சோடியம் கால்சியம் எடிடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
கால்சியம் டைசோடியம் 2-[2-[பிசு(கார்பாக்சிலேட்டோமெத்தில்)அமினோ]எத்தில்-(கார்பாக்சிலேட்டோமெத்தில்)அமினோ]அசிட்டேட்டு
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் கால்சியம் டைசோடியம் வெர்சனேட்டு, மற்றும் பல
AHFS/திரக்ஃசு.காம் ஆய்வுக் கட்டுரை
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை B(US)
சட்டத் தகுதிநிலை ?
வழிகள் IV, IM
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 62-33-9
ATC குறியீடு V03AB03
பப்கெம் CID 6093170
DrugBank DB00974
ChemSpider 5883
ஒத்தசொல்s எடிடேட்டு கால்சியம் டைசோடியம், சோடியம் கால்சியம் எடிடேட்டு
வேதியியல் தரவு
வாய்பாடு C10

H12 Br{{{Br}}} N2 Na2 O8  

  • InChI=1S/C10H16N2O8.Ca.2Na/c13-7(14)3-11(4-8(15)16)1-2-12(5-9(17)18)6-10(19)20;;;/h1-6H2,(H,13,14)(H,15,16)(H,17,18)(H,19,20);;;/q;+2;2*+1/p-4
    Key:SHWNNYZBHZIQQV-UHFFFAOYSA-J

சோடியம் கால்சியம் எடிடேட்டு (Sodium calcium edetate) C10H12CaN2Na2O8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எடிடேட்டு கால்சியம் டைசோடியம் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. உடலில் ஈயம் ஏற்படுத்தும் நஞ்சு விளைவுகளுக்கு எதிரான சிகிச்சையில் மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது [1]. நீண்டகால ஈய நஞ்சு, குறுகியகால ஈய நஞ்சு என்பன இப்பாதிப்பின் இரு வகைகளாகும் [2]. ஈய பாதிப்பு மூளை நோய்க்கு டைமெர்கேப்ராலுடன் இதைச் சேர்த்து பயன்படுத்துகிறார்கள் [2]. டைமெர்கேப்டோ சக்சினிக் அமிலத்திற்கு ஒரு மாற்று மருந்தாகவும் இதைக் கருதுகிறார்கள் [2]. டெட்ராமெத்திலீய நஞ்சுக்கெதிராக இது பயனுள்ளதாக இருக்குமென தோன்றவில்லை [2]. சோடியம் கால்சியம் எடிடேட்டு இரத்தநாளம் வழியாக அல்லது தசை வழியாக மெல்ல ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது [1].

ஊசிபோடும் இடத்தில் வலியுண்டாவது இதனால் ஏற்படும் ஒரு பொதுவான பக்க விளைவாகும் [2]. சிறுநீரக பாதிப்புகள், வயிற்றுப் போக்கு, காய்ச்சல், தசைகளில் வலி, குறை இரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம் [1]. மகப்பேறு காலத்தில் இதைப் பயன்படுத்தி அடையும் நன்மைகள் அதிகமென்றாலும் அந்நடவடிக்கை ஓர் ஆபத்து கலந்த துணிச்சலான நடவடிக்கையாகும் [2]. இடுக்கி இணைப்பு முகவர் என்ற குடும்பத்தில் சோடியம் கால்சியம் எடிடேட்டு மருந்து சேர்க்கப்படுகிறது [2]. இரண்டு சோடியம் அணுக்களும் ஒரு கால்சியம் அணுவும் பெற்றுள்ள எடிடேட்டு உப்பு என்று சோடியம் கால்சியம் எடிடேட்டு விவரிக்கப்படுகிறது [3]. சிறுநீரில் உடலைவிட்டு வெளியேறும் கன உலோகங்களை பிணைக்க இம்மருந்து பயன்படுகிறது [2].

வரலாறு[தொகு]

சோடியம் கால்சியம் எடிடேட்டு மருந்து 1953 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மருத்துவப் பயன்பாட்டுக்கு வந்தது [2]. அத்தியாவசியமான மருந்துகளின் பட்டியலில் உலக சுகாதார நிறுவனம் இம்மருந்தைப் பட்டியலிட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் உடலுக்கு மிகவும் தேவையான மருந்து என்றும் அந்நிறுவனம் இதை விவரிக்கிறது [4]. அமெரிக்காவில் ஒரு முறை இம்மருந்து சிகிச்சை மேகொள்ளப்பட்டால் 50 முதல் 100 அமெரிக்க டாலர் செலவாகிறது என 2015 ஆம் ஆண்டு மதிப்பீடு தெரிவிக்கிறது [5]. வேறுபட்ட முறைகளில் தயாரிக்கப்படும் எடிடேட்டு டைசோடியம் ஒரே மாதிரியான விளைவுகளை கொண்டிருக்கவில்லை [2].

புளூட்டோனிய நஞ்சுக்கு எதிரான சிகிச்சையிலும் இதைப் பயன்படுத்தலாம்[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 WHO Model Formulary 2008. World Health Organization. 2009. பக். X. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789241547659 இம் மூலத்தில் இருந்து 13 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161213060118/http://apps.who.int/medicinedocs/documents/s16879e/s16879e.pdf. பார்த்த நாள்: 8 January 2017. 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 "Edetate Calcium Disodium". The American Society of Health-System Pharmacists. Archived from the original on 16 January 2017. பார்க்கப்பட்ட நாள் 8 January 2017.
  3. Kasture, Dr A. V. (2008) (in en). Pharmaceutical Chemistry - I. Pragati Books Pvt. Ltd.. பக். 16.11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185790121 இம் மூலத்தில் இருந்து 2017-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170116152923/https://books.google.ca/books?id=ZkoJsQIhDWkC&pg=SA16-PA11. 
  4. "WHO Model List of Essential Medicines (19th List)" (PDF). World Health Organization. April 2015. Archived from the original (PDF) on 13 December 2016. பார்க்கப்பட்ட நாள் 8 December 2016.
  5. Hamilton, Richart (2015). Tarascon Pocket Pharmacopoeia 2015 Deluxe Lab-Coat Edition. Jones & Bartlett Learning. பக். 471. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781284057560. 
  6. Flanagan, Robert; Jones, Alison; Maynard, Robert L. (2003) (in en). Antidotes: Principles and Clinical Applications. CRC Press. பக். 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780203485071 இம் மூலத்தில் இருந்து 2017-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170116151507/https://books.google.ca/books?id=Ux0-AAAAIAAJ&pg=PA47.