பயனர் பேச்சு:Natkeeran/தொகுப்பு04

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண்பா, பேக்கஸ்-நார் முறை[தொகு]

பாராட்டுக்களுக்கு நன்றி, நற்கீரன். பள்ளி நாள் முதலே எனக்கு "அலகு பிரித்தல்" வியப்பூட்டுவதாக இருந்து வந்தது. பொறியியல் பட்ட மேற்படிப்பின்போது "இடம் சாரா இலக்கணம்" (நானாக புனைந்த சொற்றொடர், சரியா எனத் தெரியாது, இருப்பினும் மாநாட்டில் இது ஏற்றுக்கொள்ளப் பட்டது) பற்றிப் படித்தவுடன் வெண்பா நினைவிற்கு வந்தது. உடன் அதன் இலக்கணத்தை பி.என்,எஃப் முறையில் எழுதி பார்த்தேன். பின் ஜாவா நிரலாக்க மொழி கொண்டு அலகு பிரிக்கும் செயலி ஒன்றையும் உருவாக்கினேன். இந்த செயலியை உருவாக்குவதில் எழுத்துரு போன்ற சிக்கல்களை அறிந்து கொண்டேன். அதனால், ரோமனைஸ்டு முறையிலிருந்து மயிலைக்கு மாற்றும் ஒரு துணைச் செயலியையும் இடம் சாரா இலக்கணம் கொண்டு எழுதினேன்! When all you have is a hammer, every problem looks like a nail. அதைப் பயன்படுத்தி சுரதா யாழ் போன்ற ஒரு தேடுபொறி ஒன்றையும் எழுதினேன். இத்தனையும் ஏற்கெனவே பலரால் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியாமலேயே :-(

இதன் பின்னர், எனது நண்பர்கள் சஞ்சீத் மற்றும் ஈஷ்வர் ஆகியோரும் இணைந்து, முன்னர் எழுதிய இடம் சாரா இலக்கணத்தை அதற்குறிய கருவிகளான "ஜாவாசிசி" போன்றவற்றின் துணை கொண்டு தமிழ் மொழியின் பிற பகுதிகளுக்கும் விரிவபடுத்த வசதியாக எழுதினோம். அப்போதுதான குற்றியலுகரம் போன்ற மாறுபாடுகளையும் சரிக்கட்டினோம். இதையே ஆய்வுக் கட்டுரையாகவும் வழங்கினோம். இத்தனைக்கும் பிறகு, இப்போது இது விடயம் குறித்து மேலும் ஆய்ந்ததில் பாணினியின் இலக்கணம் முழுமையும் இ.சா.இ. என நிறுவப்பட்டுள்ளது தெரிந்தது. மேலும், செந்தமிழுக்கான இலக்கணம் கட்டுக்கோப்பானது என்றாலும், வழக்குத் தமிழ் நாளுக்கு நாள் மாறத் தான் செய்துள்ளது. இதன் விளைவாகவே தமிழ் மொழி உயிர்ப்புடன் விளங்க முடிகிறது. இ.சா.இ. காரணமாக ஒரு மொழியின் வளைந்து கொடுக்கும் தண்மை முழுமையாகக் குறைந்து விடுமா இல்லையா என்பது தெரியவில்லை. இருப்பினும், ஜெர்மன் உட்பட பல மொழிகளின் பெருவாரியான பகுதிகள் இ.சா.இக்கு உட்படுவதாக மொழியியலாளர்கல் கூறுகின்றனர். நான் மொழியியலை முறையாகக் கற்றதில்லை. இது பற்றி பிற்பாடு மேலும் உரையாடலாம். -- Sundar \பேச்சு 05:39, 20 ஜனவரி 2006 (UTC)

If the grammar is merely "descriptive" and not "prescriptive", the language will remain felxible by evolving. Tamil grammar has evolved a lot since Tolkaappiyam. "nannuul" is very much the standard for modern day en:Tamil grammar. Also, we only "hoped" to write the entire Tamil grammar as a CFG. Perhaps there are many parts that are not context-free. We might have been more biased at that age and mood ;-) In any case, even if we write many parts of the grammar in CFG, it will help in grammar checks in word processors. -- Sundar \பேச்சு 06:03, 20 ஜனவரி 2006 (UTC)
பார்க்க: en:Ashtadhyayi, en:Pāṇini, en:Talk:Sanskrit/Archive 1#Removed section. -- Sundar \பேச்சு 04:15, 24 ஜனவரி 2006 (UTC)

