உலக ஆசிரியர் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக ஆசிரியர் பரிசு
Global Teacher Prize
நாடுஐக்கிய இராச்சியம்
வழங்குபவர்வார்க்கி அறக்கட்டளை
வெகுமதி(கள்)பரிசுத் தொகை $1 மில்லியன்
முதலில் வழங்கப்பட்டது2015; 9 ஆண்டுகளுக்கு முன்னர் (2015)
இணையதளம்www.globalteacherprize.org

உலக ஆசிரியர் பரிசு (Global Teacher Prize) என்பது ஐக்கிய இராச்சியத்தின் வார்க்கி அறக்கட்டளையினால் ஆசிரிய சேவையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய ஆசிரியர் ஒருவருக்கு வழங்கப்படும் ஆன்டுதோறும் வழங்கப்படும் ஓர் உயர் விருது ஆகும். இவ்விருதின் மதிப்பு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.[1][2][3] இப்பரிசை ஊடகவியலாளர்கள் ஆசிரியர்களுக்கான நோபல் பரிசு எனப் பெரும்பாலும் வர்ணிப்பார்கள்.[2][4][5][6] குறிப்பிட்ட தகைமைகளைக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் குறித்து உலகளாவிய அளவில் பொதுமக்கள் எவரும் இவ்விருதுக்குப் பரிந்துரைக்கலாம். அத்துடன் இவ்வாறான தகமைகளைக் கொண்டிருக்கும் ஆசிரியர்களும், தம்மைத் தாமே இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.[7] உலகளாவிய அளவில் தலைமை ஆசிரியர்கள், கல்வி வல்லுநர்கள், வர்ணனையாளர்கள், பத்திரிகையாளர்கள், பொது அதிகாரிகள், தொழில்நுட்ப தொழில்முனைவோர், நிறுவன இயக்குநர்கள் மற்றும் அறிவியலாளர்களைக் கொண்ட உலக ஆசிரியர் பரிசுக்கான கழகம் நடுவராக இருந்து இப்பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கிறது.[7][8]

2014 மார்ச் மாதத்தில் நடைபெற்ற உலகளாவிய கல்வி மற்றும் திறன் மன்றத்தின் கூட்டத்தில் இப்பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி 127 நாடுகளில் இருந்து 5,000 ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன.[9][10][11]

வரலாறு[தொகு]

2018 இன் உலக ஆசிரியர் பரிசை வென்ற ஆண்ட்ரியா சஃபிரக்கொவ் (ஐக்கிய இராச்சியம்)

2015 ஆம் ஆண்டில் முதலாவது உலக ஆசிரியர் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மேய்ன் மாநிலத்தைச் சேர்ந்த ஆங்கில மொழி ஆசிரியை நான்சி அட்வெல் என்பவருக்குக் கிடைத்தது.[4][5][12] அட்வெல் கற்பித்தல் தொடர்பாக ஒன்பது நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல் ஒன்று அரை மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன.[12][13] இவர் தனது பரிசுத் தொகை முழுவதையும் தனது பாடசாலைக்கு வழங்கினார்.[5][12][14][15]

2016 ஆம் ஆண்டுக்கான பரிசு பாலத்தீனத்தைச் சேர்ந்த ஆசிரியர் அனான் அல் உர்ருப் என்பவருக்கு வழங்கப்பட்டது.[16]

2017 ஆம் ஆண்டுக்கான விருது கனடா, கியூபெக்கைச் சேர்ந்த இனுவிட்டுப் பழங்குடி ஆசிரியையான மாகி மெக்டொன்னெல் என்பருக்கு வழங்கப்பட்டது.[17]

