கவிதா கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிதா கிருஷ்ணன்
பிறப்புகவிதா கிருஷ்ணன்
1973 (அகவை 50–51)[1]
குன்னூர், தமிழ்நாடு[1]
தேசியம்இந்தியா
கல்விசெயிண்ட். சேவியர் கல்லூரி, மும்பை, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
பணிசெயலாளர், தலைமைக்குழு உறுப்பினர், பத்திரிகை ஆசிரியர்
அமைப்பு(கள்)அகில இந்திய பெண்கள் முன்னேற்றச் சங்கம்
அரசியல் கட்சிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)

கவிதா கிருஷ்ணன் (Kavita Krishnan) அகில இந்திய பெண்கள் முன்னேற்றச் சங்கத்தின் செயலாளர் ஆவார் (AIPWA).[2] மேலும், கிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (சிபிஐ-எம்எல்),[3] தலைமைக்குழு உறுப்பினரும் ஆவார். மற்றும் அதன் மாதாந்திர வெளியீடான "லிபரேசன்" பத்திரிகையின் ஆசிரியர் ஆவார்.[4] இவர் ஒரு பெண்களின் உரிமைகள் ஆர்வலர்; மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை பிரச்சினையான, 2012 தில்லி கும்பல் கற்பழிப்பு சம்பவத்தில் நிர்பயா இறந்த போது, பெண்களின் நலனுக்காக எதிர்த்து போராடியவர்.[5]

ஆரம்ப பின்னணி மற்றும் சொந்த வாழ்க்கை[தொகு]

கவிதா கிருஷ்ணன் தமிழ்நாட்டிலுள்ள குன்னூரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். இவர், சத்தீஸ்கர், பிலாய் நகரில் வளர்ந்தார். இவரது தந்தை சத்தீஸ்கரிலுள்ள ஒரு எஃகு ஆலை ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றினார். இவரது தாயிடம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார். கவிதா கிருஷ்ணன் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுதத்துவமாணி (எம்.பில்.) பட்டம் பெற்றார்.

சுயசரிதை[தொகு]

ஆரம்பகால செயற்பாடு[தொகு]

மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் அருண் ஃபெர்ரீரா தலைமையிலான ஒரு நாடகக் குழுவில் கவிதா கிருஷ்ணன் பங்குபெற்று , தெரு நாடகங்களிலும் எதிர்ப்புக்களிலும் பங்கேற்றார். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தபோது, இவருக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. இவர் தனது முதுகலை பட்டத்தை இப் பல்கலைக் கழகத்தில் பெற்றார். 1995 ல் மாணவர் சங்கத்தின் கூட்டு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இவர், ஆல் இந்தியா ஸ்டூடண்ட்ஸ் அசோசியேசன் அமைப்பின் உறுப்பினராக இருந்தார்.[6] ஜெ.என்.யூ., மற்றும் ஏ.ஐ.எஸ்.ஏ. வின் உறுப்பினரான மாணவர் தலைவர் சந்திரசேகர் பிரசாத்தை சந்தித்தார். இவர் இன்றும் கூட, ஜெ.என்.யூ. மாணவர்களால் "சந்தூ" என அன்புடன் அழைக்கப்படுகிறார். சந்திரசேகர் சிபிஐ (எம்.எல்) தலைவர் ஷியாம் நாராயண் யாதவுடன் 31 மார்ச் 1997 அன்று பீஹாரில் உள்ள சிவான் என்னுமிடத்தில் நடந்த ஒரு தெருக்கூட்டத்தில் உரையாற்றும் பொழுது கொல்லப்பட்டார். இச் சம்பவம் கவிதா கிருஷ்ணனின் வாழ்க்கையில் தீவிரமான திருப்பத்தை ஏற்படுத்தியது. கவிதா கிருஷ்ணன் கூட்டு செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் ஜே.என்.யு மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்த சந்திரசேகர், இவரை அங்கீகரித்து, பெண்களின் உரிமைகள் குறித்து முழுநேர வேலை செய்யுமாறு பரிந்துரைத்தார்.[7] சந்தூவின் படுகொலைக்கு பின்னர், ஆயிரக்கணக்கான ஜே.என்.யூ மாணவர்கள், வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றனர்; முன்னாள் ராஷ்டிரிய ஜனதா தளம் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாகுபூடின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தனர்.[8] கவிதா கிருஷ்ணன் தில்லி ஆர்ப்பாட்டங்களில் ஒரு பகுதியாக இருந்தார். அங்கு மாணவர் எதிர்ப்பாளர்கள் பீகார் பவனில் லலூ யாதவ் நபர்களால் தாக்கப்பட்டனர்.[9] ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதால் அவர் எட்டு நாட்களை சிறையில் கழித்தார்.[10][11]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "The Mass Mobiliser". Archived from the original on 12 திசம்பர் 2015.
  2. "AIPWA blog". AIPWA. Archived from the original on 31 May 2014. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
  3. "CPI(ML) Politburo Member Comrade Swapan Mukherjee Cremated Today".
  4. "CPI (ML) Liberation | Links International Journal of Socialist Renewal". Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-02-22.
  5. "Interview with Kavita Krishnan". The Diplomat. Archived from the original on 23 May 2014. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
  6. "The making of an activist". The Indian Express. Archived from the original on 2 July 2015. பார்க்கப்பட்ட நாள் 25 March 2015.
  7. "Kavita Krishnan on Delhi gangrape". India Today. Archived from the original on 12 December 2015. பார்க்கப்பட்ட நாள் 25 March 2015.
  8. "Three sentenced to life in Chandrasekhar murder case" இம் மூலத்தில் இருந்து 27 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140227080204/http://www.thehindu.com/news/national/other-states/three-sentenced-to-life-in-chandrasekhar-murder-case/article3220897.ece. பார்த்த நாள்: 25 March 2015. 
  9. "Red Island Erupts". Outlook. Archived from the original on 4 April 2015. பார்க்கப்பட்ட நாள் 25 March 2015.
  10. "Tongueless in Tihar". Tehelka. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 25 March 2015.
  11. "INDIA: Student leader arrested for 1997 protest". Green Left Weekly. Archived from the original on 23 October 2015. பார்க்கப்பட்ட நாள் 25 March 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_கிருஷ்ணன்&oldid=3586531" இலிருந்து மீள்விக்கப்பட்டது