தூய இருதய ஆண்டவர் பேராலயம், ஓசூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூய இருதய ஆண்டவர் பேராலயம் , ஓசூர்

தூய இருதய ஆண்டவர் பேராலயம் என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர், தேன்கனிக்கோட்டை சாலையில், ஓசூர் ரயில் நிலையம் அருகில் அமைத்துள்ள ஒரு கிருத்துவ ஆலயம் ஆகும். இந்த பேராலயம் 2012, ஆகத்து 20 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இப்பேரலயமானது அனைத்து மக்களின் பொருளாதார உதவினாலும், உடல் உழைப்பினாலும் கட்டிமுடிக்கப்பட்டது. இவ்வாலயதின் அடித்தளத்தில் அனைத்து புனித தலங்களிருந்து மண், தண்ணீர், கற்கள் (கங்கை நதி, யோர்ன் நதி , நைல் நதி , எருசலேம் மண், வேளாங்கண்ணி மண் , இமாலய மலைக் கற்கள்) போன்றவை இடப்பட்டன. இவ்வாலயதில் இரண்டு சிற்றாலயங்கள் ( கெபி) உள்ளன. அவை வேளாங்கண்ணி மாதா, புனித அந்தோனியார் சிற்றாலயங்களாகும். இங்கு அனைத்து சமய மக்களும் வந்து வழிபாடு செய்கின்றனர்.