பேச்சு:அமெரிக்க ஐக்கிய நாடுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஐக்கிய அமெரிக்க குடியரசு என்பது சரியான பெயரல்ல. நாட்டின் பெயர் "United States of America". "United American Republic" அல்ல. ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்பது தான் சரியான பெயர். Mayooranathan 17:31, 23 பெப்ரவரி 2006 (UTC)

ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்பதும் அவ்வளவு சரியானதாக தெரியவில்லையே. states நாடுகள் என்று மொழிபெயர்ப்பது இங்கு பொருந்தாது. Republic of United States of America என்பதை ஐக்கிய அமெரிக்க குடியரசு என்பது பொருத்தம் போலவும் தெரிகின்றது. எனினும், எந்த சொற்பதம் பொது பாவனையில் இருக்கின்றதோ அதைப் பயன்படுத்தலாம். --Natkeeran 18:19, 9 மே 2006 (UTC)[பதிலளி]

இது Republic of United States of America என்று வழங்குவதாகத் தெரியவில்லை. United States of America என்பதுதான் அதிகாரபூர்வப் பெயர். (இங்கே பார்க்கவும்). மேலும் தமிழில் ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்பதுதான் பொதுவான வழக்கு. Mayooranathan 18:58, 9 மே 2006 (UTC)[பதிலளி]

I too agree with Mayooranathan's view -- சிவகுமார் 19:11, 9 மே 2006 (UTC)[பதிலளி]
அப்படியானால் சரி. நன்றி. --Natkeeran 19:16, 9 மே 2006 (UTC)[பதிலளி]
I dont agree with it. ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் sounds like a better translation to me, considering that the word 'state' is used not in the sense of a 'nation state' but in the term of a division in a country. A 'nation state' can be translated as நாடுகள், but a when the word 'state' is used to describe a division within a country, it should be called மாநிலங்கள். Hence, the correct name for the country should be ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள். -- Vikram. 122.167.116.49 18:57, 25 பெப்ரவரி 2008 (UTC)

I suggest this essay to be merged with ஐக்கிய அமெரிக்கா. --Natkeeran 19:23, 9 மே 2006 (UTC)[பதிலளி]


அமெரிக்க நாடுகள் ஒன்றியம் என்பது பொது வழக்கில் உள்ளது. அமெரிக்க ஒன்றிய நாடுகள் அல்லது அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் என்றும் கூறலாம். எடுத்துக்காட்டாக இணையத்திலே மணி மணிவண்ணன் போன்ற பலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பன்படுத்தி வந்துள்ளனர். United Nations என்பதை நாடுகளின் ஒன்றியம் மற்றும் அனைத்து நாடுகளின் ஒன்றியம் என்ற சொல்வழக்குகள் பரவலாகப் பயன்படுவது. United, Union என்னும் சொற்களுக்கு ஒன்றியம் என்ற சொல்லைத் தேர்ந்தொத்தச் சொல்லாக தமிழர்கள் வழங்கி வருகிறார்கள். --C.R.Selvakumar 23:44, 4 ஜூன் 2006 (UTC)செல்வா

அப்படியானால் பிற பயனர்களுடன் அலசி ஒரு புரிந்துணர்வு எட்ட வேண்டும். --Natkeeran 23:53, 4 ஜூன் 2006 (UTC)

அமெரிக்க கூட்டு நாடுகள் (அகூநா) என்றும் இணையத்தில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் "நாடுகள்" என அழைக்கலாமா? அமெரிக்கா என்பது ஒரு நாடு. ஒரு தலைவர். United Nations என்பது ஐக்கிய நாடுகள் (ஐநா).--Kanags 13:00, 5 ஜூன் 2006 (UTC)


