எஸ். ஏ. எம். உசேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ஏ. எம். உசைன் (S.A.M. Hussain) (ஆயிரம் விளக்கு உசேன் என்றும் அறியப்பட்டவர்) ஓர் தமிழக அரசியல்வாதி, இவர் 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கழக தலைமை நிலைய செயலாளர் போன்ற பொறுப்புகளை வகித்தவர்.[1]

இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒலிமுகமுது பேட்டையில் பிறந்தவர். இவர் சிறுவனாக இருந்தபோதே இவரது குடும்பம் சென்னை, ஆயிரம் விளக்கு பகுதிக்கு குடியேறியது. சிறுவயதிலேயே திமுகவில் இணைந்து ஆயிரம் விளக்குப் பகுதி வட்டச் செயலாளராக ஆனார். அதன்பிறகு ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர், கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார். இந்நிலையில் உசேன் தன் 2019 ஆகத்து 6 அன்று தன் 80ஆவது வயதில் மூப்பின் காரணமாக காலமானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "திமுக முன்னாள் எம்எல்ஏ உசேன் மறைவு: மு.க.ஸ்டாலின் அஞ்சலி". செய்தி. தினமணி. 6 ஆகத்து 2019. பார்க்கப்பட்ட நாள் 7 ஆகத்து 2019.
  2. "திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் காலமானார்!". செய்தி. ஒன் இந்தியா. 6 ஆகத்து 2019. பார்க்கப்பட்ட நாள் 7 ஆகத்து 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._எம்._உசேன்&oldid=3576767" இலிருந்து மீள்விக்கப்பட்டது