வோல்கார்டு-எர்த்மான் வளையமாக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வோல்கார்டு-எர்த்மான் வளையமாக்கல் (Volhard–Erdmann cyclization) என்பது ஆல்க்கைல் மற்றும் அரைல் தயோபீன்களை தயாரிக்கும் கரிம வேதியியல் தொகுப்பு வினையாகும். இவ்வினையில் டைசோடியம் சக்சினேட்டு அல்லது γ-ஆக்சோ அமிலம், 1,4-டைகீட்டோன்கள், குளோரோ அசிட்டைல்-பதிலிடப்பட்ட எசுத்தர்கள் போன்ற மற்ற 1,4-இரு வேதி வினைக்குழு சேர்மங்களுடன் பாசுபரசு எப்டாசல்பைடு சேர்த்து வினைப்படுத்தப்படுகிறது. யாகோபு வோல்கார்டு மற்றும் ஊகோ எர்த்மான் ஆகியோர் கண்டுபிடித்த காரணத்தால் வினை வோல்கார்டு-எர்த்மான் வளையமாக்கல் வினை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது [1]. இட்டகோனிக் அமிலத்தில் தொடங்கி 3-மெத்தில்தயோபீன் தயாரிப்பது இவ்வினைக்கு ஓர் உதாரணமாகும்:[2]

வோல்கார்டு-எர்த்மான் வளையமாக்கல்

மேற்கோள்கள்[தொகு]

  1. Feldkamp, R. F.; Tullar, B. F. (1954). "3-Methylthiophene". Organic Syntheses 34: 73. http://www.orgsyn.org/orgsyn/pdfs/CV4P0671.pdf. ; Collective Volume, vol. 4, p. 671
  2. Volhard, J.; Erdmann, H. (1885). "Synthetische Darstellung von Thiophen". Chemische Berichte 18 (1): 454–455. doi:10.1002/cber.18850180199.