கட்டாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டாரி
ஒரு அங்கார கட்டாரி
வகைகுத்துவாள்
அமைக்கப்பட்ட நாடுஇந்தியத் துணைக்கண்டம்
அளவீடுகள்
கைப்பிடி வகைகிடைமட்டம்

கட்டாரி (katar அல்லது katara, [1] [2] [3] ) என்பது இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த ஒரு குத்துவாள் வகையாகும். [4] இந்த குத்துவாளின் கைப்பிடியானது H வடிவில் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும். இதைப் பிடித்திருப்பவரின் முன்கையின் மேல் கத்தியின் குத்துப் பகுதி அமர்ந்திருக்கும். இந்தக் குத்துவாளானது இந்தியத் துணைக் கண்டத்தில் மிகவும் பிரபலமானதும், தனித்துவமானதும் ஆகும். [5] வழிபாட்டுச் சடங்குகளிலும் கட்டாரிகள் இடம்பெற்றுள்ளன. [6]

சொற்பிறப்பு[தொகு]

தென்னிந்தியாவில் உருவான இந்த ஆயுதத்தின் பழமையான பெயரானது தமிழ்ச் சொல்லான கட்டாரி என்பதாகும். மேலும் இது குத்துவாள் என்ற பெயரிலும் தமிழில் அழைக்கப்படுகிறது. இது சமசுகிருதத்தில் கட்டாரா (कट्टार) அல்லது கட்டாரி என மருவியது. இருப்பினும் இந்தச் சொல்லானது பெரும்பாலும் நவீன ஹிந்தி மொழியில் காலனிய மொழிபெயர்பின் தொடர்ச்சியாக கட்டார் ("katar") என அழைக்கப்படுகிறது.

கட்டாரியை துணைக்கண்டத்தின் பிற மொழிகளான கன்னடத்தில் கட்டாரி (kaṭhāri- ಕಠಾರಿ), மலையாளத்தில் கட்டார (കട്ടാര), மராத்தியில் கட்யாரா, (kaṭyāra- कट्यार) பஞ்சாபியில் கட்டார் (kaṭār- ਕਟਾਰ), இந்தியில் கட்டாரா அல்லது கட்டாரி (कटार) என அழைக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

கட்டாரி இந்தியாவில் உருவான ஒரு ஆயுதமாகும். [7] இதன் துவக்கக்கால வடிவங்களானது 14 ஆம் நூற்றாண்டின் விசயநகரப் பேரரசு காலத்துடன் நெருக்கமாக உள்ளன. [5] நடுவிரல், ஆள்காட்டி விரலுக்கு இடையில் வைத்து பயன்படுத்தும் குத்துவாளான முஷ்டிகாவில் இருந்து தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. [8]

குறிப்புகள்[தொகு]

  1. Dick Luijendijk (2008). Kalarippayat: The structure and essence of an Indian martial art. Lulu. 
  2. Max Klimburg (1999). The Kafirs of the Hindu Kush: Art and Society of the Waigal and Ashkun Kafirs. Franz Steiner Verlag. 
  3. Judith Pfeiffer and Sholeh Alysia Quinn (2006). History and Historiography of Post-Mongol Central Asia and the Middle East. Harrassowitz Verlag. 
  4. DK. The Military History Book. Dorling Kindersley Limited. 
  5. 5.0 5.1 Dr Tobias Capwell (2009). The World Encyclopedia Of Knives, Daggers And Bayonets. Anness Publishing. 
  6. Nityasumaṅgalī: devadasi tradition in South India. 
  7. O'Bryan, John (2013-04-23) (in en). A History of Weapons: Crossbows, Caltrops, Catapults & Lots of Other Things that Can Seriously Mess You Up. Chronicle Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781452124209. https://books.google.no/books?id=3dz0tAoF0jIC&pg=PA91&dq=katar+weapon+southern&hl=no&sa=X&ved=0ahUKEwim84vr_OnSAhWlHpoKHeRfAe8Q6AEIJDAB#v=onepage&q&f=false. 
  8. Swords And Hilt Weapons. Prion. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85375-882-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டாரி&oldid=3779363" இலிருந்து மீள்விக்கப்பட்டது