2018 ஆம் ஆண்டுக்கான பரிசு இலண்டனைச் சேர்ந்த கலை மற்றும் நெசவு ஆசிரியையான ஆண்ட்ரியா சஃபிரக்கொவ் என்பவருக்கு வழங்கப்பட்டது.[18][19][20][21]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Applications open for world’s first one million dollar teacher prize" பரணிடப்பட்டது 2016-05-15 at the வந்தவழி இயந்திரம் (press release). EducationandSkillsForum.org. மார்ச் 2014.
  2. 2.0 2.1 Shapiro, Jordan. "Now There's A Davos Of Education And A $1 Million 'Nobel Prize' For Teachers". Forbes. 22 மார்ச் 2014.
  3. Global Teacher Prize – About the Prize. GlobalTeacherPrize.org. Retrieved 31 July 2015.
  4. 4.0 4.1 "Nancie Atwell Of Maine Wins $1 Million Global Teaching Prize". NPR. 16 மார்ச் 2015.
  5. 5.0 5.1 5.2 Gambino, Lauren (March 23, 2015). "The world's best teacher lives in rural Maine and doesn't care about test scores" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/education/2015/mar/23/worlds-best-teacher-nancie-atwell-maine-center-for-teaching-and-learning. 
  6. *"First 'Nobel Prize of teaching' winner gets $1 million". CNN. 17 மார்ச் 2015.
  7. 7.0 7.1 Strauss, Valerie. "Can a $1 million global teacher competition (backed by Bill Clinton) boost the profession?". தி வாசிங்டன் போஸ்ட். 30 ஆகத்து 2014.
  8. Global Teacher Prize – Meet the Academy. GlobalTeacherPrize.org. Retrieved 31 July 2015.
  9. Quimby, Beth and Dennis Hoey. "First 'Nobel Prize for Teaching' goes to Mainer". Portland Press Herald. மார்ச் 15, 2015.
  10. "The (Million-Dollar) Value Of Great Teaching". NPR. 15 March 2015.
  11. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா."Three Indians Shortlisted for $1 Million Prize for Outstanding Teachers". என்டிடிவி. 8 December 2014.
  12. 12.0 12.1 12.2 அசோசியேட்டட் பிரெசு. "Maine Teacher Wins $1 Million Global Teacher Prize in Dubai". த நியூயார்க் டைம்ஸ். 15 March 2015.
  13. Coughlan, Sean. "Global teacher prize winner to give away $1m". BBC News. 15 மார்ச் 2015.
  14. Marsh, Sarah. "US teacher wins $1m for developing reading and writing skills". தி கார்டியன். 15 March 2015.
  15. "10 Incredible Facts about Prize Winner Nancie Atwell" பரணிடப்பட்டது 2018-03-19 at the வந்தவழி இயந்திரம். VarkeyFoundation.org. 19 March 2015.
  16. Coughlan, Sean (14 March 2016). "Palestinian teacher wins global prize" – via www.bbc.co.uk.
  17. Foundation, Varkey (21 February 2017). "Maggie MacDonnell - Global Teacher Prize 2017 Winner" – via Vimeo.
  18. "Andria Zafirakou from north London wins $1m 'world's best teacher' prize". The Guardian (in ஆங்கிலம்). 2018-03-18. பார்க்கப்பட்ட நாள் 2018-03-18. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  19. "Inspirational London teacher Andria Zafirakou wins $1m Global Teacher Prize" (in en). ITV News. http://www.itv.com/news/2018-03-18/inspirational-london-teacher-andria-zafirakou-wins-1m-global-teacher-prize/. 
  20. Coughlan, Sean (2018-03-18). "UK teacher wins global best teacher prize" (in en-GB). BBC News. https://www.bbc.com/news/education-43422199. 
  21. Aitkenhead, Decca (23 March 2018). "Best teacher in the world Andria Zafirakou: ‘Build trust with your kids – then everything else can happen’" (in en). the Guardian. https://www.theguardian.com/education/2018/mar/23/best-teacher-in-the-world-andria-zafirakou-build-trust-with-your-kids-then-everything-else-can-happen. பார்த்த நாள்: 23 March 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_ஆசிரியர்_பரிசு&oldid=3235589" இலிருந்து மீள்விக்கப்பட்டது