சில விடயங்கள்[தொகு]

கணிதம் தொடர்பான உங்கள் அண்மைய பங்களிப்புகள் மகிழ்ச்சியைத் தருகின்றன. மேலும், நான் உங்கள் பேச்சுத் தொகுப்புப் பக்கங்களைத் தகுந்த வெளியில் இட்டுள்ளேன். உரிமை எடுத்துக் கொண்டு நான் செய்த தொகுப்புக்களைத் தவறாகக் கொள்ள மாட்டிர்கள் என்று நம்புகிறேன். :-) -- Sundar \பேச்சு 04:21, 12 ஜனவரி 2006 (UTC) நன்றி சுந்தர். --Natkeeran 17:37, 12 ஜனவரி 2006 (UTC)

ஆட்சோபனை[தொகு]

நான் செய்த அல்லது செய்யும் மாற்றங்களுக்கு ஆட்சோபனை இருந்தால் தயவுசெய்து தெரியப்படுத்தவும். --Natkeeran 17:53, 12 ஜனவரி 2006 (UTC)

நபர்கள்[தொகு]

மனிதர்கள் என்ற சொல் Person / people என்ற சொல்லுக்கு சரியான மொழிபெயர்ப்பாக எனக்குத் தோன்றவில்லை. எல்லாரும் மனிதர்கள் தானே ? :) நபர்கள் என்ற சொல், குறிப்பிடத்தக்க மனிதர்கள் என்பது போல் பொருள் தருவதாக எனக்குத் தோன்றியது. மற்றபடி எனக்கு உங்கள் கேள்விக்குத் தெளிவாக விளக்கம் அளிக்க இயலவில்லை. வேண்டுமானால், இது குறித்து மாதிரி பக்கவகைப்படுத்தல் பேச்சுப் பக்கத்தில் அனைவரின் கருத்தையும் அறியலாம்--ரவி 21:55, 21 ஜனவரி 2006 (UTC)

பாராட்டுக்கள்[தொகு]

கணிப்பொறியியல் தொடர்பான தலைப்புகளில் நீங்கள் உருவாக்கி வரும் கட்டுரைகளைக் கண்டு மகிழ்ச்சி. விரைவில் நானும் என்னால் இயன்ற அளவு பங்களிக்கிறேன். -- Sundar \பேச்சு 04:10, 23 ஜனவரி 2006 (UTC)

சிறு குறிப்பு[தொகு]

நற்கீரன், பார்க்கவும் பேச்சு:கட்டுபாட்டுவியல். தகுந்த மாற்றங்களை தயவுசெய்து கட்டுரையிலும் தொடர்புடைய பகுப்பிலும் செய்துவிடுங்கள். நன்றி--ரவி 18:16, 28 ஜனவரி 2006 (UTC)

Self Notes[தொகு]

www.esalen.org www.rmi.org Media Labs twinoaks.org mro.org


When creating Portals, give priority to the following topics: கல்வி கணிதம் அறிவியல் (விஞ்ஞானம்) உளவியல் மருத்துவம் தத்துவம் சமூக விஞ்ஞானம் (சமூக அறிவியல்) பொறியியல் வேளாண்மை தமிழ் தமிழர் தமிழ்க்கணிமை சிங்களவர் பண்பாடு சித்தர் மரபு நிர்வாகம் வணிகவியல் விளையாட்டு

{{வார்ப்புரு:புதிய சொற்கள் அல்லது சொற்தொடர்கள் பயன்பாடு அறிவித்தல்}}

Tamil Wiki Overview[தொகு]

I'll have a look at it and do the needful. -- Sundar \பேச்சு 06:00, 3 பெப்ரவரி 2006 (UTC)

I've hopefully fixed it. Please look at Wikipedia:வழு நிலவரங்கள். -- Sundar \பேச்சு 09:04, 3 பெப்ரவரி 2006 (UTC)

sri lanka history[தொகு]

can you help with the history section of the Sri Lanka article on the english wikipedia??

