சாரா கான் (தொலைக்காட்சி நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரா கான்
பிறப்பு1991/1992 (அகவை 32–33)[1]
போபால், மத்தியப் பிரதேசம், இந்தியா[2][3]
பணிநடிகை, விளம்பர் நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2007 முதல் தற்போது வரை
அறியப்படுவதுசப்னா பாபுல் கா பிடாய்
ராம் மிலாயி ஜோடி
மூன்று முடிச்சு
வாழ்க்கைத்
துணை
அலி மெர்ச்சன்ட் (2010-2011)

சாரா கான் (Sara Khan) ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை மற்றும் விளம்பர நடிகையாவார்.[4]. இவர் 2007 இல் மிஸ் போபால் பட்டம் வென்றுள்ளார்[5]. மத்தியப் பிரதேச தூர்தர்ஷன் மற்றும் ஈ.டி.வி ஆகியவற்றிற்காக இவர் நடித்துள்ளார்[2]. அவர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சப்னா பாபுல் கா பிடாயில் சாதனா என்ற பாத்திரத்தின் மூலம் தனது தொலைக்காட்சி வாழ்க்கையைத் தொடங்கினார்.[6]. கான் மற்றும் அங்கத் ஆகியோர் 2008 ஆம் ஆண்டில் ஸ்டார் பரிவார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.[2][7] 2010 இல் பிக் பாஸ் 4 இல் ஒரு போட்டியாளர் ஆவார்.[8] அவரது அடுத்த படம் எம்3 - மிட்சம்மர் மிட்நைட் மும்பை, இது 16 மே 2014 அன்று வெளியானது.[9] சாரா தனது படங்களை, வீடியோக்களை மற்றும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை இடுகையிட பயன்படுத்தினார்.[10] சாரா பாக்கிஸ்தான் தொடர்களில் நடித்துள்ளார்.[11]

தொழில்[தொகு]

கான் தனது தொழில் வாழ்க்கையை ஒரு விளம்பர நடிகையாகத் தொடங்கினார். பிரபலமான ஸ்டார் பிளஸ் நிகழ்ச்சியான சப்னா பாபுல் கா பிடாய்யில் அவர் அறிமுகமானார் (2007-2010). 4 ஆண்டுகளாக அங்கத் ஹஸிஜாவுக்கு எதிரான பிரதான முன்னணி கதாபாத்திரத்தில் சாதனாவாக நடித்தார், சாதானா பாத்திரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக 2010 ஜூன் மாதம் அவர் அந்த நிகழ்ச்சியை விட்டு விலகினார். 2010 இல் சாரா ஜீ டி.வி நிகழ்ச்சியில் ப்ரீட் சீ பண்டி யே டோரி ராம் மிலாயி ஜோடி என்ற தொடரில் (2010-2012) பிரீயல் கோர் என்ற நடிகை நடித்து வந்த மோனா என்ற பாத்திரத்தில் நடித்தார்.

2013 ஆம் ஆண்டில், சாரா லைஃப் ஓகே என்றத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜுனூன் -அய்சி நஃப்ரத் தோ கியாஷா இஷ்க் என்ற தொடர் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர், 2014 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பிரபலமான கலர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான மூன்று முடிச்சு தொடரில் இச்சாதாரி நாகமாக நடித்தார். வி தி சீரியல், பியார் ட்யூன் க்யா கியா, என்கவுண்டர் மற்றும் பாக்கிஸ்தான் நாடகம் துஜ்சே ஹாய் ராப்டா போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டில், & டிவி என்ற தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்றத் தொடரில் பவித்ரா என்ற பாத்திரத்திலும், பின்னர் 2016 ஆம் ஆண்டில், அவர் & டிவி நிகழ்ச்சியில் சௌபாக்யலட்சுமி என்றத் தொடரில் குகூ எனற பாத்திரத்திலும் நடித்தார். 2017 ஆம் ஆண்டில், கான் டில் பாலே ஓபராய் என்றத் தொடரில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்தார். மேலும் இஷ்காபாஷ் என்ற ஒரு நிகழ்ச்சியில் மோகினியாக நடித்தார். பின்னர் அவர் ஸ்டார் பிளஸ் நிகழ்ச்சியான ஜானா நா தில் சே தூர் என்றத் தொடரில் கங்கனாவாக நடித்தார்.

