முப்புளோரமீன் ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்புளோரமீன் ஆக்சைடு
இனங்காட்டிகள்
13847-65-9
ChemSpider 24508
InChI
  • InChI=1S/F3NO/c1-4(2,3)5
    Key: UDOZVPVDQKQJAP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 26304
SMILES
  • [N+]([O-])(F)(F)F
பண்புகள்
F3NO
வாய்ப்பாட்டு எடை 87.00 g·mol−1
உருகுநிலை −87.5 °C (−125.5 °F; 185.7 K)
கொதிநிலை −161 °C (−258 °F; 112 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

முப்புளோரமீன் ஆக்சைடு (Trifluoramine oxide or Nitrogen oxide trifluoride) என்பது (F3NO) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வலிமையான புளோரினேற்ற திறன் கொண்ட கனிமச் சேர்மம் ஆகும்.

தயாரிப்பு[தொகு]

முப்புளோரமீன் ஆக்சைடானது 1966 ஆம் ஆண்டில் இரண்டு வெவ்வெறு குழுக்களால் கண்டறியப்பட்டது. நைட்ரசன் முப்புளோரைடுடன் ஆக்சிசன் சேர்ந்த கலவையில் மின்னிறக்கம் செய்யும் போது தயாரிக்கப்படுவது ஒரு முறையாகும். குறைவான அளவில் விளைபொருட்களைத் தரும் மற்றொரு முறையானது உயர் உலோகங்களின் புளோரைடுகளோடு (IrF6 அல்லது PtF6) நைட்ரிக் ஆக்சைடை வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படும் முறையாகும்.[1] இச்சேர்மமானது வாலைவடித்தல் மூலம் பிரித்தெடுக்கப்பட்டு பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசல் மூலமாக தூய்மைப்படுத்தப்படுகிறது.[1]

இச்சேர்மத்தைத் தயாரிப்பதற்கான மாற்று முறையானது புளோரினில் நைட்ரிக் அமிலத்தை எரிக்கச் செய்து பின்னர் உடனடியாகக் குளிர்வித்தல் ஆகும்.[2] மற்றுமொரு தயாரிப்புமுறையானது புளோரின் மற்றும் நைட்ரோசைல் புளோரைடினை ஒளிவேதிய வினைக்கு உட்படுத்துவதாகும்.

F2 + FNO → F3NO.

இந்த வினையானது, இந்த வினையினை வெப்பப்படுத்துவதன் மூலமும் நிகழ்த்த முடியும். ஆனால், புளோரினை அதைக் கொண்டிருக்கும் கொள்கலனுடன் வினைபுரியாமல் வைத்திருப்பது மிகவும் கடினமான காரியம் ஆகும். [3]மற்றுமொரு தயாரிப்பு வழிமுறையானது நைட்ரோசைல்எக்சாபுளோராநிக்கலேட்டினை வெப்பத்தின் மூலமாகச் சிதைவடையச் செய்யும் முறையாகும்.[4]

(NO)2NiF6 → ONF + ONF3

பண்புகள்[தொகு]

இச்சேர்மம் சாதாரண திட்ட நிலைகளில் ஒரு நிறமற்ற வாயுவாகும். இதன் நிலைமாறு வெப்பநிலையானது 29.5° செல்சியசாகும். இந்த வெப்பநிலையில் இச்சேர்மத்தின் அடர்த்தியானது 0.593 கி/செமீ3. இதன் நிலைமாறு அழுத்தமானது சற்றேறக்குறைய 64 வளிமண்டல அழுத்தமாகும்.

முப்புளோரமீன் ஆக்சைடு டிரெளடன் மாறிலியின் மதிப்பு 20.7 ஆகும். கொதிநிலையில் ஆவியாதலின் உள்ளுறை வெப்பமானது 3.85 கிலோகலோரி/மோல் ஆகும்.[5]

F3NO மூலக்கூறானது C3V அனைத்து N-F பிணைப்புகளும் சமானத்தன்மையைுடன் சீர்மையைக் கொண்டுள்ளது. N-O பிணைப்புகள் இயல்பாக N-F பிணைப்புகளை ஒத்ததாக இருப்பதால் இதன் வடிவம் கிட்டத்தட்ட நான்முகி வடிவத்தைக் கொண்டுள்ளது. அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு நிறமாலையின்படி 19F இன் −363 இவொப என்ற இடத்தில் மும்மைக் கோடுகள் காணப்படுகின்றன. JNF இன் மதிப்பானது 136 எர்ட்சு ஆக இருக்கிறது [1] அகச்சிவப்புக்கதிர் நிறமாலையின்படி 1687 செமீ−1 இடத்தில் ஒரு நீட்சி காணப்படுகிறது. N-F பிணைப்பானது 743 செமீ−1என்ற அளவில் ஒரு நீட்சியையும், சீர்மையற்ற N-F பிணைப்பின் நீட்சியானது 887 செமீ−1 ஆகவும் ∠ONF பிணைப்பு வளைவானது 528 செமீ−1 ஆகவும், இதர பிணைப்புகளின் நீட்சிகள் 558, 528, 801, 929, 1055, 1410, 1622, 1772, 2435 மற்றும் 3345 செமீ−1ஆகவும் காணப்படுகிறது..[1] இச்சேர்மத்தின் இருமுனை திருப்புத்திறனானது 0.0390 டிபை ஆக உள்ளது.[6]