ஜெர்மன், பிரென்ச்சு மொழி வழக்குகளையும் பாருங்கள். ஜெர்மனில் Vereinigten Staaten von Amerika என்கிறார்கள். Vereinigten என்றால் ஒன்றாக இணைக்கப்பட்ட என்று பொருள். அதில் ein என்பது ஒன்று என்பதே. தமிழில் ஒன்று என்றாலே (Unite! get united! ) என்னும் பொருள் கொண்டது. French États-Unis d'Amérique. நாடுகள் என்னும் பன்மை வருவதை தவிர்க்க வேண்டியதில்லை. கூட்டுற்ற, கூட்டுண்ட, கூட்டிணைந்த , ஒன்றிய, ஒன்றுபட்ட நாடுகள்தாம். ஒரு நாடே ஆயினும், இந்நாடு, நாடுகளின் கூட்டு என்றே வழங்கி வருகிறது (பல மொழிகளிலும்). ஐக்கிய நாடுகள் என்பதிலும் நாடுகள் என்பது பன்மையில் தான் உள்ளது. ஐக்கிய என்னும் சொல் ஃஇந்தி மொழி, சம்ஸ்கிருத மொழிச் சொல்லாகிய ஏக் > ஏகம் > ஐக்யம். சுகம் என்பது வடமொழியில் சௌக்யம் என மருவும். ஐக்கிய நாடுகள் என்னும் தொடர் பிடித்து இருந்தால் வைத்துக்கொள்ளலாம். ஒன்றிய நாடுகள் என்றாலும் அதே பொருள் உடையது தான். பிற தமிழ் சொற்களுக்கு வலு ஈந்து வாழ்வளிக்கும். நல்ல தமிழ்ச் சொற்களுடன், வளமும், பயனும் கூடுமாறு இருக்க வேண்டும் என்பதே என் பரிந்துரை. எனவே அமெரிக்கக் கூட்டு நாடுகள் என்றாலும் எனக்கு ஏற்புடையதே. அமெரிக்க நாடுகளின் ஒன்றியம், ஒன்றிய அமெரிக்க நாடுகள், என ஏதேனும் ஒன்றை எடுத்தாண்டாலும் ஏற்புடையதே. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்னும் வாக்கில் உள்ள ஒன்று என்பதையும் நோக்குக. ஒன்று என்பது ஒற்று, ஒற்றுமை என்னும் சொற்களுடன் எல்லாம் தொடர்பு கொள்ள வழி கூட்டும். --C.R.Selvakumar 15:22, 5 ஜூன் 2006 (UTC)செல்வா

united states of america என்பதற்கு அமெரிக்க ஐக்கிய நாடு என்றுதான் அகராதியிலும் கூறப்பட்டுள்ளது பார்க்க இணைய தமிழ் ஆகராதி அல்லது பால் அகாரதி. ஒருங்கிணைந்த தனி நாட்டை நாடுகள் என்று எப்படி குறிப்பிடுவது. United Nations என்பதற்கு ஐக்கிய நாடுகள் என்றும் குறிப்பிடுகிறோம் அப்பொழுது முரண்பாடு எழுமே. U S A என்பதற்கும் இப்படித்தான் பொருள் கூறப்பட்டுள்ளது பாடங்களிலும் இப்படித்தான் கூறப்பட்டுள்ளது. இந்தப் பெயரை கட்டுரைகளில் இணைப்புக்காக குறிப்பிடும் போது வெகு நேரம் இணைப்பு சொல் கிடைக்காமல் தேடிக்கொண்டிருந்தேன். இந்த பெயரிட்டால் இந்த விளைவுதான் அன்வருக்கும் ஏற்படும்.--செல்வம் தமிழ் 10:46, 27 பெப்ரவரி 2009 (UTC)

நண்பர்கள் கூறுவது மிகவும் பொருத்தமான வாதம் தான். மாநிலங்களை நாடுகள் என்று குறிப்பிட முடியாது கட்டுரையிலும் மாநிலங்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கண்டங்களை குறிப்பிடும் கட்டுரைகளில் பயன்படுத்தலாம் அப்படியும் ஐக்கிய என்ற சொல்லைப் பயன்படுத்துவது பொருந்தாது.--செல்வம் தமிழ் 11:06, 27 பெப்ரவரி 2009 (UTC)