கலிபோர்னியம் சேர்மங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலிபோர்னியம் சேர்மங்கள் (Compounds of californium) சில மட்டுமே உருவாக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளன [1]. நீரிய கரைசல்களில் கலிபோர்னியம் (III) நேர்மின் அயனி மட்டுமே நிலைப்புத்தன்மை கொண்டதாக உள்ளது [2]. ஆக்சிசனேற்ற நிலை IV இல் ஒரு வலிமையான ஆக்சிசனேற்ற முகவர், ஆக்சிசனேற்ற நிலை II இல் ஒரு வலிமையான ஒடுக்கும் முகவர் என்ற இரு ஆக்சிசனேற்ற நிலைகளில் கலிபோர்னியம் காணப்படுகிறது[3]. குளோரைடு, நைட்ரேட்டு, பெர்குளோரேட்டு, சல்பேட்டு போன்ற நீரில் கரையக்கூடிய உப்புகளை கலிபோர்னியம் உருவாக்குகிறது. மேலும், புளோரைடு, ஆக்சலேட்டு அல்லது ஐதராக்சைடு போன்ற வீழ்படிவுகளாகவும் கலிபோர்னியம் உருவாகிறது[4]. தனிமம் கிடைப்பதில் உள்ள சிக்கல்களை நீக்க முடிந்தால், CfBr2 மற்றும் CfI2 ஆகியவை நிலையான சேர்மங்களாக இருக்கும்[5].

பச்சை கலந்த மஞ்சள் நிற கலிபோர்னியம்(III) ஆக்சைடு (Cf2O3), அடர் பச்சை நிற கலிபோர்னியம்(III) புளோரைடு (CfF3), எலுமிச்சை மஞ்சள் நிற கலிபோர்னியம்(III) அயோடைடு (CfI3) போன்ற சேர்மங்கள் கலிபோர்னியம் ஆக்சிசனேற்ற நிலை(III) இல் காணப்படும் சேர்மங்களாகும் [3]. சல்பைடும் மெட்டலோசீனும் இதர ஆக்சிசனேற்ற நிலை(III) இல் உள்ள சேர்மங்கள் ஆகும் [6]. கரும் பழுப்பு நிற கலிபோர்னியம்(IV) ஆக்சைடும் (CfO2), பச்சை நிற கலிபோர்னியம்(IV) புளோரைடும் ஆக்சிசனேற்ற நிலை(IV) இல் கலிபோர்னியம் காணப்படும் சேர்மங்களாகும், மஞ்சள் நிற கலிபோர்னியம்(II) புரோமைடும் (CfBr2), அடர் ஊதா நிறத்திலுள்ள கலிபோர்னியம்(II) அயோடைடும் (CfI2) ஆக்சிசனேற்ற நிலை(II) இல் கலிபோர்னியம் காணப்படும் சேர்மங்களாகும் [3],

சேர்மங்கள்[தொகு]

கலிபோர்னியம்(IV) ஆக்சைடு (CfO2) கரும் பழுப்பு நிறத்தில் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. அலகு செல்களுக்கு இடையில் 531.0 ± 0.2 பைக்கோமீட்டர் அளவு இடைவெளி கொண்ட கனசதுர படிகக் கட்டமைப்பை இத்திண்மம் ஏற்கிறது[7]. கலிபோர்னியம்(III) ஆக்சைடு படிகங்கள் பொதுவாக உடல்மைய கனசதுரக் கட்டமைப்பு கொண்டவையாக உள்ளன. இவற்றை 1400 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கினால் ஒற்றை சரிவச்சு கட்டமைப்பு நிலைக்கு மாற்ற இயலும். 1750 பாகை செல்சியசு வெப்பநிலையில் இவை உருகும்[7].

கலிபோர்னியம்(III) குளோரைடு (CfCl3) மரகதப்பச்சை நிறத்தில் அறுகோண வடிவமைப்பில் காணப்படுகிறது. கலிபோர்னியம்(III) ஆக்சைடு (Cf2O3) சேர்மத்தை ஐதரோகுளோரிக் அமிலத்துடன் சேர்த்து 500 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் கலிபோர்னியம்(III) குளோரைடை தயாரிக்கலாம் [8]. மஞ்சள் ஆரஞ்சு நிறத்திலுள்ள கலிபோர்னியம்(III) அயோடைடு (CfI3) தயாரிக்கவும் இதிலிருந்து அடர் ஊதா CfI2 தயாரிக்கவும் CfCl3 பயன்படுகிறது [9]. கலிபோர்னியம்(III) புளோரைடு (CfF3) மஞ்சள் பச்சை நிறத்தில் படிகக் கட்டமைப்பு சீரொழுங்கில் திண்மமாகக் காணப்படுகிறது. அறை வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தினால் இச்சேர்மம் நேர்சாய் சதுர நிலையிலிருந்து முக்கோணவமைப்புக்கு படிப்படியாக மாற்றமடைகிறது[10]. கலிபோர்னியம்(IV) புளோரைடு (CfF4) அடர் பச்சை நிறத்தில் ஒற்றை சரிவச்சு படிகக் கட்டமைப்பில் காணப்படுகிறது[11].

