சாய்லபலா தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாய்லபலா தாசு
Sailabala Das
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
03 April 1952 – 02 April 1954
தொகுதிஒரிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சாய்லபலா தாசு ஹஸ்ரா

(1875-03-25)25 மார்ச்சு 1875 [1]
சக்ரபேரியா சாலை, பவானிபூர், கொல்கத்தா மாவட்டம், மேற்கு வங்காளம்
இறப்பு29 ஏப்ரல் 1968(1968-04-29) (அகவை 93)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
முன்னாள் கல்லூரிபெதுன் கல்லூரி, மரியா கிரே பயிற்சி கல்லூரி[2]
தொழில்கல்வியாளர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி


சாய்லபலா தாசு (25 மார்ச் 1875 - 29 ஏப்ரல் 1968) இவர் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். ஒரிசாவில் இருந்து இங்கிலாந்துக்கு உயர்கல்வி பயில சென்ற முதல் பெண்மணி ஆவார். [3] இந்திய அரசு இவருக்கு 1959 ஆம் ஆண்டு சமூகப்பணிக்காக பத்மசிறீ விருது வழங்கி சிறப்பித்தது.[4]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

சாய்லபலா தாசு அம்பிகா சரன் ஹஸ்ர மற்றும் பிரசன்னமாயே தம்பதிகளுக்கு மூத்த மகளாக 1875 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் கொல்கத்தாவின் பவானிபூர் என்னுமிடத்தில் மதுசூதன் தாசு அவர்களின் இல்லத்தில் பிறந்தார். இவருக்கு ஐந்து உடன்பிறந்தவர்கள் உள்ளனர். இவர் அன்னையின் இறப்புக்கு பின் மதுசூதன் தாசு அவர்களால் தத்தெடுத்து வளர்க்கப்படார்.

1903 ஆம் ஆண்டு இவர் உலக இளைஞர்கள் சங்கம் மற்றும் உலக இளம்பெண்கள் சங்கத்தை உருவாக்கி செயல்படுத்தி வந்தார். கட்டாக்கில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி அவரின் பெயரால் சாய்லபலா தாசு மகளிர் கல்லூரி என அழைக்கப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/d.pdf
  2. Karlekar, Malavika. "A VOYAGE OUT - How Sailabala Das discovers that the Red Sea is not red". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 25 October 2014.
  3. Sachidananda Mohanty (2005). Early Women's Writings in Orissa, 1898-1950: A Lost Tradition. SAGE Publications. பக். 45–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7619-3308-3. https://books.google.com/books?id=WAicQsB1jkgC&pg=PA45. 
  4. "Padma Awards Directory (1954-2013)" (PDF). Archived from the original (PDF) on 2015-10-15. பார்க்கப்பட்ட நாள் 2014-11-15.
  5. "SB women's college Centenary Celebration begins in the presence of Vice President Hamid Ansari". Discover Odisha. பார்க்கப்பட்ட நாள் 25 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்லபலா_தாசு&oldid=3934001" இலிருந்து மீள்விக்கப்பட்டது