மெது வடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெது வடை
உளுந்து வடை
மாற்றுப் பெயர்கள்வடா, வடை
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஆந்திர பிரதேசம், கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, இலங்கை
முக்கிய சேர்பொருட்கள்பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு, வெங்காயம்

மெது வடை அல்லது உளுந்து வடை என்பது உளுந்து மாவினால் செய்யப்படும் தென்னிந்திய உணவாகும். இது வட்டமாக நடுவில் எளிதாக வேகுதற்காக ஓட்டையுடன் மொறுகலான வெளிப்புறமும் மிருதுவான உட்பகுதியும் கொண்டது.[1] புகழ்பெற்ற தென்னிந்திய[2] மற்றும் இலங்கைத் தமிழ் உணவுகளில் ஒன்றான இது, காலை உணவாகவும் சிற்றுண்டியாகவும் உட்கொள்ளப்படுகிறது.[1][3]

சொற்பிறப்பியல்[தொகு]

கன்னடத்தில் "மெது'" என்றால் " மென்மையான" என்று பொருள்.[1][4] எனவே, மெது வடை என்றால் மென்மையான வடை என்று பொருள்படும். இது வெறுமனே வடை என்றும் உணவுப் பட்டியலில் குறிப்பிடப்படுவதும் உண்டு.[5]

இதன் வேறு பெயர்கள் மெது வடை, உளுந்து வடை (தமிழ்), உதின்ன வடே (கன்னடம்), கரேலு (தெலுங்கு), உளுனு வடா (மலையாளம்).[6][7]

வரலாறு[தொகு]

வீர் சாங்வியின் கூற்றின்படி, மெது வடையின் தோற்றம் தற்போதைய கர்நாடகத்தின் மாதுர் என்ற ஊரில் தொடங்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த உணவு வகை மும்பை உடுப்பி உணவகங்களால் தென்னிந்தியாவைத் தாண்டி பிரபலமானது.[5]

செய்முறை[தொகு]

மெதுவடை உளுந்து மாவினால் செய்யப்படுகிறது.[1] உளுந்தைத் தண்ணீரில் பலமணி நேரம் ஊர வைத்து, பின் மாவாக அரைக்கப்படுகிறது. பின், மாவில் பெருங்காயம், வெந்தயம், இஞ்சி, சீரகம், மிளகு, கரிவேப்பிலை, பச்சை மிளகாய், தேங்காய்த் துண்டுகள் சேர்க்கப்படுகின்றன. பின், அது வட்டமாக நடுவில் குழியுடன் தட்டப்பட்டு, பொன்னிறமாகும் வரை எண்ணெயில் பொறித்து எடுக்கப்படுகிறது.[1][2]

இவை பொறிப்பதற்கு மாறாக சுட்டும் எடுக்கலாம்.[1] உளுந்திற்குப் பதிலாக கொண்டைக்கடலையிலும் துவரம் பருப்பிலும் மைசூர் பருப்பிலும் செய்யலாம்.[8]

பரிமாறுதல்[தொகு]

மெது வடை தேங்காய்ச் சட்டினி, சாம்பாருடன் பாிமாறப்படுகிறது. பெரும்பாலும் இட்லியுடன் காலை உணவாக உண்ணப்படுகிறது. மதிய உணவின் தொடக்கத்திலும் சிற்றுண்டியாகவும் உண்ணப்படுகிறது.[2][9] தயிருடன் சேர்த்து தயிர் வடையாகப் பரிமாறப்படுவதும் உண்டு.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Richa Hingle (2015). Vegan Richa's Indian Kitchen: Traditional and Creative Recipes for the Home Cook. Andrews McMeel. p. pt122. ISBN 9781941252109.
  2. 2.0 2.1 2.2 Hutnyk, John (2014-02-01), "NDTV 24×7 Remix", Channeling Cultures, Oxford University Press: 177–200, ISBN 9780198092056, பார்க்கப்பட்ட நாள் 2019-03-13
  3. Hingle, R. (2015). Vegan Richa's Indian Kitchen: Traditional and Creative Recipes for the Home Cook. Vegan Heritage Press, LLC. p. pt79. ISBN 978-1-941252-10-9.
  4. Alevur Sriramana Acharya (1971). Barkur Kannada. Deccan College. p. 4.
  5. 5.0 5.1 Vir Sanghvi (2004). Rude Food: The Collected Food Writings of Vir Sanghvi. Penguin India. pp. 110–111. ISBN 9780143031390.
  6. Siva Sadasivan (2015). Riding God's Axe. Leadstart. p. 21. ISBN 9789352013609.
  7. Alamelu Vairavan (2010). Chettinad kitchen[தொடர்பிழந்த இணைப்பு]. Westland. p. 30. ISBN 9789380283883.
  8. K. T. Achaya (1994). Indian Food: A Historical Companion. Oxford University Press. p. 127. ISBN 978-0-19-563448-8.
  9. Clavel, Anne (2016), "Logic of Syād-Vāda", Handbook of Logical Thought in India, Springer India: 1–22, ISBN 9788132218128, பார்க்கப்பட்ட நாள் 2019-03-13
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெது_வடை&oldid=3476670" இலிருந்து மீள்விக்கப்பட்டது