கப்பட்ட நாள் 6 December 2015.
  9. 9.0 9.1 9.2 "Chilled Carrot Soup". WAFB 9. August 12, 2008. பார்க்கப்பட்ட நாள் December 6, 2015.
  10. 10.0 10.1 10.2 Copeland, S.; Kim, Y. (2013). Feast: Generous Vegetarian Meals for Any Eater and Every Appetite. Chronicle Books LLC. பக். 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4521-2960-0. https://books.google.com/books?id=oOkxaMyqAE4C&pg=PA86. 
  11. 11.0 11.1 Chamberlain, S.; Chamberlain, N. (2001). Clémentine in the Kitchen. Food Series. Modern Library. பக். 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-375-75664-1. https://books.google.com/books?id=bTrUcfNbiVUC&pg=PA175. 
  12. 12.0 12.1 Sander, J.B. (2004). The Martini Diet. Fair Winds. பக். 160. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-61059-380-9. https://books.google.com/books?id=4Si5TDpKwtsC&pg=PA160. 
  13. 13.0 13.1 Creasy, R. (1999). The Edible French Garden. பக். 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4629-1759-4. https://books.google.com/books?id=A7SHCgAAQBAJ&pg=PA70. 
  14. 14.0 14.1 14.2 14.3 Cooke, M.C. (1897). Breakfast, Dinner and Supper, Or What to Eat and how to Prepare it. J.H. Moore. பக். 62. https://books.google.com/books?id=kd8oAAAAYAAJ&pg=PA62. 
  15. 15.0 15.1 Picayune, T. (1901). The Picayune's Creole Cook Book. The Times-Picayune. பக். 27–28. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4494-4043-5. https://books.google.com/books?id=DfCFYBehGgUC&pg=PA27.  Note: More information about The Picayune's Creole Cook Book: "Local historian digs up long-lost info on The Picayune Creole Cook Book". The Times-Picayune.
  16. 16.0 16.1 16.2 16.3 Sackett, L.; Pestka, J.; Gisslen, W. (2010). Professional Garde Manger: A Comprehensive Guide to Cold Food Preparation. John Wiley & Sons. பக். 288. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-17996-3. https://books.google.com/books?id=HEl6J-fr9kIC&pg=PA288. 
  17. 17.0 17.1 McNair, J.K.; Brabant, P. (1990). James McNair's Soups. Chronicle Books. பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87701-753-0. https://books.google.com/books?id=fFJGRgg8cKsC&pg=PA23. பார்த்த நாள்: December 6, 2015. 
  18. Gerras, C.; Cusumano, C.; Munson, C. (1989). Rodale's Basic Natural Foods Cookbook. Simon & Schuster. பக். 128. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-671-67338-3. https://books.google.com/books?id=EzKqgS5SIyUC&pg=PA128. 
  19. 19.0 19.1 Dragonwagon, C. (1992). Dairy Hollow House Soup & Bread: A Country Inn Cookbook. Workman Pub.. பக். 119–120. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-89480-751-0. https://books.google.com/books?id=bWYphItehwwC&pg=PA119. 
  20. De Rivaz, E. (1900). Little French Dinners. New Amsterdam Book Company. பக். 16. https://books.google.com/books?id=KPspAAAAYAAJ&pg=PA16. 
  21. 21.0 21.1 21.2 Cracknell, H.L.; Kaufmann, R.J. (1999). Practical Professional Cookery. Cengage Learning. பக். 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86152-873-5. https://books.google.com/books?id=l2Om8L3diTQC&pg=PA126. 
  22. 22.0 22.1 22.2 Bittman, M. (2011). How to Cook Everything Vegetarian: Simple Meatless Recipes for Great Food. Houghton Mifflin Harcourt. பக். 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-544-18695-8. https://books.google.com/books?id=o6e0z1srROMC&pg=PA129. 
  23. 23.0 23.1 23.2 23.3 23.4 Madison, D. (2013). Vegetable Literacy: Cooking and Gardening with Twelve Families from the Edible Plant Kingdom, with over 300 Deliciously Simple Recipes. Potter/TenSpeed/Harmony. பக். 13–15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-60774-192-3. https://books.google.com/books?id=LipSPRAjNUEC&pg=PA13. 
  24. 24.0 24.1 Steen, C.; Newman, J.M. (2009). 500 Vegan Recipes: An Amazing Variety of Delicious Recipes, From Chilis and Casseroles to Crumbles, Crisps, and Cookies. Fair Winds Press. பக். 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-61673-459-6. https://books.google.com/books?id=cmxr41JjQpYC&pg=PA134. 
  25. 25.0 25.1 Moskowitz, I.C. (2015). Vegan with a Vengeance, 10th Anniversary Edition: Over 150 Delicious, Cheap, Animal-Free Recipes That Rock. Da Capo Press. பக். 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7382-1834-2. https://books.google.com/books?id=3QKCBgAAQBAJ&pg=PA56. பார்த்த நாள்: December 6, 2015. 
  26. Druker, M.; Silverstein, C. (2007). New England Soup Factory Cookbook: More Than 100 Recipes from the Nation's Best Purveyor of Fine Soup. Thomas Nelson. பக். 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4185-7222-8. https://books.google.com/books?id=HackVi72LNIC&pg=PA105. 
  27. Connell, L.O. (2014). American Plate: A Culinary History in 100 Bites. Sourcebooks. பக். 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4926-0304-7. https://books.google.com/books?id=1kPQBAAAQBAJ&pg=PA272. 
