பெரியமுத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியமுத்தூர்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635101

பெரியமுத்தூர் (Periyamuthur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 271 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. [2]

விளக்கம்[தொகு]

இந்த ஊரானது கிருட்டிணகிரி அணைக்கு அருகில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊரின் தனிச்சிறப்பாக ஊரின் முகப்பில் உயரமான ஓட்டுவீட்டைப் போன்ற நீண்ட சுவர் உள்ளது. அதில் இரண்டு ஊர் வாசல்கள் அமைந்துள்ளன. 15 அடி உயரம், 8 அடி அகலம் கொண்ட இந்த ஊர் வாசல் வழியாகவே ஊருக்குள் நுழையமுடியும். இந்தப் பகுதியை கோட்டை என்று ஊர்மக்கள் அழைக்கின்றனர். இரவு 10 மணிக்கு ஊர் காவலாளியால் ஊர்வாசல் பூட்டப்படுகிறது. அதன் பிறகு யாராவது ஊருக்கு வந்தால் அருகில் உள்ள சன்னல் வழியே காவலளியை அழைத்து திறக்கச்சொல்ல வேண்டும். தெரியாதவர்கள் வந்தால் அவருக்கு வேண்டிய வீட்டுக்காரர் வந்து பார்த்து கதைவைத் திறக்கச் சொன்னால் மட்டுமே கதவு திறக்கப்பட்டும். தேர்தல் நேரத்தில் பரப்புரைக்கு வருபவர்களை இந்த வாசல் தாண்டி ஊருக்குள் விடுவதில்லை. வருபவர்கள் இங்கிருந்தே பரப்புரை செய்துவிட்டு ஊர் பெரியவர்களை அழைத்து பேசிவிட்டு திரும்புவர்.[3]

வரலாறு[தொகு]

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள செங்கம் பகுதியில் இருந்து பெரியமுத்தன், நடுமுத்தன், சின்னமுத்தன் என்னும் மூன்று சகோதரர்கள் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வந்து இங்கு குடியேறினர். இங்கிருந்த காட்டை அழித்து வேளாண்மை செயத்துவங்கினர். இவர்களின் சந்ததியினர் விரிவடைந்து இப்பகுதியில் சின்னமுத்தூர், பெரியமுத்தம்பட்டி, நடுமுத்தூர் என ஊர்கள் உருவாயின. என்பது செவிவழி தகவல்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
  2. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Krishnagiri/Periyamuthur
  3. 3.0 3.1 ஊர் வாசல்! (2016). தினகரன் பொங்கல் மலர் 2016. சென்னை: தினகரன். பக். 224-229. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியமுத்தூர்&oldid=3599277" இலிருந்து மீள்விக்கப்பட்டது