சிவந்தினி தர்மசிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவந்தினி தர்மசிரி
அழகுப் போட்டி வாகையாளர்
பிறப்புசிவந்தினி தர்மசிரி
கொழும்பு, இலங்கை
பட்ட(ம்)ங்கள்இலங்கை அழகி 1996

சிவந்தினி தர்மசிரி (பிறப்பு 1970) இலங்கையைச் சேர்ந்த விஞ்ஞானப் பட்டதாரியும், இலங்கை அழகி மகுடம் சூடியவரும் ஆவார்.[1] 1996 ஆம் ஆண்டு இலங்கையில் கொழும்பில் நடைபெற்ற பீரிமியர் அழகிகளின் அணிவகுப்பில் மகுடம் சூடினார். 1976 ஆம் ஆண்டு குடும்பத்துடன் ஐக்கிய இராச்சியத்திற்குக் குடிபெயர்ந்தார். இதனால் மேற்கத்தியக் கலாச்சார அனுபவமும் இவருக்கு உண்டு. இவர் இலங்கையில் வசித்த போது மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். ஐக்கிய இராச்சியத்தில் சிபரத்பா உயர்நிலையில் படித்தார்.

சிவந்தினி மருத்துவக் குடும்பப் பின்னணியைக் கொண்டவர். இவரது தந்தை, சகோதரர் என குடும்பத்தில் பெரும்பாலோனோர் மருத்துவத் தொழிலில் உள்ளனர். சிவந்தினி உயர்தர விஞ்ஞானப் பாடநெறியைக் கற்றார். பின்பு வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் பட்டம் பெற்றார்.

சிவந்தினி தனது 18 ஆவது வயதில் முதன் முதலில் அழகி அணிவகுப்பில் கலந்து கொண்டார். 1989 இல் இலண்டனில் நடைபெற்ற இலங்கையின் குமரி(ராணி) போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களான சேனக டி சில்வா மற்றும் லு சிங்வுங் ஆகியோரின் கீழ் வடிவழகியாகப் பணிபுரிந்திருக்கிறார். 1996 ஆம் ஆண்டு இலங்கை அழகிப் போட்டியில் மகுடம் சூடினார். மேலும் மிஸ் பெர்சனாலிட்டி, மிஸ் இன்டர்நெட் ஆகிய சிறு பட்டங்களையும் வென்றுள்ளார்.

1996 ஆம் ஆண்டு லாஸ் வெகாஸ் இல் மிஸ் பிரபஞ்ச அழகி அணிவகுப்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டார். இதில் இவர் தன்னை ஆயுபோவன் (நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்க) இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஒளிமயமான எதிர்காலத்தை கட்டியெழுப்புகின்ற நேரத்தில் இலங்கையில் இருந்து நான் சிவந்தினி தர்மசேன என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

2010 இல் நடைபெற்ற மிஸ் இலங்கை அணிவகுப்பில் நடுவராகப் பங்கேற்றார்.[2]

சிவந்தினி பத்து வருடங்கள் ஐக்கிய இராச்சியத்தில் மருத்துவ தொழிற்சங்கத்தில் பணிபுரிந்துள்ளார். இவர் விவாகரத்து பெற்றவர். இவருக்கு லச்லன் மற்றும் இஸபெல்லா என்று இரு பிள்ளைகள் உள்ளனர். தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவந்தினி_தர்மசிரி&oldid=3367493" இலிருந்து மீள்விக்கப்பட்டது