கொண்டைய ராஜு (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொண்டைய ராஜு என்பவர் இந்திய ஓவியர் ஆவார். இவர் நாட்காட்டி ஓவியங்களின் பிதாமகர் என்று அறியப்படுகிறார்.[1]

சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். திருவண்ணாமலை ரமணர் மகரிசியிடம் சீடராக இருந்தார். பின்பு மதுரை பழனியப்பப் பிள்ளை நாடகக் கம்பெனியில் திரைச்சீலை ஓவியங்களை வரைந்து தந்தார்.[1]

தேவி ஆர்ட் ஸ்டுடியோ என்பதை 1942 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் தொடங்கினார்.[1] பின்பு சிவகாசி நாள்காட்டி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்து சமய இறை ஓவியங்களை வரைந்து தந்தார். இந்த ஓவிய நாட்காட்டிகள் புகழ்பெற்றவை.[2]

கனடா அருங்காட்சியகம்[தொகு]

ஸ்டீவன் எஸ். இங்கிலீஷ் என்பவர் கொண்டைய ராஜூவின் ஓவியங்களை ஆய்வு செய்துள்ளார். அத்துடன் ஓவியங்கள் வெளியான சிவகாசி நாள்காட்டிகளை சேகரித்து கனடா நாட்டின் அருங்காட்சியகத்திற்கு தந்துள்ளார்.[1]

சீடர்கள்[தொகு]

டி. எம். ராமலிங்கம், டி. எஸ். சுப்பையா, டி. எஸ். மீனாட்சி சுந்தரம், டி. எஸ். அருணாசலம், செண்பகராமன், சீனிவாசன்[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 [ தூரிகையால் ஒரு வேள்வி! ஓவியர் கொண்டைய ராஜு விகடன் தீபாவளி மலர் 31 அக்டோபர் 2016 ரவிபிரகாஷ்]
  2. https://tamil.thehindu.com/opinion/blogs/article20943445.ece/amp/ காலத்தின் வாசனை: காலண்டர் பசி! தஞ்சாவூர்க் கவிராயர் இந்து தமிழ் திசை 26 நவம்பர் 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டைய_ராஜு_(ஓவியர்)&oldid=3758225" இலிருந்து மீள்விக்கப்பட்டது