பேச்சு:மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சான்றுகள்[தொகு]

இக்கட்டுரை சர்ச்சைக்குரிய விசயமென்பதால், கவனமாக அரசு ஆவணங்கள் அக்கால செய்தி ஏடுகள் போன்றவற்றை சான்றாகக் கொண்டு உள்ளடக்கங்களைச் சேருங்கள். இக்கட்டுரையினையும், இதன் மூலமான ஆங்கில விக்கிக் கட்டுரையினையும் மிகக்கவனமாக இம்முறையில் உருவாக்கியுள்ளேன். ஆதரவாளர் / எதிர்ப்பாளர்கள், பொதுமேடை விவாதக்களங்கள், நடுநிலையின்றி சார்போடு சொல்லும் தளங்களை அடிப்படையாகக் கொண்டு தகவல்களைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டுகிறேன். இக்கால ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் தங்கள் வலைத்தளங்களில் “அப்போது இப்படி நடந்தது இப்படி நடந்தது இது தான் உண்மை” என்று எழுதுவதை ஆதாரமாகக் கொண்டு எதனையும் சேர்க்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அத்தகைய தளங்கள் தங்கள் தரப்பினை நியாயப்படுத்தியும் தங்களுக்குப் பிடிக்காத வரலாற்றுச் சாய்வை நியாயப்படுத்துவதையுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன.. --சோடாபாட்டில்உரையாடுக 04:04, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இத்திட்டம் தொடர்பாக தவறான வதந்தி பரப்பப்பட்டது என்று வெளியான மறுதரப்புச் செய்தியையும் இணைத்தால் படிப்பவர்களுக்கு இன்னும் தெளிவாக இருக்கும். படிப்பவர்களுக்கும் இதைப் பற்றி இன்னும் அறியத் தூண்டும். ஜூன் 16 அன்று வெளியான தினமலர் வாரமலரின் 8 மற்றும் 9 ஆம் பக்கத்தில் இது தொடர்பாக செய்தி வெளிவந்துள்ளது. இந்தச் சுட்டியைப் பாருங்கள். நன்றி. ஆர்.பாலா (பேச்சு) 11:23, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
அந்த வாரமலர் இணைப்பு நான் மேற்சொன்ன வகையான தளங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு. அந்துமணி எழுதும் பத்தியில் (கவனிக்க: gossip column என்ற வகையான பத்தியில்) “குப்பண்ணா”, “லென்ஸ் மாமா” போன்றோர் ”அக்காலத்தில் என்ன நடந்தது தெரியுமா” என்று கூறும் கருத்துகளாகக் கூறியுள்ளனர். அந்துமணி எழுதிய அந்தக் கட்டுரை “ராஜாஜி தாமாக முன்வந்து பதவியைத் துறந்தார்” என்று எழுதுவதிலிருந்தே அந்த கிசுகிசு பத்தியின் பக்கச்சார்பு புலனாகிறது. இது முரசொலியில் மு. கருணாநிதி உடன் பிறப்புக்கு இன்று எழுதும் கடித்ததிற்கு சமானமானது. (”உடன்பிறப்பே அன்று ஆச்சாரியார் பார்ப்பன சதியால் திராவிடர்களைப் பாமரர் ஆக்கப் பார்த்தார்”). நெடுநாட்களாக இதன் ஆங்கில விக்கிக் கட்டுரை இப்படியான தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டு இரு தரப்பினரும் சண்டையிடும் இடமாக இருந்தது. எனவே தான் அரசு ஆவணங்கள். 1952-53 சட்டமன்ற விவாதங்கள், அக்கால இதழ் செய்திகள், ராஜாஜியின் பேரன் எழுதிய அவரது வாழ்க்கை வரலாறு போன்ற தரவுகளைக் கொண்டு இதனை மாற்றி எழுதினேன்.
“தவறான வதந்தி” / “பிராமண சதி” என்ற இரு தரப்பு சார்பு நிலைகளை மீறி என்ன நடந்தது. (”ராஜாஜி இதை செய்தார், திமுக அதனை இப்படி வர்ணித்தது”) என்று எழுத வேண்டும். கட்டுரையின் முதல் பத்தியிலேயே “குலக்கல்வித் திட்டம்” என்பதே எதிர்ப்பாளர்கள் வைத்த பெயர் தான் என்பதைத் தெளிவு படுத்தி, பின் ராஜாஜி அரசு நடுவண் அரசின் கல்வித்துறைக்கு அளித்த அறிக்கையினைக் கொண்டே அப்படியே எழுதியிருக்கிறேன். இத்தமிழ்க் கட்டுரை சற்று சுருக்கி மொழிபெயர்க்கப்பட்டதால், (கட்டுரைப் போட்டிக்கும் 500 சொற்கள் உச்ச வரம்பு) இரு தரப்பு வாத விவாதங்கள் முழுமையாகத் தராமல் விட்டுவிட்டேன். மறுதரப்பை அளிக்க ஆங்கில விக்கியில் உள்ளது போல ஆதரவாளர் தரப்பினையும் (நேரு, ராஜேந்திர பிரசாத் முதல் பருலேக்கர் குழு, நடுவண் கல்வி ஆலோசனை வாரியம் வரை பலரும் ஆதரித்தனர்). மொழிபெயர்த்து விடலாம். இரண்டு மூன்று நாட்களில் செய்து முடிக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:41, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி. வாரமலர் இணைப்பைக் கொடுத்ததின் காரணம், இணையத்தில் அது ஒன்றுதான் என் கையில் சிக்கியது. பருலேக்கர் குழுவின் அறிக்கையை அதியமான் என்பவரின் வலைப்பூவில் படித்திருக்கிறேன்.இருதரப்பையும் பதிவு செய்வதின் மூலம் பொதுவாக இந்தக் குலக்கல்வித் திட்டம் என்ற பெயர் இட்டுக்கட்டப்பட்டது என்ற பெயரிலும் செய்திகள் வந்தது என்பது படிப்பவருக்குத் தெரியவராலாம். கல்கியில் கூட இவ்வாறான பதிவு வந்ததாக விடுதலை இணைய இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.--ஆர்.பாலா (பேச்சு) 14:35, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]