Suren, I do not know Sri Lankan history much, but I will try to contribute if possible. --Natkeeran 02:53, 12 பெப்ரவரி 2006 (UTC)

Suggest translation for Deterministic Finite Automaton and Non-DFA[தொகு]

நிச்சித முடிவுள்ள தன்னியக்கயந்திரம்

ஆதாரம்:தகவல் தொழில்நுட்ப கலைச்சொல் அகரமுதலி-இலங்கை அரசகரும மொழிகள் ஆணைக்குழு

- Suren

நன்றி சுரேன். --Natkeeran 14:03, 12 பெப்ரவரி 2006 (UTC)

விக்கிமூலம்[தொகு]

நற்கீரன், Wikisource இல் தமிழ் முதல் பக்கம் ஒன்று உண்டு. 2004 ஆம் ஆண்டில் நான் இதை ஆரம்பித்தபோது எல்லா மொழிகளும், வெவ்வேறு முதல் பக்கங்களுடன் ஒரே Domain இல் தான் இருந்தன. அதன் பின் Wikisource பக்கம் நான் போகவில்லை. வேறு பயனர்கள் அந்தப் பக்கத்தை விருத்தி செய்திருக்கிறார்கள். தமிழ் நூல்களும் இருக்கக்கூடும். இப்பொழுது அங்கே மொழிகளுக்குத் தனியான Domain கோரமுடியும். இந்த இணைப்பு மூலம் சென்று அங்கே கோரமுடியும். தமிழுக்குத் தனி Domain கிடைக்கும்போது விக்கிபீடியாவிலுள்ள மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்தித் தமிழ் விக்கிமூலத்தின் இடைமுகமும் ஓரளவுக்காவது தமிழில் வரக்கூடும். இவ்வாறுதான் விக்கிமேற்கோள், விக்கிநூல்கள் போன்றவற்றுக்கும் வந்ததாக ஞாபகம். எதற்கும் முதலில் தனி Domain க்கான கோரிக்கையை வைக்கவும். நடப்பதை அவதானித்து அடுத்த கட்டத்துக்குப் போகலாம். பின்னர் Wikisource இன் நிர்வாகி பட்டியலில் உள்ள யாருக்காவது எழுதி அல்லது இதற்கென இருக்கும் பக்கத்துக்குச் சென்று தமிழ் விக்கிமூலத்துக்கான நிர்வாகி தரத்தைப் பெறவும் முடியும். அதன்பின்னர் All System Messages பக்கத்துக்குச் சென்று தனித்தனி குறிப்புகளை மொழிபெயர்க்க முடியும். Mayooranathan 15:37, 14 பெப்ரவரி 2006 (UTC)

கணிமையியல்[தொகு]

நற்கீரன், நீங்கள் கணிமையியல் தலைப்புகளில் பல கட்டுரைகளை உருவாக்கி வருவது கண்டு மகிழ்ச்சி. பாராட்டுக்கள். -- Sundar \பேச்சு 04:06, 28 பெப்ரவரி 2006 (UTC)

உண்மையான இயேசு தேவாலயம்[தொகு]

Thankyou very much for your help Natkeeran in translating parts of this article: உண்மையான இயேசு தேவாலயம். Can you continue to help me translate as many words as you can into Tamil? Please? Many of the sentences do not require contextual interpretation.

(I made the same request to Vietnamese and Thai wikipedia and they helped me translate the whole article. None of them were Christians and in fact, the Vietnamese person was an atheist while the Thai person was a Buddhist!)

If you are still unable to help me, do you know any Tamil Christians on Wikipedia who can help me translate the article? -- Jason, 3 March 2006 (UTC)

எனக்குக் கெஞ்சம் உதவி வேண்டும் ...[தொகு]

மதிப்புள்ள Natkeeran,

ஆங்கிலம் பேசுவதற்கு மணிக்கவும் - ஆனால் நான் ஜெர்மனியன், என்னுடைய தமிழ் பயங்கரம்தான், உண்மையில் ... You sent me a welcome message when I created my Tamil Wiki-account, so I'm asking you. From the உதவி-page I gathered that normal Wikipedia-questions should be asked on the ஒத்தாசை பக்கம் - right? And is there a place where a stupid பிறநாட்டான் may ask stupid questions about using the Tamil Wiki without getting on people's nerves? I mean, questions like this one...? And what if I have general questions "on God and the world", as we say in German - or on Tamil culture? In the German Wiki there is a special page where people may ask stuff like "how many isotopes does Platin have", "do sweating feet contain pheromones" and stuff like that, and whoever feels like it (if anyone does) will give the answer, or make friendly fun of the guy who's asking. On questions pertaining Tamil and Tamil culture, it's sometimes me who's replying. I also made up a set of Tamil-German transliteration rules to avoid using diacritics or Tamil script (which most German browser setups cannot process), but still to have standardized forms to make the titles of articles searchable (one "Tirukkural" instead of twenty possible "Thirukkurals", "Tirukurals", "Thirukurals" etc.). Well, that's me - just as an introduction.

