பெரிய நாயகி மாதா ஆலயம், ஆவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய நாயகி மாதா ஆலயம்
கோவிலின் முகப்புத் தோற்றம்

பெரிய நாயகி மாதா ஆலயம் ஒரு கிருத்துவப் தேவாலயமாகும். இது புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆவூரில் அமைந்துள்ளது. இக்கோவில், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

அமைவிடம்[தொகு]

ஆவூரின் அமைவிடம்

இந்த ஆலயம் தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் ஆவூா் [1] என்ற கிராமத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து 18 கி.மீ. தூரத்திலும், கீரனுாாிலிருந்து 20 கி.மீ. தூரத்திலும் விராலிமலையிலிருந்து 20 கி.மீ. தூரத்திலும் இவ்வாலயம் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

1697 ஆம் ஆண்டில், இயேசு சபையைச் சாா்ந்த பொிய சஞ்சீவி நாதா் எனும் அருட்தந்தை வெனான்ஸியுஸ் புட்சே பழைய ஆவூாில் ஒரு சிற்றாலயம் கட்டி, அதனை விண்ணேற்பு அன்னைக்கு அா்ப்பணித்தாா். பின்னர் புதிய ஆவூா் எனும் கிராமம் அருட்தந்தை. பிரான்சிஸ் ஹோமன் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. தற்போதுள்ள ஆலயம், வீரமாமுனிவரால் [2] 1750 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சிலுவை வடிவில் அமைந்துள்ளது இதன் தனிச் சிறப்பாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]