டுமாஸ் கடற்கரை

ஆள்கூறுகள்: 21°04′45″N 72°42′55″E / 21.07917°N 72.71528°E / 21.07917; 72.71528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டுமாஸ் கடற்கரை
ડુમસ બીચ
தர்யா கணேசர் கோவில் அருகில்
வகைசிறிய-நகர, மணலுள்ள கடற்கரை
அமைவிடம்அரபிக்கடல், கொங்கண் கடற்கரை
Nearest cityகுசராத்து, சூரத்து
ஆள்கூறு21°04′45″N 72°42′55″E / 21.07917°N 72.71528°E / 21.07917; 72.71528
பரப்பு2 km (1.2 mi)×500 m (1,600 அடி) (max)
Operated byசூரத் மாநகராட்சி

டுமாஸ் கடற்கரை (Dumas Beach) என்பது அரபிக் கடலோரம் உள்ள ஒரு கடற்கரையாகும். இது குசராத் மாநிலத்தின் சூரத் நகரத்தின் தென்மேற்கில் 21 கிலோமீட்டர் (13 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[1] இது தென் குசராத்தின் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது. டுமாஸ் கடற்கரையானது, இந்தியாவில் அமானுசிய இடங்களாக கருதப்படும் இடங்களில், 35வது இடத்தை வகிக்கிறது.[2][3]

கவரும் அம்சங்கள்[தொகு]

டுமாஸ் கடற்கரைக்கு அருகில் தர்யா கணேசர் கோவில் உள்ளது. இங்கு உள்ள கடைகளில் பஜ்ஜி, பாவ் பாச்சி, சுட்ட இனிப்புச் சோளம் போன்ற இந்திய தின்பண்டங்களுடன், சீன உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. சைவ உணவை விரும்புபவர்களுக்கும் சீன, இந்திய உணவுகள் இங்கு கிடைக்கின்றன. மொராஜி தேசாய் சாலை சந்திப்பில் கழிப்பறை வசதிகள் உள்ளன. அண்மையில் இந்தியப் பிரதமரான நரேந்திர மோதியால் "மொராரி தேசாய்" பெயரிலான சூரத் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. சூரத்தின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை இங்கிருந்து விரைவில் கண்டுவர இயலும்.

கடற்கரையின் வினோதங்கள்[தொகு]

இந்த கடற்கரை மணலில் இரும்புத் தாது அதிகமாக உள்ளதால் கடற்கரை மணலும், கரைக்கு அருகில் உள்ள கடல் நீரும் கருப்பு நிறம் கொண்டதாக காட்சியளிக்கின்றன. இந்த கடற்கரையில் இரவு நேரத்தில் பேய்கள் நடமாடுவதாகவும், விநோதமான குரல்கள் கேட்பதாகவும், இரவில் கடற்கரைக்குவரும் மனிதர்கள் மாயமாகிவிடுவதாகவும் பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். இந்தக் கடற்கரையானது ஒரு காலத்தில் இடுகாடாக இருந்ததாக கருதப்படுகிறது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "(Unknown)". October 2014.{{cite web}}: CS1 maint: url-status (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "35 Most Haunted Places in India: Real Stories and places". Holidify.com. Archived from the original on 2018-07-04. பார்க்கப்பட்ட நாள் 2019-03-04.
  3. 3.0 3.1 "PHOTOS: 10 most haunted places in India". Daily Bhaskar. 2013-04-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டுமாஸ்_கடற்கரை&oldid=3931232" இலிருந்து மீள்விக்கப்பட்டது