திருமுகத்தலை பன்னகாபரணர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமுகத்தலை பன்னகாபரணர் கோயில் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் திருத்துறைப்பூண்டியிலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [1] இவ்வூர் பன்னத்தெரு என்று அழைக்கப்படுகிறது.[2]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் பன்னகாபரணேசுவரர், இறைவி சாந்தநாயகி. [3]

சிறப்பு[தொகு]

முகலிங்கம், முன்பு முகத்தலைலிங்கம் என்று அழைக்கப்பட்டது. அதனடிப்படையில் பின்னாளில் முகத்தலை என்றானதாகக் கூறுவர். இதற்கேற்றவாறு உள் திருச்சுற்றில் முகலிங்கம் ஒன்று உள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016
  2. 2.0 2.1 திருமுகத்தலை
  3. பு.மா. ஜெயசெந்தில்நாதன், திருமுறைத் தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009