Greetings, -- கவையன் <°)))o>< 15:45, 3 மார்ச் 2006 (UTC)

Notes: TWpedia[தொகு]

கட்டிட கட்டுமான விதிகள்[தொகு]

கட்டிட கட்டுமான விதிகள் கட்டிடங்கள் எப்படி கட்டப்படவேண்டும் என்று வரையறை செய்யும் விதிமுறைகள் கட்டிட கட்டுமான விதிமுறைகள் ஆகும். இவ்விதிமுறைகள் அனுமதிக்கப்பட்ட, அடிப்படை முறைகளை, தேவைகளை, வரையறை செய்யும். இவ்விதிகளை () கட்டிட பொறியிலாளர்களும் அறிந்து பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு நாடுகள் அல்லது பிரதேசங்களும் தத்தம் கட்டிட கட்டுமான விதிகளை கொண்டிருக்கும்.

கட்டிட வீழ்த்தல்

City Networks[தொகு]

Electric power Gas Sewer Solid Waste Removal

இலங்கை உள்ளுராட்சி தேர்தல்[தொகு]

நக்கீரன் செய்திகள் திகதிகளை முன்னிறுத்தி தொகுக்கப்படுவதே அருமையாக இருக்கும் என நினைக்கிறேன்.--கலாநிதி 15:59, 22 மார்ச் 2006 (UTC)

நற்பணி[தொகு]

நான் உட்பட பல பழைய பயனர்கள் குறைவான பங்களிப்பு மட்டுமே செய்து வரும் வேளையில் புதியவர்களுக்கு தக்க வலுவும், வழிகாட்டுதலும் அளித்து வருகிறீர்கள். மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் நானும் ஓரளவு பங்களிக்கத் துவங்குகிறேன். இரவியுடனும் தொலைபேசியில் பேச முடிந்தது. அவரும் நெதர்லாந்து திரும்பி சில வாரங்களில் தொகுக்கத் துவங்குவதாகக் கூறியுள்ளார். முடிந்த அளவு சந்தோஷ்குருவையும், ஹரிகிஷோரையும் பங்களிக்குமாறு வற்புறுத்தவுள்ளேன். அதுவரை நீங்களும், சிவகுமாரும், மயூரநாதனும், மற்றும் புதிதாய் நன்கு பங்களித்து வரும் பலரும் இந்த போக்கைத் தக்கவையுங்கள். நன்றி. -- Sundar \பேச்சு 06:59, 29 மார்ச் 2006 (UTC)

நல்ல செய்தி. பாராட்டுக்களுக்கு நன்றிகள். --Natkeeran 07:12, 29 மார்ச் 2006 (UTC)

நுழைவாயில்[தொகு]

போர்டல் அல்லது நுழைவாயில் பற்றிய தகவ்லை எங்கு பெறலாம்?--ஜெ.மயூரேசன் 08:10, 29 மார்ச் 2006 (UTC)

மயுரேசன், நுழைவாயில்கள் அமைப்பது பற்றி எனக்கு தெளிவான விளக்கம் இல்லை. தமிழ் விக்கிபீடியாவில் பயனர்:வைகுண்ட ராஜா தான் முறையான நுழைவாயில் (நுழைவாயில்:அய்யாவழி) (ஆங்கில விக்கிபீடியாவை பின்பற்றி) அமைத்துள்ளார் என்று நினைக்கின்றேன். அவரின் முன்மாதிரியை வைத்து பிற நுழைவாயில்களை அமைப்பது அவ்வளவு சிக்கலாக இருக்காது என்று நினைக்கின்றேன். --Natkeeran 16:28, 31 மார்ச் 2006 (UTC)
நன்றி நக்கீரன். நான் ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒரு நுழைவாயில் அமைத்துள்ளேன். அதைப்பற்றி இங்கும் ஒரு நுழைவாயில் அமைக்கலாம் என்று நினைக்கின்றேன். Portal for Sri Lanka--ஜெ.மயூரேசன் 12:44, 1 ஏப்ரல் 2006 (UTC)



தலைப்பு மாற்றங்கள்[தொகு]

தலைப்பு மாற்றங்கள் நன்று நற்கீரன் -- சிவகுமார் 05:25, 8 ஏப்ரல் 2006 (UTC)


