சியோபன் ஞானகுலேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சியோபன் ஞானகுலேந்திரன் (Siobhan Gnanakulendiran) சர்வதேச விண்வெளி ஓடத்திற்குச் செல்ல உள்ள முதல் தமிழ் பெண் ஆவார். இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி கற்றவர் ஆவார். இலண்டனில் விண்வெளி தொடர்பாக செயற்கைக் கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது போன்ற பல துறைகளில் 30,000 க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். பிரிட்டன் விண்வெளி ஆராய்ச்சி மையம் இவர்களில் அதீத திறமை மிக்கவர்களை அடையாளம் கண்டு விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. இதற்கான சோதனைகளில் சிறப்பாக செயல்பட்டு சியோபன் ஞானகுலேந்திரன் தேர்வடைந்துள்ளார்.[1] இவருடன் பிரித்தானியாவைச் சார்ந்த டியானாவும் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு அனுப்புவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த இருவரும் இணைந்து விண்வெளியில் நுண்ணுயிர் ஆய்வில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "விண்வெளிக்கு செல்லும் முதல் தமிழ்ப் பெண்". தினமலர். 31 சனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2019.
  2. "முதன்முறையாக விண்வெளிக்கு செல்லும் ஈழத்து தமிழ் பெண்". லங்காசிறி செய்திகள். 1 பெப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியோபன்_ஞானகுலேந்திரன்&oldid=3577224" இலிருந்து மீள்விக்கப்பட்டது