ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 11°18′51″N 77°33′05″E / 11.3143°N 77.5514°E / 11.3143; 77.5514
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி
ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி is located in தமிழ் நாடு
ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி
ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி
குறிக்கோள்"Service Excellence Character"
நிறுவப்பட்டது1996
வகைதனியார்
அமைவுஇந்தியா, தமிழ்நாடு, ஈரோடு, பெருந்துறை
(11°18′51″N 77°33′05″E / 11.3143°N 77.5514°E / 11.3143; 77.5514)
இணையதளம்www.erode-sengunthar.ac.in

ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி (Erode Sengunthar Engineering College)

துவக்கம்[தொகு]

இந்தக் கல்லூரி 1996 இல் ஈரோடு செங்குந்தர் கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. இது ஐஎஸ்ஓ 9001: 2008 சான்றிதழைக் கொண்டுள்ளது மேலும் இது தேசிய அங்கீகார வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது . இக்கல்லூரியானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இங்கு வழங்கப்படும் அனைத்து இளநிலைப் படிப்புகளும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் நிரந்தரமாக இணைவுபெற்றுள்ளன. இந்த கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை (என்ஏஏசி) பெங்களூருவினால் உயர்தரமானது என்று குறிக்கத்தக்க 'ஏ' தரச்சான்றை பெற்றது .

துறைகள் மற்றும் படிப்புகள்[தொகு]

கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை[தொகு]

  • பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (நான்கு ஆண்டுகள்)
  • எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (இரண்டு ஆண்டுகள்)
  • எம்.எஸ்.சி. கணினி அறிவியல்

இயந்திரப் பொறியியல் துறை[தொகு]

  • பி.இ. இயந்திரப் பொறியியல் (நான்கு ஆண்டுகள்)
  • எம்.இ. உற்பத்திப் பொறியியல் (இரண்டு ஆண்டுகள்)

மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை[தொகு]

  • பி.இ. மின் மற்றும் மின்னணு பொறியியல் (நான்கு ஆண்டுகள்)

மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை[தொகு]

  • பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல் (நான்கு ஆண்டுகள்)

மின்னணுவியல் மற்றும் கருவிப் பொறியியல் துறை[தொகு]

  • பி.இ. மின்னணுவியல் மற்றும் கருவிப் பொறியியல் (நான்கு ஆண்டுகள்)

சாதனைகள்[தொகு]

  • 2009 இல் பல்கலைக்கழகத் தரவரிசையில் இரண்டாம் இடம்.
  • 2010 இல் பல்கலைக்கழகத் தரவரிசையில் முதல் இடம்.

கட்டிடப் பொறியியல் துறை[தொகு]

  • பி.இ. கட்டிடப் பொறியியல்

வேதியியல் பொறியியல் துறை[தொகு]

  • பி.டெக். வேதியியல் பொறியியல் (நான்கு ஆண்டுகள்)

வணிக மேலாண்மைத் துறை[தொகு]

  • எம்.பி.ஏ. (முதுநிலை வணிக மேலாண்மை)

கணினி பயன்பாடுகள் துறை[தொகு]

  • எம்.சி.ஏ. (முதுநிலை கணினி பயன்பாடுகள்) (மூன்று ஆண்டுகள்).

வசதிகள்[தொகு]

நூலகம்[தொகு]

இக்கல்லூரியில் 30,000 தொகுதிகள், 8,600 தலைப்புகள், 148 இந்திய இதழ்கள் மற்றும் 93 சர்வதேச பத்திரிகைகள், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கூட்டமைப்பின் 801 ஆன்லைன் இதழ்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு மைய நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் 1,800 க்கும் மேற்பட்ட குறுந்தகடுகள் மற்றும் நெகிழ்வட்டுகளின் தொகுப்பு உள்ளது. பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு, வெளிநாட்டு மொழியாக ஆங்கிலத் தேர்வு, ஜி.ஆர்.இ, மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு, இராணுவ சேவை, இந்தியக் குடியியல் பணிகள் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கான புத்தகங்கள் குறிப்பு, வெளியீடுகள் உள்ளன.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]