விசித்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசித்ரா
பிறப்புஜெயந்தி
தேசியம்இந்தியன்
பணிநடிகை, உளவியல் நிபுணர்[1]
செயற்பாட்டுக்
காலம்
1991–2002
2019–தற்போது
பெற்றோர்வில்லியம்ஸ்
வாழ்க்கைத்
துணை
ஷாஜி

விசித்ரா (Vichithra) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் எதிர்நாயகி வேடங்களில் நடித்துள்ளனர்.

திரை வாழ்க்கை[தொகு]

விசித்ரா பத்தாவது படிக்கும் பொழுது போர்க்கொடி என்ற படத்தில் நடித்தார். அப்படம் வெளியாகவில்லை.[2] அதன் பிறகு இயக்குனர் ஜாதி மல்லி திரைப்படத்தில் நடித்தார். இயக்குநர் பிரதாப் போத்தனின் ஆத்மா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அந்த திரைப்படம் நல்வாய்ப்புகளை பெற்று தந்தது.[2] கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முத்து திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவர் முத்து, ரசிகன், சுயம்வரம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.[3]

இவருக்கு திருமணம் ஆனதும், நடிப்பதை விட்டு புனேவில் தங்கிவிட்டார்.[4]

தொலைக்காட்சித் தொடர்[தொகு]

சன் தொலைக்காட்சியில் வேணு அரவிந்த் அவர்களுக்கு இணையாக வாழ்க்கை என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.[5] மாமி சின்ன மாமி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். 2019 இல் சன் தொலைக்காட்சியில் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

குடும்ப வாழ்க்கை[தொகு]

விசித்ரா நடிகரான வில்லியம்ஸ் என்பவரின் மகளாவார். வில்லியம்ஸ் மனிதரில் இத்தனை நிறங்களா திரைப்படத்தில் நடித்துள்ளார். பிறகு ஆல் இந்தியா ரேடியோவில் வேலை கிடைத்தமையால் அதிகம் நடிக்கவில்லை. விசித்திராவுக்கு இரு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளார்கள்.

விசித்திரா பத்தாவது படிக்கும் போது திரைதுறைக்கு வந்தமையால் படிப்பினை தொடர இயலவில்லை.[6] பிறகு தபால் முறை படிப்பின் மூலமாக பி.ஏ.சைக்கலாஜி, எம்.எஸ்.சி சைக்கோ தெரபி கவுன்சலிங் ஆகிய படிப்புகளை முடித்துள்ளார்.[6]

2001 இல் ஷாஜி என்பவரை விசித்திரா திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளன.[6]