இச்சேர்மத்தில் N-O பிணைப்பு 75% இரட்டைப் பிணைப்பு தன்மையைக் கொண்டுள்ளது. இச்சேர்மம் ஒரு நேர்மின்சுமையையும், அதிக காரத்தன்மையும் கொண்ட அமீன் ஆக்சைடுகளில் காணப்படும் அமீன்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது.[5]

N-O பிணைப்பு நீளமானது 1.158 Å ஆகும்; N–F பிணைப்பு நீளமானது 1.431 Å ஆகும்; ∠FNF பிணைப்புக் கோணங்கள் 101° ஆகும்; மூன்று பிணைப்புக் கோணங்களும் ∠ONF = 117 ஆகும்.[7]

முப்புளோரமீன் ஆக்சைடானது நச்சுத்தன்மை வாய்ந்தது. இது 200 முதல் 500 வரை உள்ள இவொப செறிவளவுகளில் எலிகளைக் கொல்லும் தன்மை கொண்டதாகும்.[5]

வினைகள்[தொகு]

இச்சேர்மத்தைக் கொண்டு மற்ற சேர்மங்கள் புளோரினேற்றம் செய்யப்படும் போது நைட்ரோசைல் புளோரைடு (NOF) உருவாகிறது [8] முப்புளோரமீன் ஆக்சைடானது நீர், கண்ணாடி மற்றும் நிக்கல் ஆகியவற்றுடன் வினைபுரிவதில்லை. இதன் காரணமாக இச்சேர்மத்தைக் கையாள்வது எளிதாகிறது.[1] பென்டாபுளோரைடுகளுடன் உருவாகும் "சேர்க்கைப்பொருட்கள்", உண்மையில் F2NO + அயனியைக் கொண்டுள்ள எக்சாபுளோரைடு உப்புகளாகும்.[1]

வினைவேதிமம் விளைபொருள்[8] கருத்து
N2F4 NF3
N2O4 NO2F
Cl2 ClF
SF4 SF6
H2O வினையில்லை
நீரிய NaOH NO3,F மெதுவான வினை
H2SO4 HNO3,HF F2NO+வழியாக
SbF5 SbF5•F3NO
AsF5 AsF5•F3NO
PF5 வினையில்லை
BF3 BF3•F3NO

முப்புளோரமீன் ஆக்சைடானது பாதரசத்துடன் மெதுவாக வினைபுரிந்து, பாதரச புளோரைடுகள் மற்றும் நைட்ரசன் ஆக்சைடுகளைத் தருகிறது.[5] முப்புளோரமீன் ஆக்சைடானது 300° செல்சியசு வரை வெப்பப்படுத்தும் போது நிலையாக இருக்கிறது. ஆனால், மெதுவாக புளேராரின், NO2F, NOF, NO2 மற்றும் NO ஆக சிதைவடைகிறது. சிதைவின் போதும் ஆக்சிசனானது நைட்ரசனோடு இணைந்தே காணப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Fox, W. B.; MacKenzie, J. S.; Vanderkooi, N.; Sukornick, B.; Wamser, C. A.; Holmes, J. R.; Eibeck, R. E.; Stewart, B. B. (June 1966). "Trifluoramine Oxide". Journal of the American Chemical Society 88 (11): 2604–2605. doi:10.1021/ja00963a051. 
  2. Powell, P. (2013) (in en). The Chemistry of the Non-Metals. Springer Science & Business Media. பக். 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789401169042. https://books.google.com.au/books?id=4a-3BgAAQBAJ&pg=PA134. 
  3. Fox, W.B.; MacKenzie, J.S.; Vitek, R. (February 1970). "The chemistry of trifluoramine oxide. V. Synthesis of F3 no by photochemical fluorination of nitrosyl fluoride". Inorganic and Nuclear Chemistry Letters 6 (2): 177–179. doi:10.1016/0020-1650(70)80336-1. 
  4. Bartlett, Neil; Passmore, J.; Wells, E. J. (1966). "Nitrogen oxide trifluoride". Chemical Communications (London) (7): 213. doi:10.1039/C19660000213. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 Fox, W. B.; MacKenzie, J. S.; McCarthy, E. R.; Holmes, J. R.; Stahl, R. F.; Juurik, R. (October 1968). "Chemistry of trifluoramine oxide. I. Synthesis and characterization of trifluoramine". Inorganic Chemistry 7 (10): 2064–2067. doi:10.1021/ic50068a022. 
  6. Kirchhoff, William H.; Lide, David R. (July 1969). "Microwave Spectrum, Dipole Moment, and Quadrupole Coupling Constant of Trifluoramine Oxide". The Journal of Chemical Physics 51 (1): 467–468. doi:10.1063/1.1671761. 
  7. Plato, Vernon; Hartford, William D.; Hedberg, Kenneth (November 1970). "Electron‐Diffraction Investigation of the Molecular Structure of Trifluoramine Oxide, F3NO". The Journal of Chemical Physics 53 (9): 3488–3494. doi:10.1063/1.1674522. 
  8. 8.0 8.1 Fox, William B.; Wamser, C. A.; Eibeck, R.; Huggins, D. K.; MacKenzie, James S.; Juurik, R. (June 1969). "Chemistry of trifluoroamine oxide. II. Reactions with inorganic substrates". Inorganic Chemistry 8 (6): 1247–1249. doi:10.1021/ic50076a010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்புளோரமீன்_ஆக்சைடு&oldid=2666606" இலிருந்து மீள்விக்கப்பட்டது