சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் [1] என்பது தமிழ்நாடு அரசின் ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின் நோக்கமானது குடும்பங்களிலில் ஆண் வாரிசு வேண்டும் என்ற கருத்தை மாற்றுதல், குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்குவித்தல், பெண் சிசுக் கொலையை ஒழித்தல், ஏழை குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்தல், பெண் குழந்தையின் மதிப்பை உயர்த்துதல் ஆகும்.

நிபந்தனைகள்[தொகு]

  • குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமை இருக்கவேண்டும்.
  • ஆண் குழந்தை இருக்கக் கூடாது பின்னாளில் ஆண் குழந்தையைத் தத்தெடுக்கவும் கூடாது.
  • 35 வயதுடைய பெற்றொரில் ஒருவர் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் அல்லது அவர்கது பெற்றோர் தமிழகத்தில் பத்தாண்டுகள் வசித்தவராக இருக்கவேண்டும்.
  • திட்டம் 1இன் கீழ் விண்ணப்பிப்பவர்கள் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
  • திட்டம் 2இன் கீழ் விண்ணப்பிப்பவர்கள் இரண்டாவது குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானமானது 72000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்[தொகு]

  • குழந்தையின் பிறப்புச் சான்று
  • பெற்றோரின் வயது சான்று
  • குடும்ப நல அறுவைச் சிகிச்சை சான்று
  • வருமானச் சான்று
  • குடும்பத்தில் ஆண் குழந்தை இல்லை என்ற சான்று
  • இருப்பிடச் சான்று

வைப்புத் தொகையும், தகுதிகளும்[2][தொகு]

  • திட்டம் 1: 01 ஆகத்து 2011 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்து குடும்பத்தில் ஒரேயொரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் அந்தப் பெண் குழந்தைப் பெயரில் ரூ. 50,000 காலவரை வைப்புத்தொகை வைக்கப்படும். (திட்டம் 1 இன் கீழ் பயனடைந்த பெண் குழந்தை இறந்துவிட்டால் அந்தக் குழந்தையின் தாயாருக்கு முதிர்வுத் தொகை வழங்கப்படும். தாயாரும் இறந்துவிட்டால் குழந்தையின் தந்தைக்கு வழங்கப்படும். இருவரும் இல்லாத நிலை ஏற்பட்டால் அரசுக்கு சென்றுவிடும்.
  • திட்டம் 2: 01 ஆகத்து 2011 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்து குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருப்பின், ஒவ்வொரு பெண் குழந்தைகளின் பெயரிலும் தலா ரூ.25,000 நிலை வைப்புத்தொகை வைக்கப்படும். திட்டம் 2ன் கீழ் பயனடைந்த பெண் குழந்தையானது இறந்துவிட்டால் உயிருடன் இருக்கும் மற்றொரு குழந்தைக்கு முதிர்வுத் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேரும் குழந்தையின் பெயரில் வைக்கப்படும் வைப்புத் தொகையானது ஒவொரு ஐந்தாண்டு முடிவிலும் புதிப்பிக்கப்பட்டு 18ஆம் ஆண்டு நிறைவடையும்போது வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகை 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய பெண் குழந்தைக்கு அளிக்கப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்". கட்டுரை. விகாஸ்பீடியா. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2019.
  2. ருக்மணி (21 ஏப்ரல் 2019). "ஆசைக்கும் ஆஸ்திக்கும் பெண்ணே போதும்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 3 மே 2019. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]