பேச்சு:நிறுத்தக்குறிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிறுத்தக் குறிகளா நிறுத்தற் குறிகளா? −முன்நிற்கும் கருத்து Fahimrazick (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பாடநூல்களில் இரண்டும் பயன்படுத்துகின்றன. நிறுத்தம், நிறுத்தல் ஆகிய சொற்களுக்கிடையில் பெரிய வேறுபாடுகளில்லை. இரண்டுஞ் சரியே என்பது என் கருத்து. --மதனாகரன் (பேச்சு) 14:25, 16 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
தற்குறி என வரவேண்டாமே என நினைத்தாரோ பாஃகிம் ? :) இரண்டும் சரியே என்பதே என் எண்ணமும்.--செல்வா (பேச்சு) 14:41, 16 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

இக்கட்டுரை தமிழிலுள்ள நிறுத்தக்குறிகள் பற்றியதா? ஆம் எனின் விக்கியிணைப்பை நீக்கி, நிறுத்தக்குறிகள் என பொதுவான கட்டுரையும் எழுதலாம். இல்லை எனின் நிறுத்தக்குறிகள் என்று இருக்கலாம். (தமிழ் நடை) என்பது தேவையில்லை. இதுபோன்று பல கட்டுரைகள் உள்ளன. --AntanO (பேச்சு) 03:03, 5 சூன் 2019 (UTC)[பதிலளி]

(தமிழ் நடை) என்ற பின்னொட்டை இவ்வகைக் கட்டுரைகளிலிருந்து நீக்கிவிடலாம். ஏதேனும் சொல் பலபொருள்பட இருந்தால் (மொழிநடை) என்று குறிப்பிடலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 05:03, 5 சூன் 2019 (UTC)[பதிலளி]