தைட்டானியம் பெர்குளோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைட்டானியம் பெர்குளோரேட்டு
Titanium perchlorate
திண்ம தைட்டானியம் பெர்குளோரேட்டு
இனங்காட்டிகள்
60580-20-3[1]
13498-15-2
InChI
  • InChI=1S/4ClHO4.Ti/c4*2-1(3,4)5;/h4*(H,2,3,4,5);/q;;;;+4/p-4
    Key: SOCDLWOJPVKBHF-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Ti](O[Cl](=O)(=O)=O)(O[Cl](=O)(=O)=O)(O[Cl](=O)(=O)=O)O[Cl](=O)(=O)=O
பண்புகள்
Ti(ClO4)4
வாய்ப்பாட்டு எடை 445.65 g·mol−1
தோற்றம் வெண்மை படிகங்கங்கள்,
நீருறிஞ்சும்
அடர்த்தி 2.49 கி/செ.மீ3 (நீரிலி)
உருகுநிலை 85 °C (185 °F; 358 K) (நீரிலி) இலேசான சிதைவு
கொதிநிலை சிதைகிறது
அதிகம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தைட்டானியம் நைட்ரேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சிர்க்கோனியம் பெர்குளோரேட்டு]]
ஆபினியம் பெர்குளோரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தைட்டானியம் பெர்குளோரேட்டு (Titanium perchlorate) என்பது Ti(ClO4)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தைட்டானியமும் பெர்குளோரேட்டு அயனியும் சேர்ந்து இம்மூலக்கூற்றுச் சேர்மம் உருவாகிறது. நீரற்ற தைட்டானியம் பெர்குளோரேட்டு 130 பாகை செல்சியசு வெப்பநிலையில் வெடித்தலுடன் சிதைவடைகிறது. 85 பாகை செல்சியசு வெப்பநிலையில் இலேசான சிதைதலுடன் உருகுகிறது. 70 பாகை செல்சியசு வெப்பநிலையில் பதங்கமாதலுக்கும் 120 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஆவியாதலுக்கும் உட்படுகிறது. 2.35 என்ற அடர்த்தி மதிப்பைக் கொண்டுள்ளது. தைட்டானியம் பெர்குளோரேட்டு எளிதில் ஆவியாகக்கூடிய ஒரு சேர்மமாகும். இச்சேர்மம் சிதைவடையும்போது TiO2, ClO2 ஆக்சிசன் மற்றும் TiO(ClO4)2 சேர்மம் போன்றவை உருவாகின்றன[2].

Ti(ClO4)4 → TiO2 + 4ClO2 + 3O2 ΔH=+6 கி.கலோரி/மோல்.[2]

பண்புகள்[தொகு]

பெர்குளோரேட்டு குழுக்கள் இரண்டு ஆக்சிசன் அணுக்கள் வழியாக தைட்டானியத்துடன் பிணைந்த இருபற் ஈந்தணைவு பிணைப்பை தைட்டானியம் பெர்குளோரேட்டு கொண்டுள்ளது[2]. எனவே இம்மூலக்கூறு டெட்ராகிசு(பெர்குளோரேட்டோ- O,O') தைட்டானியம்(IV) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது[3].

திண்மநிலையில் a=12.451 b=7.814 c=12.826 Å α=108.13 என்ற அலகுசெல் அளபுருக்களுடன் இது தெளிவான நிறமுள்ள ஒற்றை சரிவச்சு படிகங்களாக உருவாகிறது. 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் அலகு செல்களின் கன அளவு மதிப்பு 1186 Å3 ஆகும். ஒரு அலகுக்கூட்டில் நான்கு மூலக்கூறுகள் காணப்படுகின்றன[1].

பெட்ரோலேட்டம், நைட்ரோமெத்தேன், டைமெத்தில்பார்ம்மைடு போன்ற சேர்மங்களுடன் தைட்டானியம் பெர்குளோரேட்டு வினைபுரிகிறது. 25 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் இது கார்பன் டெட்ராகுளோரைடுடன் வினையில் ஈடுபடுகிறது[2].

டைமெத்தில் சல்பாக்சைடு, டையாக்சேன், பிரிடின்–என்–ஆக்சைடு, குயினோலைன்–என்-ஆக்சைடு மற்றும் நீருடன் கூடிய சால்வேட்டு அணைவுகளாகத் தைட்டானைல் பெர்குளோரேட்டு காணப்படுகிறது[2].

