பிளிஸ்டகேந்தா கண்ணு (நண்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிளிஸ்டகேந்தா கண்ணு (Pleistacantha kannu) பிளிஸ்டகேந்தா என்ற பேரினத்தைச் சேர்ந்த ஒரு ஆழ்கடல் நண்டாகும். இது சிதம்பரத்துக்கு அருகில் உள்ள பரங்கிப்பேட்டை தென்கிழக்கு இந்திய வங்காள விரிகுடா பகுதியில் புதியதாக கண்டறியப்பட்ட ஆழ்கடல் சிலந்தி நண்டு வகை ஆகும்.[1] இந்த அரியவகை நண்டுக்கு, கணுக்காலிகள் ஆய்வில் வல்லுநரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் உயிரியல் உயராய்வு மைய முன்னாள் இயக்குநருமான மறைந்த பேராசிரியர் முனைவர் கண்ணுப்பாண்டி அவர்களின் நினைவாக பிளிஸ்டகேந்தா கண்ணு என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிளிஸ்டகேந்தா வகை நண்டுகள் ஏறக்குறைய 300 மீட்டருக்கும் கூடுதலான ஆழத்தில் ஆக்சிசன் குறைவான பகுதியில் வாழும் தகவமைப்பைப் பெற்றவை. இந்த வகை நண்டுகள், அதன் வாழ்வின் பெரும்பகுதியை உணவுதேடவே செலவழிக்கின்றன. ஏனென்றால் இவற்றால் நீந்த இயலாது. கடலின் அடிப்பரப்பில் மெதுவாக நடந்து செல்லவும், பாறைகளை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளவும் ஏற்றதான நீண்ட கால்களையும் கூரிய நகங்களையும் இவை பெற்றுள்ளன. மக்கிய தாவரங்கள், பாசி போன்றவையே இவற்றின் முக்கிய உணவு ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A new large oregoniid spider crab of the genus Pleistacantha Miers, 1879, from the Bay of Bengal, India (Crustacea, Brachyura, Majoidea)". கட்டுரை. zookeys.pensoft.net. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2018.
  2. சில்வியன் (30 சூன் 2018). "அண்ணாமலை 'கண்ணு!'". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2018.