பேச்சு:2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Kanags, ஓவர்கள் என்பதைத் தமிழில் பந்துப்பரிமாற்றங்கள் என வழங்கப்படுவதால் ஓவர்கள் என்பதைப் பந்துப்பரிமாற்றங்கள் என மாற்றுகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 15:32, 31 மே 2019 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 23:50, 31 மே 2019 (UTC)[பதிலளி]

Kanags //ஆறு தொடர்ச்சியான பந்து வீச்சுகளில் 3 இலக்குகளைக் கைப்பற்றினார்// எனும் உரையை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 'மூன்று தொடர்ச்சியான பந்து பந்துவீச்சுகளில்' என்பதுதானே சரி?--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:09, 23 சூன் 2019 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m: நீங்கள் சொல்வது சரி. மாற்றி விடுகிறேன். Hat-trick இற்கு இனையான தமிழ்ச்சொல் கண்டுபிடித்திருக்கிறார்களா.--Kanags \உரையாடுக 01:36, 23 சூன் 2019 (UTC)[பதிலளி]

@Kanags: திருத்தம் செய்தமைக்கு நன்றி. Hat-trick இற்கு இணையான தமிழ்ச்சொல்லை கண்டறிய முயல்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:18, 24 சூன் 2019 (UTC)[பதிலளி]

@Kanags: எப்போதும் போன்று இந்த முறையும் உங்களின் இற்றைகள் சிறப்பு. அரையிறுதியில் ஆடுவதற்கு இலங்கை அணிக்கு இன்னமும் வாய்ப்பு இருப்பதாக கருதியிருந்தேன். அவ்வாறில்லை என்பதனை உங்களின் உரையின் மூலமாகவே அறிந்துகொண்டேன். அதற்கு தரப்பட்ட ஆதாரம் முழுமையாக இருக்கிறது; முழுமையான கட்டுரைக்கு நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:08, 1 சூலை 2019 (UTC)[பதிலளி]

Kanags, சில பொருத்தமற்ற சொற்களுக்கு இணையான மாற்றுச் சொற்களைப் பயன்படுத்தலாம் என்பது எனது கருத்தாகும்.

fall of wicket - இலக்கு வீழ்ந்தது என்று தானே கூறவேண்டும். வீழ்ச்சி வீழ்ந்தது எனக் கூறலாமா? scorecard நேரடி மொழிபெயர்ப்பு மதிப்பெண் அட்டை. அது இங்கு பொருந்தாது என்பது என் கருத்து. over என்பதற்கு இன்னும் உரையாடி நல்ல சொல்லாகத் தெரிவு செய்ய வேண்டும். நிறைவு என்பது over எனபதன் நேரடி மொழிபெயர்ப்பு.--Kanags \உரையாடுக 04:14, 21 சூலை 2019 (UTC)[பதிலளி]
wicket- இழப்பு எனலாம். இலக்கு என்பது Targetஐயும் குறிக்கிறது. fall of wicket என்றால் இழப்பு ஏற்பட்டது எனலாம். Over க்கு வீச்சலகு என்பது பொருத்தமான நல்ல சொல்லாக இருக்கும். ஓட்டப்பலகை என்ற சொல் பயன்படுத்துவதில் எனக்கு எதிர்க்கருத்து இல்லை. AakashAH120 (பேச்சு) 04:38, 21 சூலை 2019 (UTC)[பதிலளி]

கருத்து[தொகு]

@Kanags, தமிழில் இரு பொருள் கொண்ட ஒரே பெயர்கள் இருக்கின்றன. எனினும் துடுப்பாட்டம் சார்ந்த சொற்களுக்கான பொருள் அனைவருக்கும் எளிதில் விளங்கும் படி அமைப்பதே சிறந்தது என்பது எனது கருத்து. ஏனென்றால் இலக்கு என்பது வெற்றி பெறத் தேவையான இலக்கை (Target) குறிக்கவே தமிழில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அது ஒரு சொற்றொடரின் இரு இடங்களில் வெவ்வேறு பொருள்களில் வந்தால் சராசரியான ஒரு பார்வையாளருக்கு குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது

(எ-டு)

  • அணியின் 5வது இலக்கு வீழ்ந்தது. தற்போது இலக்கை அடைய அந்த அணிக்கு இன்னும் 200 ஓட்டங்கள் தேவை
  • அணி தன் இலக்கை அடையும் முன்பே தன் அனைத்து இலக்குகளையும் இழந்தது

Wicket என்பதற்கு ஆங்கிலத்தில் பல்வேறு பொருள்கள் உள்ளன. அதை ஒரேயொரு பெயரால் மட்டுமே குறிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. எனவே இடத்திற்கு ஏற்றவாறு சொற்களை அமைத்தால் குழப்பம் ஏற்படாது.

(எ-டு)

  • Team A lost all the wickets- அணி தன் அனைத்து மட்டையாளர்களையும் இழந்தது
  • Team A won by 7 wickets- 7 இழப்புகள் வித்தியாசத்தில் அணி வெற்றி
  • A took his 100th wicket in today's match- இன்றைய போட்டியில் 100வது முறையாக மட்டையாளரை வீழ்த்தினார்

இவ்வாறு இடத்திற்கேற்ப சொற்களை அமைக்கலாம். இதனால் படிப்பவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று எளிதில் விளங்கும். இதுகுறித்து தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். நன்றி. AakashAH120 (பேச்சு) 08:14, 22 சூலை 2019 (UTC)vi[பதிலளி]

👍 விருப்பம் ஸ்ரீ (talk) 12:01, 22 சூலை 2019 (UTC)[பதிலளி]

Kanags,இதில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவியுங்கள். இல்லையென்றால் மேலே குறிப்பிட்டபடி சொற்களை இடத்திற்கேற்றவாறு மாற்றியமைக்க அனுமதி வழங்குங்கள். AakashAH120 (பேச்சு) 07:59, 23 சூலை 2019 (UTC)[பதிலளி]

இடத்திற்கேற்ப சொற்களை அமைத்து தொகுத்துள்ளேன். அவற்றில் தவறு ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். நன்றி. AakashAH120 (பேச்சு) 07:44, 24 சூலை 2019 (UTC)[பதிலளி]

AakashAH120, Wicket என்பதற்கு இலக்கு என்பது நீண்டகாலமாகப் பாவனையில் உள்ள ஒரு சொல். எனவே அதை மாற்றவேண்டிய தேவை இல்லை. முறையாகக் கலந்துரையாடாமல் அவசரப்பட்டு ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் உள்ள சொற்களை மாற்றவேண்டாம். நீங்களாகக் கலைச்சொல் உருவாக்குவது சரியன்று. விக்கிப்பீடியாவில் ஆக்கபூர்வமான முறையில் பங்களியுங்கள். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 16:06, 7 செப்டம்பர் 2019 (UTC)