குளோரினேற்ற பாலியெத்திலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குளோரினேற்ற பாலியெத்திலீன் (Chlorinated polyethylene) என்பது 34 முதல் 44% குளோரினைக் கொண்ட மலிவுவிலை பாலியெத்திலீன் வகையாகும். பாலிவினைல் குளோரைடுடன் கலக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் மென்மையான, இரப்பர் போன்ற குளோரினேற்ற பாலியெத்திலீன்கள் பாலிவினைல் குளோரைடு அணிகளில் உட்பொதிக்கப்பட்டதால் தாக்கு தடையை அதிகரிக்கிறது. கூடுதலாக இது வானிலை எதிர்ப்பை அதிகரிக்கிறது. மேலும், இது நெகிழியாக்கிகளின் புலம்பெயர்வு சிக்கலின்றி பாலிவினைல் குளோரைடு தகடுகளின் மென்மையை அதிகரிக்கிறது. குளோரினேற்ற பாலியெத்திலீன்களை பெராக்சைடேற்ற குறுக்குப் பிணைப்புக்கு உட்படுத்தி மீள்மம் தயாரிக்க முடியும். இம்மீள்மம் நெகிழிவடம் மற்றும் இரப்பர் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது. மற்ற பாலி ஒலிபீன்களுடன் இதை சேர்க்கும்போது எரிதன்மை குறைகிறது. சிலசமயங்களில் மின்வடங்களின் காப்புறைகளில் வெளிப்புற உறையாகப் பயன்படுத்தப்படுகிறது [1]. அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்ட செம்பட்டியலில் குளோரினேற்ற பாலியெத்திலீன் பட்டியலிடப்பட்டுள்ளது [2].

மேற்கோள்கள்[தொகு]