சி. மாதவன் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The Right Honourable
சர் சித்தூர் மாதவன் நாயர்
Order of the Indian Empire
சென்னை மாகாண அரசு தலைமை வழக்கறிஞர்
பதவியில்
1923–1924
முன்னையவர்சே. ப. இராமசுவாமி
பின்னவர்T. R. Venkatarama Sastri
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1879-01-24)24 சனவரி 1879
பிரித்தானிய இந்தியா, சென்னை மாகாணம், மங்கரா
இறப்பு5 மார்ச்சு 1970(1970-03-05) (அகவை 91)
இந்தியா, சென்னை
துணைவர்(s)லேடி மாதவன் நாயர், பாலட் பருகுட்டி அம்மா
வேலைவழக்கறிஞர்

சர் சித்தூர் மாதவன் நாயர் (C. Madhavan Nair) (24 சனவரி 1879 - 3 மார்ச் 1970) என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞர் ஆவார். இவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், அந்தரங்கமான சபையின் நீதித்துறை குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர் சென்னை மாகாணத்தின், மலபார் மாவட்டத்தில், (இப்போது பாலக்காடு மாவட்டம், கேரளம் ) பிறந்தார். இவர் சி சங்கரன் நாயரின் மருமகனாவார். மாதவன் நாயர் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் கல்வி பயின்றார். மேலும் தன் மெட்ரிகுலேசன் படிப்பை சென்னை பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். இவர் சென்னை கிறித்துவக் கல்லூரி மற்றும் சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதன்பிறகு தன் முதுகலைப் படிப்பை இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் முடித்து மிடில் டெம்பிலில் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார்.

தொழில்[தொகு]

மாதவன் நாயர் 1904 இல் மதராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். மேலும் மெட்ராஸ் லா ஜர்னல் பத்திரிக்கையின் நிருபராகவும் பணியாற்றினார். இவர் 1919 முதல் 1923 வரை அரசாங்க பிளேடராகவும், 1923-24ல் மதராஸ் மாகாண அரசு தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1924 ஆம் ஆண்டில், இவர் தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது இவர் தன் அரசு தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. பின்னர் அப்பதவிக்கு டி. ஆர். வெங்கடராம சாஸ்திரி பொறுப்பேற்றார். 1927 இல் நிரந்தர நீதிபதியாக மாதவன் நாயர் நியமிக்கப்பட்டார். 1939 சனவரி 2, அன்று ஓய்வு பெறும் வரை மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றினார். 1941 ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சிலுக்கு மாதவன் நாயர் நியமிக்கப்பட்டார்.

குடும்பம்[தொகு]

இவர் சர் சி. சங்கரன் நாயரின் மகளும் இவரது உறவினருமான பாலாட் பருகுட்டி அம்மாவை (பின்னர் லேடி மாதவன் நாயர்) மணந்தார். இந்த இணையருக்கு பிரிகேடியர் பாலாட் சங்கரன் நாயர், பாலாட் மாதவன் நாயர் என்ற இரு மகன்களும், பாலாட் நாராயணி மகாதவா மேனன் என்ற ஒரு மகளும் இருந்தனர். மாதவன் நாயர் தம்பதியினர் மதராசின் மகாலிங்கபுரம் அருகே உள்ள மாதவன் நாயர் காலனியில் உள்ள லின்வுட் என்ற இல்லத்தில் வசித்து வந்தனர். மாதவன் நாயர் காலனியில் உள்ள அய்யப்பா கோயிலின் பிரதான பக்கதராக லேடி மாதவன் நாயர் இருந்தார். இவர்களின் மகளான நாராயணி பரக்கத் மாதவ மேனன் ஐ. சி. எஃசை மணந்தார், பார்வதி ராம்குமாரன் மற்றும் சானகி நாயர் ஆகிய இரு குழந்தைகளையும் பெற்றார். சர் சி. எம். நாயரின் மகன் பாலாட் மாதவன் நாயர் பரக்கட் ரெமா உன்னியை மணந்தார், அவருக்கு சிரீலதா, மாதவன் மற்றும் உசா என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._மாதவன்_நாயர்&oldid=3926623" இலிருந்து மீள்விக்கப்பட்டது