டோக்யோயைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோக்யோயைட்டு
Tokyoite
பொதுவானாவை
வகைவனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுBa2(Mn3+,Fe3+)OH(VO4)2
இனங்காணல்
நிறம்செங்கருப்பு
படிக இயல்புசீரற்ற புள்ளிகளுடன் வடிவமற்ற படிக உள்ளடக்கமாக
படிக அமைப்புஒற்றைச் சரிவச்சு
பிளப்புஉணரமுடியவில்லை
மோவின் அளவுகோல் வலிமை4.5 - 5
மிளிர்வுபளபளப்பு
கீற்றுவண்ணம்அடர் பழுப்பு சிவப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி4.62 கணக்கிடப்பட்ட்து
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (?)
ஒளிவிலகல் எண்a=1.99, g=2.03
இரட்டை ஒளிவிலகல்0.0400
பலதிசை வண்ணப்படிகமைதனித்துவமானது. ஆரஞ்சு சிவப்பு முதல் அடர் பழுப்பு கலந்த சிவப்பு வரை
மேற்கோள்கள்[1][2][3]

டோக்யோயைட்டு (Tokyoite) என்பது Ba2(Mn3+,Fe3+)OH(VO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பேரியம் மாங்கனீசு வனேடேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. இரும்பு மிகு காமாகாரைட்டு கனிமத்தை ஒத்த மாங்கனீசு வரிசை கனிமம் என்றும் ஈய வனேடேட்டின் பிரேக்கிபசுகைட்டை ஒத்த பேரியக் கனிமம் என்றும் கருதப்படுகிறது [3]. தரங்குறைந்த பல்லுருவாகப் படிந்து உருமாறிய மாங்கனீசு தாதுப் படிவுகளில் டோக்யோயைட்டு தோன்றுகிறது. மேலும், ஐயலோபேன், பிரௌனைட்டு, தமைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து இக்கனிமம் கிடைக்கிறது [3].

சப்பானின் ஒன்சு தீவில் ஒக்குடாமா தமா மாவட்டத்திலுள்ள சிரோமரு சுரங்கத்தில் முதன்முதலில் டோக்யோயைட்டு கண்டறியப்பட்டது. அனைத்துலக கனிமங்களின் கழகம் 2003 ஆம் ஆண்டில் இதை புதிய கனிமம் என்று அங்கீகரித்தது. இத்தாலியில் இரண்டு சுரங்கங்களிலும் சப்பானில் ஒரு சுரங்கத்திலும் கிடைப்பதாக அறியப்படுகிறது. முதலில் சப்பானில் கண்டறியப்பட்டதால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது [2] It has been found in two mines in இத்தாலி and one in Japan, for which it was named.[1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோக்யோயைட்டு&oldid=3248789" இலிருந்து மீள்விக்கப்பட்டது