கால்குளோசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்குளோசைட்டுCalclacite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுCa(CH3COO)Cl•5H2O
இனங்காணல்
நிறம்வெண்மை
படிக அமைப்புஒற்றைச்சரிவு
மோவின் அளவுகோல் வலிமை1.5
மிளிர்வுபட்டு
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி1.5
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.468 nβ = 1.484 nγ = 1.515
இரட்டை ஒளிவிலகல்δ = 0.047
2V கோணம்அளக்கப்பட்ட்து 80°, கணக்கிடப்பட்ட்து: 74°
நிறப்பிரிகைவலுக்குறைந்த்து
மேற்கோள்கள்[1]

கால்குளோசைட்டு (Calclacite) என்பது CH3COO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் மற்றும் ஒரு கனிமம் ஆகும். கால்சியம் (Ca2+), குளோரின் (Cl−), அசிட்டேட்டு (CH3COO2−) என்ற சொற்களின் முதல் சில எழுத்துகளைச் சேர்த்து இக்கனிமத்தின் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது.

பண்புகள்[தொகு]

பட்டு முடிகள் பூப்பது போல 4 செ.மீ நீளத்திற்கு ஒற்றைச்சரிவச்சுப் படிகங்களாக கால்குளோசைட்டு படிகமாகிறது. கால்குளோசைட்டு கனிமம் ஒரு கரிம அமில உப்பு என்று நிக்கல் சிடரன்சு வகைப்பாடு கூறுகிறது. பார்மிகெய்ட்டு, அசிட்டமைடு, தாசுகோவைட்டு, பேய்சைட்டு, ஓகானைட்டு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து இயற்கையில் தோன்றுகிறது.[2]. மோவின் அளவு கோலில் வெண்மை நிறமுடைய இக்கனிமத்தின் கடினத்தன்மை மதிப்பு 1.5 ஆகும்.

தோற்றம்[தொகு]

பாறைகள், புதை படிவுகள், பீங்கான் துண்டுகள் ஆகியவற்றின் மீது கால்குளோசைட்டு தோன்றுகிறது. அலமாரிகளின் ஓக் மரத் துண்டுகள் உற்பத்தி செய்யும் அசிட்டிக் அமிலாத்தின் செயல்பாட்டால் இம்மாற்றம் நிகழ்கிறது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Mindat
  2. 2.0 2.1 "Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2019-02-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்குளோசைட்டு&oldid=3594994" இலிருந்து மீள்விக்கப்பட்டது