நம்பிநெடுஞ்செழியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நம்பிநெடுஞ்செழியன் ஓரு புலவர். குட்டுவன் என்ற பெயர் கொண்டு இவரைக் குட்ட நாட்டு அரசரான சேரர் மரபினர் எனக் கருதுவர். உ. வே. சாமிநாதையர் மற்றும் பி.நா.வும் (குறுந்தொகை, நற்றிணை பாடினோர் வரலாறுகள் - நூல்) நம்பி என்ற சொல் ஆடவரிற் சிறந்தானைக் குறிக்கும். அவ்வகையில் நம்பிநெடுஞ்செழியன் என்றவாறு, இவரும் நம்பிகுட்டுவனார் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்பர்.

குறுந்தொகையில் இரண்டும் (109 243) நற்றிணையில் மூன்றும் (145, 236, 345) ஆக ஐந்து பாடல்கள் இவருடையன. [1] பெரும்பாலும் நெய்தல் திணையைச் சிறப்பித்துப் பாடிய இவர், ஒரு பாடலில் (நற். 236) குறிஞ்சித் திணையையும் பாடியுள்ளார். தலைவன் அளவளாவி உடனிருக்கும் போதும் தலைவியின் நெற்றி பிறர் கண்டு அலர் கூறுமாறு வேறுபட்ட தன்மையைத் தோழி, அவன் சிறைபுறத்தே நிற்கையில், தலைவிக்குக் கூறுவாள் போல் அவனை வரைவு கடாவுவதையும் பிரிவிடை ஆற்றியிருக்குமாறு தோழி வற்புறுத்தும் நிலையில் தலைவி, ‘சேர்ப்பனை இனி, யான் நினையேன்’ என் கண்கள் துயில்வனாக என்று நெஞ்சழிந்து கூறுவதையும் இவர் குறுந்தொகைப் பாடல்களில் அமைத்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. நம்பிநெடுஞ்செழியன் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பிநெடுஞ்செழியன்&oldid=2754803" இலிருந்து மீள்விக்கப்பட்டது