சத்ய பிரதா சாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சத்ய பிரதா சாகு (Sathya Pratha Sahoo) தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ஆவார். இவர் 2018 பிப்ரவரி 22 முதல் தமிழகத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். 2018 மார்ச் 15 ஆம் நாள் இப்பணியை ஏற்றுக்கொண்டார்.[1] இவர் 1997 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஆவார். இவர் ஒடிசா மாநிலத்தைச் சார்ந்தவர் ஆவார். முன்னதாக இவர் சென்னைப் பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.[2] நாடாளுமன்றத்திற்கும், தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டால் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். [3] இவருக்கு முன்னதாக தமிழக தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லகானி பதவியில் இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "NAMES OF CHIEF ELECTORAL OFFICERS OF TAMIL NADU" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்". தினமலர். 22 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2019. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. ""எப்போது தேர்தல் அறிவித்தாலும் நடத்த தயார்" - தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்". தந்தி தொலைக்காட்சி. 25 சனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்ய_பிரதா_சாகு&oldid=2648241" இலிருந்து மீள்விக்கப்பட்டது