லட்சுமி சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லட்சுமி சங்கர்
இயற்பெயர்லட்சுமி சாஸ்திரி
பிறப்பு(1926-06-16)16 சூன் 1926
பிறப்பிடம்இந்தியா
இறப்பு30 திசம்பர் 2013(2013-12-30) (அகவை 87)
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)பாடகி, நடன மங்கை

லட்சுமி சங்கர் (Lakshmi Shankar) (ஜூன் 16, 1926 - 30 டிசம்பர் 2013) என்கிற லட்சுமி சாஸ்திரி , பாட்டியாலா கரானாவின் புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகி ஆவார். இவர் பாடியுள்ள காயல் , தும்ரி , மற்றும் பஜனைகள் மூலமாக அறியப்படுகிறார் .[1][2][3] இவர் சிதார் வீரர் ரவி ஷங்கரின் மைத்துனி ஆவார். மற்றும் வயலின் வாசிப்பாளரான எல். சுப்ரமணியத்திற்கு மாமியார் ஆவார். (இவரது மகள் விஜி (விஜயஸ்ரீ ஷங்கர்) சுப்ரமணியம், எல். சுப்ரமணியத்தின் முதல் மனைவி ஆவார்.

சுயசரிதை[தொகு]

1926 இல் பிறந்த லட்சுமி நடனத்தின் வாயிலாகத் தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். 1939 ஆம் ஆண்டில், உதய ஷங்கர் தனது நடனக் குழுவுடன் சென்னை வந்தபோது, இவர், இந்திய பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட ஷங்கரின் நடன பாணியை கற்றுக் கொள்வதற்காக அல்மோரா மையத்தில் சேர்ந்து, குழுவின் ஒரு பாகமாக ஆனார். 1941 இல், உதய ஷங்கரின் சகோதரரான (ராஜு என்ற புனைபெயர்) ராஜேந்திராவைத் திருமணம் செய்து கொண்டார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், லட்சுமி நடனத்தை விட வேண்டியிருந்தது. ஏற்கனவே கர்நாடக இசை பின்னணி இருந்ததால், இந்துஸ்தானி பாரம்பரிய இசையை உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கானிடம் பல ஆண்டுகளாக கற்றார். பின்னர், ரவி ஷங்கர், சித்தார் மேஸ்ட்ரோ, ராஜேந்திரா மற்றும் உதயின் இளைய சகோதரர் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார்.

1974 ஆம் ஆண்டில், இந்தியாவில் இருந்து ரவி ஷங்கரின் இசை விழாவின் ஒரு பகுதியாக ஐரோப்பாவில் லட்சுமி இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதே வருடம், ஷங்கர் மற்றும் ஜார்ஜ் ஹாரிசன் ஆகியோருடன் வட அமெரிக்காவிற்குச் சென்றார், அவர் ஷங்கர் ஃபேமிலி & ஃப்ரெண்ட்ஸ்; (1974) இசைத் தொகுப்பைத் தயாரித்தவர். இதில் லட்சுமி பாடிய பாப் இசைப் பாடலான " ஐ ஆம் மிஸ்ஸிங் யூ " வும் அடங்கும். சுற்றுப்பயணத்தின் போது ரவி ஷங்கரின் மாரடைப்பைத் தொடர்ந்து, அவர் இசைக்கலைஞர்களின் குழுவை வழி நடத்தினார்.[4]

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள முதன்மையான நடன நிறுவனமான சக்தி ஸ்கூல் ஆஃப் பரதநாட்டியத்திற்காக , லட்சுமி தனது திறமை மற்றும் இணக்கத்தன்மையைபரதநாட்டியத்திற்கான இசையமைப்பின் மூலமாகக் காட்டியுள்ளார்.

டிசம்பர் 30, 2013 அன்று கலிபோர்னியாவில் லட்சுமி சங்கர் இறந்தார்.[5]

குறிப்புகள்[தொகு]

  1. "Making music, with love". The Hindu. 1 January 2001. http://www.hindu.com/2001/01/01/stories/09010702.htm. பார்த்த நாள்: 21 March 2013. 
  2. "Ageless artiste, timeless charm...". The Hindu. 24 March 2006 இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131105105347/http://www.hindu.com/fr/2006/03/24/stories/2006032402010300.htm. பார்த்த நாள்: 21 March 2013. 
  3. "Pop And Jazz Guide: Lakshmi Shankar, Shweta Jhaveri, Anuradha Pal". 2 April 2004. https://www.nytimes.com/2004/04/02/movies/pop-and-jazz-guide-036021.html?pagewanted=4&src=pm. பார்த்த நாள்: 21 March 2013. 
  4. Lavezzoli, Peter (2006). The Dawn of Indian Music in the West. Continuum International Publishing Group. பக். 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8264-1815-5. https://books.google.com/books?id=OSZKCXtx-wEC&pg=PA196. 
  5. "Classical Vocalist Lakshmi Shankar Passes Away". Indiawest.com. 1926-06-16. Archived from the original on 2014-01-03. பார்க்கப்பட்ட நாள் 2014-01-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_சங்கர்&oldid=3448427" இலிருந்து மீள்விக்கப்பட்டது