தொரத்தி கெய்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொரத்தி மேரி கெய்லி
பிறப்பு1874
இலங்கை
இறப்பு1955
தேசியம்பிரித்தானிய
பணிபூசணவியல் வல்லுனர்
அறியப்படுவதுடூலிப் முறிவு வைரசை கண்டுபிடித்தமை

தொரத்தி மேரி கெய்லி (1874-1955) பூசணவியல் வல்லுனர் (மைகோலோஜிஸ்ட்) ஆவார். 1927 ஆம் ஆண்டு டூலிப் முறிவு வைரசின் காரணமாக ஏற்படுகிறது என்பதை கண்டறிந்தவர்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

வைரசினால் பாதிக்கப்பட்ட டூலிப் மலர்

இவர் இலங்கையில் பிறந்தார். தனது ஏழாவது வயதில் இலங்கையிலிருந்து இங்கிலாந்து சென்றார். இவரது தந்தை ரிச்சட் கெய்லி இலங்கையில் 14வது தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். மேரி கெய்லி ஸ்டம்போர்ட் உயர்நிலை பள்ளியில் கல்வி கற்றார். மேரி கெய்லி பல்கலைக்கழக கல்லூரிக்கு தோட்டக்கலை படிக்க செல்லும் முன் இலண்டன் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார்.[1]

ஸ்டம்போர்ட்  பள்ளியில் கற்ற பின் ஜெர்மனிக்கு சென்று இசை பயின்றார். பல்கலைக்கழக கல்லூரியில் தோட்டக்கலையில் டிப்ளோமா பெற்றார். பல்கலைக்கழக கல்லூரிக்கு செல்லும் முன்னர் சிறிது காலம்  விஞ்ஞானம் கற்றார்.[1]

சாதனைகள்[தொகு]

மேரி கெய்லி மண், தாவர நோய்கள் என்பவற்றை பற்றி கற்பதில் ஆர்வமாக இருந்தார். கல்வி வாரிய தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து பதக்கங்கள் பெற்றார். ரோயல் தோட்டக்கலை சமூக தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதோடு தாவரவியல் துறைக்கு சொந்தமான தோட்டத்தில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தொரத்தி திறமையான ஓவியராக இருந்தார். விடுமுறை காலங்களில் பூஞ்சைகளை வரைந்தும், பரிசோதித்தும் கொண்டிருந்தார்.[1]

முதலாம் உலக போரின் போது[தொகு]

1910 ஆண்டு ஜூன் மாதத்தில் ஜோன் இன்னஸ் மையத்தில் தன்னார்வ தொண்டு புரிந்தார். ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு முன்னர் மனோர் வீட்டில்  பணிபுரியும் கட்டாயம் ஏற்பட்டது.

1914 முதல் 1918 வரையான காலப்பகுதியில் போர் வேலைகளில் ஈடுபட்டார். யுத்தத்தின் கடைசி 18 மாதங்களுக்கு உதவுவதற்காக ஜோன் இன்னஸ் இல் இருந்து விலகினார்.

1916 இல் லண்டனில் உள்ள லிஸ்டர் தடுப்பு மருத்துவ நிறுவனத்தில்  டெட்னஸ் தொற்று நோய் திட்டத்திற்கான ராயல் ராணுவ மருத்துவ விசாரணைக்கு உதவினார். பிறகு 1914 இல் இங்கிலாந்து திரும்பினார். ஜோன் இன்னசில் இணைந்தார். அந்த ஆண்டில் பூசணவியல் வல்லுனர் பட்டத்தை பெற்றார்.[1]

கண்டுபிடிப்புகள்[தொகு]

1919 ஆம் ஆண்டு மரபணு சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரானார். ஐக்கிய இராச்சியத்தில் பூஞ்சை மரபியல் பற்றிய ஆய்வை அறிமுகப்படுத்தினார்.

டூலிப் முறிவு எனப்படும் அசாதாரண நிற மாறுப்பாடு மரபியல் காரணமாக தோன்றவில்லை எனவும் பரவியிருக்கும் வைரசு காரணமாக தோன்றியது எனவும் கண்டறிந்து அதற்கான சிகிச்சையையும் பரிந்துரைத்தார்.[2] 1928 ஆம் ஆண்டு தன் கண்டுபிடிப்பை வெளியிட்டார்.[3] டூலிப் முறிவினால் எரிச்சல் அடைந்திருந்த உண்மையான நிறம் விரும்பும் ஆர்வலர்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். தொரத்தி பூஞ்சைகள்  அவற்றின் இனப்பெருக்கம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார்.[1]

இவர் 1938 இல் ஓய்வு பெற்றார். 1939 இல் பிரித்தானிய மைக்கோலோஜிகல் சங்கத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 https://www.jic.ac.uk/centenary/timeline/info/DCayley.htm பார்த்த நாள் 2016-05-28
  2. https://www.jic.ac.uk/centenary/timeline/1920s.html பார்த்த நாள் 2016-05-28
  3. https://www.jic.ac.uk/centenary/timeline/1920s.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொரத்தி_கெய்லி&oldid=3925258" இலிருந்து மீள்விக்கப்பட்டது