அறை வெப்பநிலையில் கலிபோர்னியம்(II) அயோடைடு (CfI2) செவ்வூதா நிறத்தில் சாய்சதுர கட்டமைப்புடன் நிலைப்புத்தன்மை கொண்ட திண்மமாகவும், அறுகோணவமைப்பில் நிலைப்புத்தன்மையற்றதாகவும் காணப்படுகிறது. எலுமிச்சை மஞ்சள் நிறமான கலிபோர்னியம்(III) அயோடைடும் சாய்சதுர கட்டமைப்புடன் காணப்படுகிறது. ~800 °செல்சியசு வெப்பநிலையில் இது பதங்கமாகிறது[12]. கலிபோர்னியம்(III) புளோரைடை உயர்வெப்ப நிலையில் நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தினால் கலிபோர்னியம்(III) ஆக்சிபுளோரைடைத் தயாரிக்கலாம் [13]. கலிபோர்னியம்(III) குளோரைடு நீரேற்றை 280-320 செல்சியசு வெப்பநிலையில் நீராற்பகுத்து கலிபோர்னியம்(III) ஆக்சிகுளோரைடை தயாரிக்கலாம் [14].

கலிபோர்னியத்தின் சல்பேட்டு உப்பை 1200 செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி பின்னர் 500 செல்சியசு வெப்பநிலையில் ஐதரசனுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் கலிபோர்னியம் செசுகியுவாக்சைடு (Cf2O3) உருவாகிறது [8]. கலிபோர்னியம் ஐதராக்சைடும் (Cf(OH)3) கலிபோர்னியம் டிரையாக்சைடும் CfF3 சிறிதளவு கரைகின்றன [8].

முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கலிபோர்னியம் சேர்ம்ம் கலிபோர்னியம்(III) ஆக்சிகுளோரைடு (CfOCl) ஆகும்[15]. கலிபோர்னியம்(III) பாலிபோரேட்டு என்ற சேர்மம் அசாதாரணமானது ஆகும். இதில் போரேட்டுடன் கலிபோர்னியம் ஈதல் பிணைப்பு மூலம் இணைக்கப்பட்டுள்ளது [16].

கரிம உலோகச் சேர்மங்களைப் பொறுத்தவரையில் கலிபோர்னியமே இரண்டாவது கன உலோகமாக அறியப்படுகிறது. Cp2Be மற்றும் CfCl3 சேர்மங்களை நுண்ணளவுகளில் வினைபுரியச் செய்து Cp3Cf (Cp = C5H5) சேர்மத்தை தயாரிக்கலாம். எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகள் மூலம் இது வரையறுக்கப்படுகிறது [17]

மேற்கோள்கள்[தொகு]

  1. Krebs, Robert (2006). The History and Use of our Earth's Chemical Elements: A Reference Guide. Westport, Connecticut: Greenwood Publishing Group. பக். 327–328. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-33438-2. https://archive.org/details/historyuseofoure0000kreb. 
  2. CRC 2006, ப. 4-8.
  3. 3.0 3.1 3.2 Jakubke 1994, ப. 166.
  4. Seaborg 2004.
  5. Greenwood 1997, ப. 1272.
  6. Cotton 1999, ப. 1163.
  7. 7.0 7.1 Baybarz, R. D.; Haire, R. G.; Fahey, J. A (1972). "On the Californium Oxide System". Inorganic and Nuclear Chemistry 34 (2): 557–565. doi:10.1016/0022-1902(72)80435-4. 
  8. 8.0 8.1 8.2 Cunningham 1968, ப. 105.
  9. Cotton, Simon (2006). Lanthanide and Actinide Chemistry. West Sussex, England: John Wiley & Sons. பக். 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-01006-8. https://books.google.com/books?id=SvAbtU6XvzgC&lpg=PP1&dq=Lanthanide%20and%20Actinide%20Chemistry&pg=PP1#v=onepage&q. 
  10. Stevenson, J. N.; Peterson, J. R. (1973). "The Trigonal and Orthorhombic Crystal Structures of CfF3 and their Temperature Relationship". Inorganic and Nuclear Chemistry 35 (10): 3481–3486. doi:10.1016/0022-1902(73)80356-2. 
  11. Chang, C-T. P.; Haire, R. G.; Nave, S. E. (1990). "Magnetic Susceptibility of Californium Fluorides". Physical Review B 41 (13): 9045–9048. doi:10.1103/PhysRevB.41.9045. Bibcode: 1990PhRvB..41.9045C. https://zenodo.org/record/1233719/files/article.pdf. 
  12. Macintyre, J. E.; Daniel, F. M.; Stirling, V. M. (1992). Dictionary of inorganic compounds. London: Chapman and Hall, CRC Press. பக். 2826. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-412-30120-9. https://archive.org/details/dictionaryofinor0004unse. 
  13. Peterson, J. R.; Burns, John H. (1968). "Preparation and Crystal Structure of Californium Oxyfluoride, CfOF". Inorganic and Nuclear Chemistry 30 (11): 2955–2958. doi:10.1016/0022-1902(68)80155-1. 
  14. Copeland, J. C.; Cunningham, B. B. (1969). "Crystallography of the Compounds of Californium. II. Crystal Structure and Lattice Parameters of Californium Oxychloride and Californium Sesquioxide". Inorganic and Nuclear Chemistry 31 (3): 733–740. doi:10.1016/0022-1902(69)80020-5. 
  15. Seaborg, Glenn T. (1963). Man-Made Transuranium Elements. Prentice-Hall. https://archive.org/details/manmadetransuran0000glee. 
  16. "Unusual structure, bonding, and properties may provide a new possibility for a californium borate". 1 June 2015. பார்க்கப்பட்ட நாள் 29 July 2015.
  17. Laubereau, Peter G.; Burns, John H. (1970). "Microchemical preparation of tricyclopentadienyl compounds of berkelium, californium, and some lanthanide elements". Inorganic Chemistry 9 (5): 1091–1095. doi:10.1021/ic50087a018. 

.