Fair use--Natkeeran 13:24, 15 ஏப்ரல் 2006 (UTC)

"ழ்" சரியான உச்சரிப்பு "MP3" கோப்பு[தொகு]

நண்பரே, தமிழின் சிறப்பெழுத்தான "ழ்" இப்பொழுது யாருக்கும் சரியாக உச்சரிக்க தெரிவதில்லை. ஆகவே உங்களால் முடிந்தால் இந்த எழுத்தை திருத்தமாக உச்சரிக்க கூடிய ஒருவரை கொண்டு உச்சரித்து அதனை ஒரு "MP3" கோப்பாக சேமித்து விக்கிபீடியாவின் "ழ்" கட்டுரையில் தொடுத்து விட்டால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். - சுரேன்.

Self Notes "On Collaborative Authoring on the Web by William Emigh"[தொகு]

Both Lih and Viégas et al. note the importance on Wikipedia of a "neutral point of view" (NPOV), which is promoted explicitly as a mantra of the site. Articles written with a NPOV should "present ideas and facts in such a fashion that both supporters and opponents can agree."10 Lih likens this policy to that of modern news organizations: "sticking to the facts, attributing sources and maintaining balance" (p. 4). Conciseness is also valued on Wikipedia; Viégas

In addition to the use of formal language features and the avoidance of informal and colloquial features, Wikipedia entries are stylistically homogenous, typically describe only a single, core sense of an item,12 and are often presented in a standard format that includes labeled section headings and a table of contents. These effects can be attributed, in part, to the Neutral Point of View policy of the site (Lih, 2004), which prescribes that all entries should follow a single style, and in part, to the norms of conventional print encyclopedias, which Wikipedia effectively emulates.

It still remains to explain why Wikipedia—a usercreated encyclopedia—is largely indistinguishable stylistically from the expert-created Columbia Encyclopedia, since the two are produced by radically different technical means. How is it that the wide-open participation structure of a wiki can reproduce traditional print norms? We believe that two social forces play a role in this outcome. First, Wikipedia users appropriate norms and expectations about what an 'encyclopedia' should be, including norms of formality, neutrality, and consistency, from the larger culture (cf. DeSanctis & Poole, 1994). Second, those norms are enforced through the agency of dedicated, socially-approved members of the Wikipedia community. The common structural elements in the Wikipedia entries suggest that one user (or a small group of users) has changed existing nodes to conform to stylistic norms. The “good” users, who as have been noted by Lih (2004) and Viégas, et al. (2004) are extremely active in the system, may also remove experimental content before most users are able to see it. Their level of activity and interest give them more effective control over the system than casual users. This is a case of genre reproduction (Crowston & Williams, 2000).


Ironically, "good" rank-and-file users on Wikipedia achieve in near-absolute terms what some participants in Everything2 fear from self-interested administrators (Bulkeley, et al., 2000), but which Everything2 comes nowhere close to realizing: imposition of stylistic homogeneity. While this could be viewed as an accomplishment—Wikipedia is increasingly being consulted as a standard reference, in part due to its resemblance to traditional print encyclopedias—it is at odds with the goal of the wiki (and user-created content) movement to create content incorporating diverse perspectives, and more generally to foster new and better communication practices. Notably, it suggests that a few active users, when acting in concert with established norms within an open editing system, can achieve ultimate control over the content produced within the system, literally erasing diversity, controversy, and inconsistency, and homo-genizing contributors' voices. This is an unintended, and to our knowledge previously unnoted, side effect of the "democratic" affordances of wikis

Wikipedia's success demonstrates that it meets users' needs for reliable, up-to-date information. Indeed, with its searchable content, convenient online access, and ability to create entries on recent events quickly, Wikipedia improves on traditional information sources, especially for the content areas in which it is strong, such as technology and current events (Lih, 2004).