தயாரிப்பு[தொகு]

தைட்டானியம் டெட்ராகுளோரைடுடன் இருகுளோரின் ஏழாக்சைடு|டைகுளோரின் எப்டாக்சைடில்]] செறிவூட்டப்பட்ட பெர்குளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் தைட்டானியம் பெர்குளோரேட்டைத் தயாரிக்கலாம். தைட்டானியம் டெட்ராகுளோரைடுடன் டைகுளோரின் எக்சாக்சைடைச்[2] சேர்த்தும் இதை தயாரிக்க முடியும். வெற்றிடத்தில் 55 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு இதை சூடுபடுத்தினால் Cl2O6 குழுவைக் கொண்ட அணைவுச் சேர்மமாக உருவாகிறது. ஆவிநிலையிலிருந்து இது பதங்கமாகி தூய்மையான நீரற்ற படிகமாகிறது[1].

தொடர்புடைய பிற சேர்மங்கள்[தொகு]

டைசீசியம் எக்சாபெர்குளோரேட்டு உப்பில் In the salt dicaesium hexaperchloratotitanate, (Cs2Ti(ClO4)6) பெர்குளோரேட்டு குழுக்கள் ஒற்றை ஆக்சிசன் வழியாக தைட்டானியத்துடன் பிணைந்துள்ளன[4].. தைட்டானியம் அணுவுடன் பிணைந்துள்ள பைனால் [5] மற்றும் குளுக்கோனிக் அமிலம் போன்ற மற்ற ஈந்தணைவிகளுடன் சேர்ந்து தைட்டானியம் பெர்குளோரேட்டு அணைவுச் சேர்மங்களைக் கொடுக்கிறது[6]. தைட்டானியத்தின் பல்பகுதி ஆக்சிகுளோர்பெர்குளோரேட்டோ சேர்மமான Ti6O4Clx(ClO4)16−x சேர்மம் மிகையான TiCl4 மற்றும் டைகுளோரின் எக்சாக்சைடு ஆகியவற்றின் சேர்க்கையால் உருவாகிறது. இளமஞ்சள் முதல் அடர்மஞ்சள் வரையிலான நிறமும் வேறுபட்ட இயைபும் கொண்டதாக இச்சேர்மம் காணப்படுகிறது[7].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Fourati, Mohieddine; Chaabouni, Moncef; Belin, Claude Henri; Charbonnel, Monique; Pascal, Jean Louis; Potier, Jacqueline (April 1986). "A strongly chelating bidentate perchlorate. New synthesis route and crystal structure determination of titanium(4+) perchlorate". Inorganic Chemistry 25 (9): 1386–1390. doi:10.1021/ic00229a019. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Babaeva, V. P.; Rosolovskii, V. (1974). "Volatile titanium perchlorate". Bulletin of the Academy of Sciences of the USSR Division of Chemical Science 23 (11): 2330–2334. doi:10.1007/BF00922105. பன்னாட்டுத் தர தொடர் எண்:0568-5230. 
  3. Macintyre, Jane E. (1992) (in en). Dictionary of Inorganic Compounds. CRC Press. பக். 2963. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780412301209. https://books.google.com.au/books?id=9eJvoNCSCRMC&pg=PA2963. 
  4. Babaeva, V. P.; Rosolovskii, V. Ya. (November 1975). "Production of cesium hexaperchloratotitanate by the reaction of titanium perchlorate with cesium perchlorate". Bulletin of the Academy of Sciences of the USSR Division of Chemical Science 24 (11): 2278–2281. doi:10.1007/BF00921631. 
  5. Mikami, Koichi; Sawa, Eiji; Terada, Masahiro (January 1991). "Asymmetric catalysis by chiral titanium perchlorate for carbonyl-ene cyclization". Tetrahedron: Asymmetry 2 (12): 1403–1412. doi:10.1016/S0957-4166(00)80036-1. 
  6. Guthrie, R. D. (1970) (in en). Carbohydrate Chemistry. 3. London: Royal Society of Chemistry. பக். 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780851860220. https://books.google.com.au/books?id=d1SUAE2qD80C&pg=PA144. 
  7. Fourati, M.; Chaabouni, M.; Pascal, J.L.; Potter, J. (March 1986). "Synthesis and vibrational analysis of new anhydrous oxochloroperchlorato complexes of titanium IV". Journal of Molecular Structure 143: 147–150. doi:10.1016/0022-2860(86)85225-5. Bibcode: 1986JMoSt.143..147F.