ரோச்சி அகசுடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோச்சி அகசுடின்
Roshy Augustine
நாடாளு மன்ற உறுப்பினர்
தொகுதிஇடுக்கி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 சனவரி 1969
பாளை
தேசியம்இந்தியா இந்தியன்n
அரசியல் கட்சிகேரள காங்கிரசு கட்சி (மணி)
துணைவர்ராணி தாமசு
பிள்ளைகள்இரண்டு மகள் மற்றும் ஒரு மகன்
வாழிடம்சக்காம்புழா

ரோச்சி அகசுடின் (Roshy Augustine) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கேரள சட்டமன்றத் தேர்தலில் இடுக்கி மாவட்டத் தொகுதியின் கேரள காங்கிரசு கட்சி (மணி) சார்பாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2][3][4][5] கேரளாவின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள பாளை என்னும் ஊரில் தாமசு மற்றும் லீலாம்மா தம்பதிகளுக்கு 1969 ஆம் ஆண்டு சனவரி 20 ஆம் தேதி பிறந்தார். தன் பள்ளிப் பருவத்தில் இருந்தே அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அரசு உயர்நிலைப் பள்ளி எடகோளியின் பள்ளித் தலைவராக இருந்தார். பாளை புனித தாமசு கல்லூரி கேரள மாணவர் காங்கிரசு (மணி) கட்சியில் ஒரு பிரிவின் தலைவர் பொறுப்பில் இருந்தார். மேலும் அகசுடின்,மாநில பொதுச் செயலாளர், கேரள மாணவர் காங்கிரசு(மணி) கட்சியின் தலைவர், கேரள மாநில சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் ராமாபுரம் கூட்டுறவு வங்கி பணியாளர் குழு உறுப்பினர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்தார். தற்போது கேரள காங்கிரசு (மணி) கட்சியின் பொதுச் செயலாளாராகவும் உள்ளார்.[1][6]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோச்சி_அகசுடின்&oldid=3227191" இலிருந்து மீள்விக்கப்பட்டது