2011ல் இவரது தந்தை ஒரு கொள்ளை சம்பவத்தில் கொலை செய்யப்பட்டார்.[7]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு படங்கள் கதாப்பாத்திரங்கள் மொழி குறிப்பு
1991 போர்க்கொடி செம்பா தமிழ் வெளிவராத திரைப்படம்
1992 அவள் ஒரு வசந்தம் சிறீதேவி தமிழ் ஜெயந்தி என்ற பெயரில்
1992 சின்னத்தாயி பொன்னம்மா தமிழ்
1992 தலைவாசல் "மடிப்பு" ஹம்சா தமிழ்
1992 தேவர் மகன் தமிழ்
1992 எழமேடம் சிறீதேவி மலையாளம்
1993 அமராவதி தமிழ் சிறப்பு தோற்றம்
1993 சபாசு பாபு அம்சா தமிழ்
1993 எங்க முதலாளி காவேரி தமிழ்
1993 ஜாதி மல்லி (திரைப்படம்) சாவித்ரி தமிழ்
1994 ரசிகன் (திரைப்படம்) இராணி தமிழ்
1994 இராவணன் சுந்தரி தமிழ்
1993 ஆத்மா தமிழ் சிறப்பு தோற்றம்
1993 ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் தமிழ் சிறப்பு தோற்றம்
1994 வீரா தமிழ் சிறப்பு தோற்றம்
1994 மணிரத்னம் தமிழ் சிறப்பு தோற்றம்
1994 வண்டிச்சோலை சின்ராசு தமிழ் சிறப்பு தோற்றம்
1994 அமைதிப்படை (திரைப்படம்) தமிழ் சிறப்பு தோற்றம்
1995 முத்து ரதிதேவி தமிழ்
1995 வில்லாதி வில்லன் அம்சவள்ளி தமிழ்
1995 அசுரன் பாலாமணி தமிழ்
1995 சீதனம் (திரைப்படம்) சரசு தமிழ்
1995 ரகசிய போலீஸ் (1995 திரைப்படம்) Ezhilarasi தமிழ்
1995 பெரிய குடும்பம் பாப்பம்மா தமிழ்
1995 தொட்டாசிணுங்கி (திரைப்படம்) மோனிகா தமிழ்
1995 போக்கிரி ராஜா சித்ரா தெலுங்கு
1996 மாப்பிள்ளை மனசு பூப்போல Ganga தமிழ்
1996 ராஜாளி தமிழ்
1996 செல்வா ஜோதி தமிழ்
1997 சாதி சனம் தமிழ்
1997 எட்டுப்பட்டி ராசா தமிழ் சிறப்பு தோற்றம்
1997 ராசி தமிழ் சிறப்பு தோற்றம்
1997 சிஷ்யா தமிழ் சிறப்பு தோற்றம்
1997 சாம்ராட் தமிழ் சிறப்பு தோற்றம்
1997 காதல் பள்ளி மைனா தமிழ்
1998 பொன்மானைத் தேடி தமிழ்
1998 எல்லாமே என் பொண்டாட்டிதான் லைலா குமாரி தமிழ்
1998 கிழக்கும் மேற்கும் வள்ளி தமிழ்
1998 கிங் விசித்திரா கன்னடம்
1998 பொன்னு வெளையிற பூமி தமிழ் சிறப்பு தோற்றம்
1998 பூந்தோட்டம் தமிழ் சிறப்பு தோற்றம்
1998 ஹரிச்சந்திரா தமிழ் சிறப்பு தோற்றம்
1999 தொடரும் Radha தமிழ்
1999 அடுத்தக் கட்டம் தமிழ்
1999 முதல் எச்சரிக்கை பாரதி தமிழ்
1999 சுயம்வரம் விசித்திரா தமிழ்
1999 உனக்காக எல்லாம் உனக்காக Prostitute தமிழ்
1999 பொம்பளைங்க சமாச்சாரம் தமிழ்
1999 பொண்ணு வீட்டுக்காரன் Diana தமிழ்
1999 ஜெயம் அமுதா தமிழ்
1999 கண்மணி உனக்காக தமிழ்
2000 பெண்கள் மங்களம் தமிழ்
2000 கந்தர்வ ராத்திரி மேனகா மலையாளம்
2001 என் இனிய பொன் நிலாவே விபச்சாரம் தமிழ்
2001 கிருஷ்ணா கிருஷ்ணா ருக்மணி தமிழ்
2001 சீறிவரும் காளை நந்தினி தமிழ்
2001 தீர்ப்புகள் மாற்றப்படலாம் காவல் ஆய்வாளர் இலட்சுமி தமிழ்
2002 இரவு பாடகன் சுந்தரி தமிழ்

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு நாடகம் கதாப்பாத்திரம் மொழி தொலைக்காட்சி
2019– தற்போது ராசாத்தி சிந்தாமணி தமிழ் சன் தொலைக்காட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.nakkheeran.in/cinema/cinema-news/vishithra-about-now-days-youngsters/amp
  2. 2.0 2.1 ``அப்போ நடிகை; இப்போ ஹோட்டல் எம்.டி..!’’ - விசித்ரா :`அப்போ இப்போ’ பகுதி 16 - விகடன் - July 03, 2018 - கட்டுரை எழுத்தாளர் -சனா
  3. "Rasigan". indolink.com. Archived from the original on 8 May 2016. பார்க்கப்பட்ட நாள் 11 July 2018.
  4. "Vichitras father murdered". indiaglitz.com. 14 செப்தெம்பர் 2011. Archived from the original on 1 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2018.
  5. https://www.dinamani.com/cinema/cinema-news/2019/may/24/actor-vichitra-re-entry-3157730.html
  6. 6.0 6.1 6.2 "``அப்போ நடிகை; இப்போ ஹோட்டல் எம்.டி..! - விசித்ரா :`அப்போ இப்போ' பகுதி 16". https://www.vikatan.com/. {{cite web}}: External link in |work= (help)
  7. Mahalingam Ponnusamy (14 September 2011). "Hooded robbers kill actor's father". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/city/chennai/Hooded-robbers-kill-actors-father/articleshow/9973899.cms?referral=PM. பார்த்த நாள்: 12 February 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசித்ரா&oldid=3811802" இலிருந்து மீள்விக்கப்பட்டது