பைரோபேனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைரோபேனைட்டு
Pyrophanite
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுMnTiO3
இனங்காணல்
நிறம்அடர் இரத்தச் சிவப்பு, கரும்பச்சை
படிக இயல்புஅரிதாக அறுகோண தகடுகளின் மீது ரோசா இதழ்களாக, மணிகள் மற்றும் செதில்களாக, பிராங்க்லினைட்டு மற்றும் சிபைனெல் கனிமங்களில் திண்மக் கரைசலாக
படிக அமைப்புமுக்கோணம்
பிளப்பு{0221}இல் சரிபிளவு
முறிவுசங்குருவம்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை5–6
மிளிர்வுதுணை உலோகம்
கீற்றுவண்ணம்காவி மஞ்சள்
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும் மற்றும் புகாது
ஒப்படர்த்தி4.537 அளக்கப்பட்ட்து
ஒளியியல் பண்புகள்ஒற்றை அச்சு (-)
ஒளிவிலகல் எண்nω = 2.481 nε = 2.210
இரட்டை ஒளிவிலகல்δ = 0.271
மேற்கோள்கள்[1][2][3]

பைரோபேனைட்டு (Pyrophanite) என்பது MnTiO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு மாங்கனீசு தைட்டானியம் ஆக்சைடு கனிம்மாகும்.. இது இல்மனைட்டு வகை கனிமக் குழுவில் ஓர் உறுப்பினர் ஆகும். அடர் சிவப்பு நிறம் முதல் கரும் பச்சை நிறம் வரையிலான வண்ணங்களில் காணப்படும் இக்கனிமம் முக்கோண அமைப்பில் படிகமாகிறது.

சுவீடன் நாட்டில் 1890 ஆம் ஆண்டு பிலிப்சிடாடு நகராட்சியிலுள்ள ஆர்சிடிகன் சுரங்கத்தில் பைரோபேனைட்டு முதன் முதலில் கண்டறியப்பட்டது. அடர் சிவப்பாக நெருப்பைப் போல தோற்றமளிக்கிறது என்பதை மையமாக வைத்து கிரேக்க மொழியில் இதற்கு பைரோபேனைட்டு எனப் பெயரிடப்பட்டுள்ளது[2].

பிரதானமாக மாங்கனீசு படிவுகளில் வளருருமாற்றத்திற்கு உட்பட்டு பின்னர் இது தோன்றுகிறது. கிரானைட்டு, ஆம்பிபோலைட்டு, செர்பண்டினைட்டு போன்ற படிவுகளிலும் சில இடங்களில் இது காணப்படுகிறது. இல்மனைட்டு, கால்சைட்டு, கெயிகிலைட்டு, ஏமடைட்டு, சிபைனெல், காக்னைட்டு, குரோமைட்டு, மேக்னடைட்டும் கானோபைலைட்டு, மேங்கனோபைலைட்டு, எண்டிரிக்சைட்டு, கார்னெட் போன்ற கனிமங்களுடன் சேர்ந்து பைரோபேனைட்டு கனிமம் காணப்படுகிறது<ref name=HBM/.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரோபேனைட்டு&oldid=2810055" இலிருந்து மீள்விக்கப்பட்டது