வாமனன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாமனன்
இயக்கம்ஐ. அகமது
தயாரிப்புஆர். ரவீந்திரன்
கதைஐ. அகமது
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஅரவிந்த் கிருஷ்ணா
படத்தொகுப்புஎஸ். சுராஜ்கவி
கலையகம்ட்ரீம் வேலி கார்ப்பரேசன்
வெளியீடு10 சூலை 2009 (2009-07-10)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாமனன் 2009 ஆம் ஆண்டு ஜெய், ரகுமான், சந்தானம், லட்சுமி ராய் மற்றும் அறிமுக நாயகி பிரியா ஆனந்த்[1][2] நடிப்பில், ஐ. அஹமது இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், பி. கபிலன் தயாரிப்பில், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் வெளியான தமிழ் திரைப்படம்[3]. இப்படம் டேஞ்சரஸ் லவ்வர் என்ற பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

கதைச்சுருக்கம்[தொகு]

ஆனந்த் (ஜெய்) சேலத்திலிருந்து வேலைதேடி சென்னை வருகிறான். தன் நண்பன் சந்துரு (சந்தானம்) அறையில் தங்கி திரைப்பட நடிகராக முயற்சிக்கிறான். சந்துரு தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிப்பதிவாளராக பணிசெய்கிறான். ஆனந்த், திவ்யாவைக் (பிரியா ஆனந்த்) காதலிக்கிறான்.

முதலமைச்சராக விரும்பும் அமைச்சர் அன்பு செழியன் (சம்பத் ராஜ்) தன் விருப்பத்திற்குத் தடையாக இருக்கும் அடுத்த முதலமைச்சராக வர வாய்ப்புள்ள மூத்த அமைச்சர் விடுதலையைக் (டெல்லி கணேஷ்) கொல்கிறான். அன்பு செழியன் கொலை செய்வதை அவனுக்குத் தெரியாமல் விளம்பரப்பட இயக்குனர் வினோத் படம் பிடித்துவிடுகிறான். ஆனந்த் விளம்பரப் பட நாயகியான பூஜாவுடன் (லட்சுமி ராய்) நட்பு கொள்கிறான். வினோத் பதிவுசெய்த காணொளியைப் பார்க்கிறாள் பூஜா . அதைக் காணும் அவர்கள் அத்தகவலை காவல் ஆய்வாளர் கைலாசத்திடம் (தலைவாசல் விஜய்) தகவல் தெரிவிக்கிறார்கள். அதைக் கைப்பற்றிவர கைலாசம் அனுப்பும் ஆட்கள் வினோத்தைக் கொல்கின்றனர். அந்த காணொளிப் பதிவு தொடர்வண்டியில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஆனந்த் கையில் கிடைக்கிறது. அதை அவன் திவ்யாவின் பையில் மறைக்கிறான்.

நடிகராக முயற்சி செய்யும் ஆனந்த் தான் பார்க்கும் நபர்களின் நடவடிக்கைகளை உற்றுநோக்கி அதைத் தன் நடிப்பில் வெளிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்றெண்ணி ஜான் விஜய்யுடன் (ரகுமான்) பழகுகிறான். ஆனந்தை நடிகனாக்குவதாக வாக்குறுதி தரும் ஜான், அவனை ஒரு வீட்டுக்கு அழைத்துச்சென்று திருடனைப் போல் அந்த வீட்டிற்குள் நுழைந்து ஒரு பொருளைத் திருடிவருமாறு கூறுகிறான். அதை நடிப்பு என்றெண்ணி அந்த வீட்டினுள் செல்லும் ஆனந்த் அங்கு பூஜா இறந்து கிடப்பதைக் காண்கிறான். கொலைப்பழி ஆனந்தின் மீது விழுகிறது. இது தன்னைக் கொலைப்பழியில் சிக்கவைக்க ஜான் நடத்திய நாடகம் என்று புரிகிறது. தன்னை நிரபராதி என்று நிரூபித்துத் தண்டனையிலிருந்து தப்பினானா? என்பது மீதிக்கதை.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. பாடலாசிரியர் நா.முத்துக்குமார்[4][5][6].

வ. எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 எதோ செய்கிறாய் ஜாவித் அலி, சவும்யா ராவ் 4:50
2 லக்கி ஸ்டார் பிளாஸி, சுவி, முகமது அஸ்லம் 4:14
3 மணி மணி டி.ஜே. ஏர்ல், ப்ரீத்தி 4:28
4 ஒரு தேவதை ரூப் குமார் ரத்தோட் 4:56
5 எங்கே போவது விஜய் ஏசுதாஸ் 3:55

வெளியீடு[தொகு]

படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் சன் தொலைக்காட்சி பெற்றது[7].

விமர்சனம்[தொகு]

தினமலர்: வாமனன் - வசீகரன்[8].

விகடன்: 100க்கு 40 மதிப்பெண் வழங்கியுள்ளது[9].

மேற்கோள்கள்[தொகு]

  1. "பிரியா ஆனந்த் அறிமுகம்".
  2. "பிரியா ஆனந்த் அறிமுகம்".
  3. "வாமனன்".
  4. "பாடல் வெளியீடு".
  5. "சிறந்த 10 பாடல்கள்".
  6. "2009 இல் சிறந்த பாடல்கள்".
  7. "சன் தொலைக்காட்சி".
  8. "விமர்சனம்".
  9. "விமர்சனம்".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாமனன்_(திரைப்படம்)&oldid=3660881" இலிருந்து மீள்விக்கப்பட்டது