உருசினா பாஜ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ruzena Bajcsy
பிறப்புமே 28, 1933 (1933-05-28) (அகவை 90)
பிராத்திஸ்லாவா, செக்கோசிலோவாக்கியா
வாழிடம்அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்அமெரிக்கர்
துறைமின்பொறியியல் மற்றும் கணினி அறிவியல்
பணியிடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி); பென்சில்வேனியா பல்கலைக்கழகம்;
கல்வி கற்ற இடங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்; சுலோவாக் நுட்பவியல் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஜோன் மெக்கார்த்தி
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஜனா கொசெக்கா
அறியப்படுவதுசெயற்கை நுண்ணறிவு; தானியங்கியல்; கணினியப் பார்வை; தானியங்கியல்; புலன்சார் வலையமைப்பு; கட்டுப்பாடு; Biosystems; பொதுத் தானியங்கியல் மற்றும் செயல்பாட்டு புலன்சார் புலனுணர்வு
விருதுகள்பெஞ்சமின் பிராங்க்ளின் பதக்கம் (2009)
கணிமைப் பொறிகளுக்கான சங்கம் (2003)
கணினி ஆய்வுக்கழகச் சேவை விருது (2003)
ACM/AAAI ஆல்லென் நியூவெல் விருது (2001)
IEEE Robotics and Automation Award (2013)

ருசினா பாஜ்சி செக்கோசிலோவாக்கியா, பிராத்திஸ்லாவாவில் 1933 இல் பிறந்த [1] ) ஓர் அமெரிக்கப் பொறியியலாளரும் தானியங்கியல் நிபுணருமான கணினி விஞ்ஞானி ஆவார். இவர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியல் துறையின் பேராசிரியராக உள்ளார்.[2] இவர் CITRIS எனப்படும் சமுதாய நலனுக்கான தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் எமிரீடா இயக்குநராகவும் உள்ளார் .

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் கழகத்தின் பேராசிரியராக இருந்தவர். பென்சில்வேனியாவின் பொதுத் தானியங்கியல் மற்றும் செயல்பாட்டு புலன்சார் புலனுணர்வு (GRASP) ஆய்வகத்தின் நிறுவனர்-இயக்குநராக இருந்தார். மருத்துவக்கல்லூரியின் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் உறுப்பினராகவும், தேசிய அறிவியல் அறக்கட்டளையின் கணினி மற்றும் தகவல் அறிவியல் மற்றும் பொறியியல் இயக்குநரகத்தின் தலைவராகவும் இருந்தார். இவருக்கு இங்கு 500 மில்லியன் டாலருக்கும் மேல் வரவு-செலவு திட்டமியற்றும் அதிகாரம் இருந்தது. பென்சில்வேனியாவில், குறைந்தபட்சம் 26 ஆய்வு மாணவர்களுக்கு இவரது மேற்பார்வையின் கீழ் முனைவர் பட்டங்களைப் பெற்றுத்தந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bajcsy, Ruzena. Interview with Janet Abbate. Oral History: Ruzena Bajcsy. 9 July 2002.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Ruzena Bajcsy official page, EECS, College of Engineering, UC Berkeley, USA.
  3. Mathematics Genealogy Project.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசினா_பாஜ்சி&oldid=3354655" இலிருந்து மீள்விக்கப்பட்டது