எலினா சையட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலினா சையட்சு
Elena Zaiatz
நாடு சோவியத் ஒன்றியம்
 பெலருஸ்
 உருசியா
பிறப்புசூன் 16, 1969 (1969-06-16) (அகவை 54)
மின்சுக், பேரனோவிச்சி
பட்டம்பெண் கிரான்டு மாசுட்டர் (1988), அனைத்துலக மாசுட்டர் (2005)
தரவரிசை2334 (அக்டோபர் 2017)
உச்சத் தரவரிசை2449 (சூலை 2012 )

எலினா சையட்சு (Elena Zaiatz) என்பவர் உருசிய நாட்டின் பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார்[1]. எலினா சயாட்சு என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். இவர் 1969 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் நாள் பிறந்தார். பெண் கிராண்டு மாசுட்டர் என்ற பட்டத்துடன் இவர் சதுரங்கம் ஆடி வருகின்றார். அனைத்துலக சதுரங்கப் போட்டிகளில் எலினா பெலாரசு மற்றும் உருசியா ஆகிய இரண்டு நாடுகளின் சார்பாகவும் பங்கேற்று விளையாடி வருகிறார். 1986 முதல் 2006 ஆம் ஆண்டு வரை இவர் பெலாரசு நாட்டிற்காக விளையாடி வந்தார்[2]. 2007 ஆம் ஆண்டு முதல் உருசியாவிற்காக எலினா விளையாடி வருகிறார்[3]. பெலாரசு மாநில பல்கலைக்கழகத்தில் எலினா தன்னுடைய பட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

1994-1996 ஆன் ஆண்டில் பெலாரசு நாட்டு சார்பாக சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் இவர் விளையாடினார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன் பட்டப்போட்டியில் உருசியாவின் சார்பாக விளையாடினார்.[4]. 1988 இல் பெலாரசின் தேசிய சதுரங்க சாம்பியன் பட்டத்தையும், இதே ஆண்டில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோர் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தையும் இவர் வென்றார்[5].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Elena Zaiatz - Chess Games". chesstempo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-08.
  2. "Elena Zayac chess games - 365Chess.com". www.365chess.com. பார்க்கப்பட்ட நாள் 2017-11-08.
  3. "Elena Zaiatz chess games - 365Chess.com". www.365chess.com. பார்க்கப்பட்ட நாள் 2017-11-08.
  4. Ludens@freechess.org. "FICS Games Database - Statistics for IMZaiatz(IM)". www.ficsgames.org. பார்க்கப்பட்ட நாள் 2017-11-08.
  5. "Zayac, Elena (Zaiatz) - The Chesspedia" (in en-US). The Chesspedia. http://www.thechesspedia.com/zayac-elena-zaiatz/. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலினா_சையட்சு&oldid=3859112" இலிருந்து மீள்விக்கப்பட்டது