சாரா கான் தனது பிறந்த நாள் விழாவில்

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சாரா கான் ஒரு சுன்னி முஸ்லிம் பிரிவைச் சார்ந்தவர் ஆவார்.[12] அவருக்கு ஆயா கான் என்ற ஒரு சகோதரி உள்ளார்.[13] சாரா 2010 இல் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் இஸ்லாமிய திருமண விழாவில் ஷியா முஸ்லீமான அலி மெர்ச்சன்ட், என்ற தொலைக்காட்சி நடிகரை திருமணம் செய்துகொண்டார், ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரை விவாகரத்து செய்தார்.[14] இவரது நெருங்கிய நண்பர்கள் இத் திருமணத்திற்கு கலர்ஸ் தொலைக்காட்சி 5 மில்லியன் (US$63,000) ஊதியம் வழங்கியதாக தெரிவித்தனர். ஆனால் தொலைக்காட்சி நிறுவனம் இதை மறுத்ததுடன், திருமணம் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறியது.[15] சாரா விவாகரத்துக்குப் பிறகு திருமணத்தை ஒரு கனவு என விளித்தார்.[16] சச்சார் கா சாம்னா என்ற நிகழ்ச்சியில் மெர்ச்சன்ட் சாரவை தான் திருமணம் செய்து கொண்டு தனது வாழ்க்கையில் மிகப் பெரிய தவறை செய்துவிட்டதாக கூறினார்.[17]

குறிப்புகள்[தொகு]

  1. "Our hearts are already married to each other: Paras Chhabra". Timesofindia.indiatimes.com. 25 January 2013. பார்க்கப்பட்ட நாள் 5 March 2017.
  2. 2.0 2.1 2.2 "What makes Bidaai so popular". Rediff. 13 May 2008. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
  3. Behl, Tushar (30 September 2007). "I want to be like Kareena:Sara Khan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/tv-/I-want-to-be-like-KareenaSara-Khan/articleshow/2414661.cms. பார்த்த நாள்: 18 July 2014. 
  4. "Trolls ask Sara Khan to 'change religion' soon after she posted her bikini picture".
  5. "BIKINI BARRAGE Cruel trolls tell Muslim actress to change her religion after posting bikini photos".
  6. Bansal, Neelam (8 July 2009). "I want to play Amitabh’s daughter: Sarah". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/tv-/I-want-to-play-Amitabhs-daughter-Sarah/articleshow/4744147.cms. பார்த்த நாள்: 18 July 2014. 
  7. "Not looking for a career in Bollywood: Sara Khan". இந்தியன் எக்சுபிரசு. New Delhi. 27 December 2014. பார்க்கப்பட்ட நாள் 22 July 2014.
  8. "Sara Khan of Bidaai fame to enter Bigg Boss house this year!". பார்க்கப்பட்ட நாள் 4 August 2010.
  9. "Sara Khan to debut with 'M3' in Bollywood". Aninews.in. 16 May 2014 இம் மூலத்தில் இருந்து 17 May 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140517014352/http://www.aninews.in/newsdetail5/story168547/sara-khan-to-debut-with-039-m3-039-in-bollywood.html. பார்த்த நாள்: 12 July 2014. 
  10. "Video: Sara Khan ignores Angad Hasija's shocked reactions and flaunts her bikini bod with elan".
  11. "Sara Khan to become the first TV actress to do a daily soap in Pakistan". Timesofindia.indiatimes.com. 27 July 2016. பார்க்கப்பட்ட நாள் 5 March 2017.
  12. "Sara Khan: I will not be marrying 'again'". Timesofindia.indiatimes.com.
  13. "Bidaai fame Sara Khan bursts into tears as her younger sister Ayra leaves her house, post a big fight; See videos".
  14. "The Times of India: Latest News India, World & Business News, Cricket & Sports, Bollywood". The Times Of India இம் மூலத்தில் இருந்து 2013-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029215412/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-25/news-and-gossip/36527747_1_sara-khan-ali-merchant-paras-chhabra. 
  15. "Sara Khan and Ali Merchant to get paid to marry on 'Bigg Boss'". இந்தியா டுடே.
  16. "My marriage turned into a nightmare: Sara Khan". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்.
  17. "I married only for publicity: Ali Merchant". ஹிந்துஸ்தான் டைம்ஸ். Archived from the original on 2014-05-28. பார்க்கப்பட்ட நாள் 2019-04-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]