மன்சுக் எல். மாண்டவியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்சுக் எல். மாண்டவியா
சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர்
இரசாயனங்கள் & உரங்கள் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 ஜூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்ஹர்ஷ் வர்தன்
கப்பல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு),
வேதியியல் மற்றும் உரத் துறை இணை அமைச்சர்[1]
பதவியில்
30 மே 2019 – 6 ஜூலை 2021
முன்னையவர்ராவ் இந்தர்ஜித் சிங்
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, கப்பல் துறை, வேதியியல் மற்றும் உரத் துறை இணை அமைச்சர்
பதவியில்
5 சூலை 2016 – 30 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், குஜராத்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஏப்ரல் 2018
கப்பல் துறை அமைச்சர்
பதவியில்
3 ஏப்ரல் 2012 – 3 ஏப்ரல் 2018
குஜராத் அக்ரோ தொழிற்சாலை கழகத் தலைவர்
பதவியில்
2011–2012
குஜராத் சட்டமன்ற உறுப்பினர், பாலிதானா
பதவியில்
2002–2007
தொகுதிபாலிதானா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மன்சுக் லக்ஷ்மண்பாய் மாண்டவியா

1 சூன் 1972 (1972-06-01) (அகவை 51)
ஹனோல், பாவ்நகர், குஜராத், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்நீத்தபன் எம். மாண்டவியா (திருமணம். 1995)
பிள்ளைகள்பவன், திசா
முன்னாள் கல்லூரிமுதுகலை அரசியல் அறிவியல் (பாவ்நகர் பல்கலைக்கழகம்)
இணையத்தளம்www.mansukhmandaviya.in

மன்சுக் எல். மாண்டவியா (Mansukh L. Mandaviya, பிறப்பு: 01 சூன் 1972) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் மற்றும் குஜராத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மற்றும் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மூத்த அமைச்சராக உள்ளார்.[2][3]

இவர் இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் ராஜ்ய சபா உறுப்பினராகவும் பதவி வகிக்கின்றார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.[4]

இளமைக் காலம்[தொகு]

இவர் குஜராத் மாநிலத்தின், பாவ்நகர் மாவட்டத்தில், பாலிதானா வட்டத்தில் உள்ள ஹனோல் என்ற சிறு கிராமத்தில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் ஹனோலில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி தனது ஆரம்ப கல்வியை முடித்தார். பின்னர் சோந்காத் குருகுலம் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை படித்து முடித்தார். பின்னர் பாவ்நகர் பல்கலைக்கழகத்தில் முதுகலை அரசியல் அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றார். இவருக்கு நீத்தபன் எம். மாண்டவியா என்னும் மனைவியும், பவன் மற்றும் திசா என்னும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவருக்கு 28 வயதாக இருக்கும் போது 2002 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பாலிதானா தொகுதியில் போட்டியிட்டு, குஜராத் சட்டமன்றத்தில், இளம் சட்ட மன்ற உறுப்பினர் ஆனார்.

பின்னர் 2011 ஆம் ஆண்டு குஜராத் அக்ரோ தொழிற்சாலை கழகத் தலைவராகப் பதவி வகித்தார்.

பின்னர் 2012 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தின், ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இணை அமைச்சர்[தொகு]

2016[தொகு]

இவர் சூலை 05, 2016 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, கப்பல் துறை, வேதியியல் மற்றும் உரத் துறை இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

2019[தொகு]

பின்னர் மே 30, 2019 ஆம் ஆண்டு முதல் கப்பல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு), வேதியியல் மற்றும் உரத் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019
  2. Ministers and their Ministries of India
  3. "Modi cabinet rejig: Full list of new ministers". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.
  4. "Detailed Profile: Shri Mansukh Mandaviya". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்சுக்_எல்._மாண்டவியா&oldid=3723535" இலிருந்து மீள்விக்கப்பட்டது