  28. (in zh) LOHAS風蔬果料理. 轻松小品. 旗林文化出版社. 2007. பக். 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-986-6881-05-3. https://books.google.com/books?id=NdnlD9GCkhwC&pg=PA47. 
  29. 29.0 29.1 King, N.I.; Waters, A. (2007). My Bombay Kitchen: Traditional and Modern Parsi Home Cooking. University of California Press. பக். 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-93337-8. https://books.google.com/books?id=mvECWRx4SkkC&pg=PA74. 
  30. 30.0 30.1 Webb, R. (2003). Eat to Beat Diabetes: Over 300 Scrumptious Recipes to Help You Enjoy Life and Stay Well. Readers Digest Association. பக். 222. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7621-0486-4. https://books.google.com/books?id=xOiwsviyIwEC&pg=PA222. 
  31. 31.0 31.1 31.2 31.3 The Circle and Success Magazine. Funk & Wagnalls Company. 1908. பக். 117. https://books.google.com/books?id=XC4wAQAAMAAJ&pg=RA1-PA117. 
  32. Hensperger, B.; Kaufmann, J. (2004). Not Your Mother's Slow Cooker Cookbook. NYM Series. Harvard Common Press. பக். 83. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-55832-245-5. https://books.google.com/books?id=cDNRHs_f5P8C&pg=PA83. 
  33. Goodman, M.; Holland, L.; McKinstry, P. (2012). Food to Live By: The Earthbound Farm Organic Cookbook. Workman Publishing Company. பக். 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7611-7629-9. https://books.google.com/books?id=sS43cazfrxsC&pg=PA36. 
  34. 34.0 34.1 Rosso, J.; Lukins, S. (1989). The New Basics Cookbook. Workman Pub.. பக். 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-89480-341-3. https://books.google.com/books?id=NHPQ1mkbp3YC&pg=PA93. 
  35. Bittman, M. (2009). The Best Recipes in the World. Potter/TenSpeed/Harmony. பக். 284. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-307-48217-4. https://books.google.com/books?id=nOE1x-FztIoC&pg=PA284. 
  36. "Carrot and coriander soup". The Telegraph. 2015-12-27. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.
  37. "Carrot and coriander soup". goodtoknow (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.
  38. Soupes: Potages et consommés. Saveurs d'Annie. Editions Artémis. 2006. பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-84416-435-3. https://books.google.com/books?id=L98W8BP3p7IC&pg=PA7.  (பிரெஞ்சு)
  39. L'hirondel, J. (2002). Nitrate and Man: Toxic, Harmless Or Beneficial?. CABI Publishing Series. CABI. பக். 40–41. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85199-566-3. https://books.google.com/books?id=5lRhzMgDHAQC&pg=PA40. 
  40. Davidson, A.; Jaine, T.; Davidson, J.; Saberi, H. (2006). The Oxford Companion to Food. Oxford Companions. OUP Oxford. பக். 531–532. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-101825-1. https://books.google.com/books?id=pZ-1AQAAQBAJ&pg=PA531. பார்த்த நாள்: December 6, 2015. 
  41. Kenney-herbert, A. (2008). Culinary Jottings. Cooking in America Series. Applewood Books. பக். 30–31. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4290-1267-6. https://books.google.com/books?id=9fbOhlqtvdYC&pg=PA30. 
  42. Herbach, A.; Dillon, M. (2004). Eating and Drinking in Paris. Open Road Travel Guides. Open Road Publishing. பக். 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59360-015-0. https://books.google.com/books?id=VdrUUfaRUUIC&q=potage+soup. 
  43. 43.0 43.1 Binney, R. (2012). Wise Words and Country Ways for Cooks. Wise Words. F+W Media. பக். 119. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7153-3392-1. https://books.google.com/books?id=UksX3LwQNM4C&pg=PA119. [தொடர்பிழந்த இணைப்பு]
  44. Worthington, D.R.; Williams, C.; Caruso, M. (2004). Williams-Sonoma Collection: French. Williams Sonoma Collection. Free Press. பக். 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7432-4994-2. https://books.google.com/books?id=u_Gg-GaWBwkC&pg=PA30. "Potage Crécy: Crécy, a town in northern France that produces some of the country's best carrots, ... Smaller, slender but mature carrots, especially those that have been organically grown, have the best flavor. very large or thick carrots often ..." 
  45. Cox, J. (2015). The Organic Cook's Bible: How to Select and Cook the Best Ingredients on the Market. Skyhorse Publishing Company, Incorporated. பக். 199–200. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-5107-0048-2. https://books.google.com/books?id=OBaGCgAAQBAJ&pg=PA199. 
  46. Guides, R. (2011). Rough Guide Phrasebook: French: French. Rough Guide to.... Rough Guides. பக். 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4053-8644-9. https://books.google.com/books?id=F9SDSxOwV3IC&pg=PA244. 
  47. 47.0 47.1 Senn, C.H. (1908). The Menu Book. Food & Cookery Publishing Agency. பக். 83. https://books.google.com/books?id=aNYpAAAAYAAJ&pg=PA83. 
  48. Food & Beverage Service: A Training Manual. Tata McGraw-Hill Education. பக். 298. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-259-08292-4. https://books.google.com/books?id=imkzrdLMG60C&pg=PA298. 
  49. "Professor Moro's carrot soup (Article in German)". Archived from the original on 2018-07-07. பார்க்கப்பட்ட நாள் 2019-10-11.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Carrot soup
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரட்_சூப்&oldid=3707911" இலிருந்து மீள்விக்கப்பட்டது