திரும்பிப்பார் (1996 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரும்பிப்பார்
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புஎன். ராமசாமி
கதைராம நாராயணன்
புகழ் மணி (வசனம்)
இசைதேவா (இசையமைப்பாளர்)
நடிப்புசரவணன்
யுவராணி
சில்க் ஸ்மிதா
மணிவண்ணன்
விணு சக்கரவர்த்தி
எஸ். எஸ்,. சந்திரன்
நிழல்கள் ரவி
பணிடியன்
வடிவுக்கரசி
சந்திரசேகர்
பி. அசோக்ராஜான்
ஒளிப்பதிவுபேபி பிலிப்ஸ்
படத்தொகுப்புபாபுராஜ்
கலையகம்ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
வெளியீடுசனவரி 15, 1996 (1996-01-15)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரும்பிப்பார் (Thirumbi Paar) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படம் ராம நாராயணனால் இயக்கப்பட்டது. சரவணன் மற்றும் யுவராணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சில்க் ஸ்மிதா , மணிவண்ணன் , வினு சக்ரவர்த்தி , எஸ்.எஸ். சந்திரன் , நிழல்கள் ரவி , சந்திரசேகர், பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். என். ராமசாமி தயாரிப்பில், தேவாவின் இசையமைப்பில் ஜனவரி 15, 1996 ஆம் தேதி இப்படம் வெளியானது.[1][2][3][4]

நடிகர்கள்[தொகு]

கதைச்சுருக்கம்[தொகு]

பணக்கார அரசியல்வாதியான அவுது நாயகம் ( வினு சக்ரவர்த்தி ) தன் இரண்டாவது மனைவி வசந்தாவுடன் ( சில்க் ஸ்மிதா ) வசித்து வருகிறார். வசந்தா ஒரு தந்திரமான பெண், அவள் கிராமத்தைச் சுற்றி பல சொத்துக்களை வாங்குகிறாள், கிராமவாசிகளை மிகக்குறைந்த விலைக்கு விற்க வேண்டுமென்றும் கூட கட்டாயப்படுத்துகிறாள். நாயகத்தின் முதல் மனைவி வள்ளியம்மா ( வட்டுகுர்காசி ) மகன் வீரய்யன் (சரவணன்) ஒரு சிறிய வீட்டில் வாழ்கிறார்கள். வீரய்யன் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்பதால், ஒரு பஸ் நடத்துனராகபணிபுரிகிறான். தனது தந்தையின் மனதை களைத்த வசந்தாவை வெறுக்கிறான்.

ஒரு நாள், வசந்தாவின் உதவியாளர்கள்: சொக்கு ( மணிவண்ணன் ), கணக்கு ( எஸ்.எஸ். சந்திரன் ) மற்றும் அழகு (பி. அசோகராஜன்) ஆகியோர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கர்னல் ராஜாவிற்கு ( நிஜல்கல் ரவி ) சொந்தமான ஓர் இலவச பள்ளியை வாங்க முயற்சி செய்கின்றனர். கர்னல் ராஜா அதை விற்க மறுக்க, உதவியாளர்களால் தாக்கப்படுகிறார். வீரய்யன் சரியான நேரத்தில் தலையிட்டு, உதவியாளர்களிடமிருந்து ராஜாவை காப்பாற்றுகிறான். இந்த சம்பவத்தால் விரக்தியடைந்த வேளையில், வீரய்யன் வேலை செய்யும் பஸ் நிறுவனத்தை வசந்தா உடனடியாக வாங்குகிறாள். அவளது சகோதரர் அசோக் ( பாண்டியன் ) வீரய்யனின் பஸ் நிறுவன மேலாளராகிறான். வீரய்யனை வசந்தா வெறுக்கிறாள்.

சில நாட்களுக்குப் பிறகு, வசந்தாவின் பணியாளர்களால் கர்னல் ராஜா தாக்கப்படுகிறார். வீரய்யன் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும், கர்னல் ராஜா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்து விடுகிறார். பின்னர், அசோக் வீரய்யனை வேலையை விட்டு நிறுத்துகிறான். அதன் பின்னர், வீரய்யன் பால் வியாபாரம் செய்கிறான். இதற்கிடையில், வீரய்யனும் சொக்குவின் மகள் மாதவியும் (யுவராணி) ஒருவருக்கொருவர் காதலிக்கிறார்கள். இதனால் வசந்தாவிற்கும் அஷோக்கிற்கும் வீரய்யனுக்கும் இடையே நடக்கும் மோதலே மீதிக் கதையாகும்.

இசை[தொகு]

இப்படத்திற்கு தேவா இசையமைத்தார். இதில் உள்ள 4 பாடல்களின் வரிகளையும் வாலி எழுதினார்.

ட்ராக் பாடல் காலம்
1 திரும்பி பாருங்க 2:42
2 நல்லவங்க 4:11
3 வால வயசுக்குள்ள 4:36
4 காரமான 3:07

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thirumbi Paar (1996) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2016-05-27.
  2. "Thirumbipaar (1996)". gomolo.com. Archived from the original on 2016-11-09. பார்க்கப்பட்ட நாள் 2016-05-27.
  3. "Find Tamil Movie Thirumbi Paar". jointscene.com. Archived from the original on 2010-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-05-27.
  4. "Filmography of thirumbi paar". cinesouth.com. Archived from the original on 2004-08-12. பார்க்கப்பட்ட நாள் 2016-05-27.