--Natkeeran 05:24, 16 ஏப்ரல் 2006 (UTC)

[1]Benkler, Yochai “Coase’s Penguin: Linux and theNature of the Firm,” Yale Law Journal, December2002. online article (http://www.benkler.org/CoasesPenguin.html) [2] Krowne, Aaron, Bazaz, Anil “Authority Mod-els for Collaborative Authoring,”’ HICSS 2004Proceedings,January,2004.onlinearticle(http://br.endernet.org/˜akrowne/my_papers/authority_models/authority_models.pdf) [3] McHenry, Robert “The Faith-Based Encyclopedia,”Tech Central Station, November 15, 2004. online arti-cle (http://www.techcentralstation.com/111504A.html) [4] Sanger, Larry “Why Wikipedia Must Jettison its Anti-Elitism,” Kuro5hin.org, Dec 31 2004. online article(http://www.kuro5hin.org/story/2004/12/30/142458/25)

புத்தக அட்டை காப்புரிமை[தொகு]

பார்க்க: en:Template:Book cover. It is fairuse. -- Sundar \பேச்சு 08:39, 17 ஏப்ரல் 2006 (UTC)

உதவி[தொகு]

நக்கீரன்,தனிநபர் ஆறிமுகம் செய்வது தொடர்பான வார்ப்புருக்கள் ஏதேனும் உள்ளதா? அது பற்றி அறியதர முடியுமா? வார்ப்புரு தொடர்பான விளக்கத்தினையும் தந்து உதவமுடியுமா?--கலாநிதி 16:57, 20 ஏப்ரல் 2006 (UTC) kalanithe

நக்கீரன் நான் குறிப்பிடுவது, இங்குகாணப்படுவது போன்று நபரின் படத்துடன் அவர்பற்றிய தகவல் வருவது போன்று ஏதேனும் வார்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதா என்பதே என் கேள்வி? வசனத்தில் எழுதுவதை விட இவ்வாறு குறிப்பிடுவது சிறப்பாக அமையும். kalanithe

கவனத்துக்கு[தொகு]

நற்கீரன், வ.ந.கிரிதரனின் பேச்சுப் பக்கத்தில் எனது பதிவைப் பார்க்கவும். Mayooranathan 18:34, 20 ஏப்ரல் 2006 (UTC)

Natkeeran, could you please help eelanathan in renaming (actually creating new pages and deleting older ones) the articles about eelam books? கோபி 14:36, 21 ஏப்ரல் 2006 (UTC)

//நன் நூல், நூலக திட்டம் என்பது போல// எனக்கு நீங்கள் கூறுவது சரியாக விளங்கவில்லை. புத்தகம் என்பது பொருத்தமானது என்றே நினைதேன். ஆயினும் சுருக்கம் கருதி நுஉல் என்றே பயன்படுத்தலாம். --கோபி 07:43, 23 ஏப்ரல் 2006 (UTC)

எனக்கு நீங்கள் கூறுவது சரியாக விளங்கவில்லை. புத்தகம் என்பது பொருத்தமானது என்றே நினைதேன். ஆயினும் சுருக்கம் கருதி நுஉல் என்றே பயன்படுத்தலாம்.தெரியவில்லை. ஆனால் புத்தகம் என்பதைத் தவிர்த்து பொத்தகம் என்று பாவிக்கும்படியான கோரிக்கைகள் உள்ளன. என்பதால் புத்தகம் சமஸ்கிருதமாக இருக்கலாம்.--கோபி 07:49, 23 ஏப்ரல் 2006 (UTC)

உண்மைதான். நுஉல் என்றே பயன்படுத்துவோம்.--கோபி 07:53, 23 ஏப்ரல் 2006 (UTC)

download[தொகு]

earlier, sundar had told me about the download procedures..but if orgot :) I think somethingto do with the e follwoing page http://download.wikimedia.org/ I will request sundar to come up with a detailed instructions page--ரவி 13:49, 27 ஏப்ரல் 2006 (UTC)

Translate Template[தொகு]

Natkeeran, I didnot get what u meant. Pls clarify. -- 15:55, 7 மே 2006 (UTC)

Yah. I got it. And reverted it back too. Thanks dude! -- சிவகுமார் 05:37, 10 மே 2006 (UTC)[பதிலளி]

links compilation[தொகு]

Natkeeran, I usually find ur compiltaion of links in talk pages useful and relevant most of the time and I do support such efforts in the talk pages. Its just that I found the two links to the sidha firms inappropriate. It was a case by case thing to see whether something should be there in wikipedia. Though en wikipedia doesnt allow compilation of links, I wont object it in tamil wikipedia since i do understand the need for such efforts in tamil context. Then its true and a pity that most of the government websites and general websites in TN are in english or either in non unicode tamil font. The main reasons are due to the british raj, failure of vision by the founding fathers of India and TN to revive education through mother tongue and associating technology, computer all those stuff with english..Its this sad trend that we are trying to change through our collective efforts like wikipedia..Hope things will come become better soon--ரவி 17:42, 7 மே 2006 (UTC)[பதிலளி]

தமிழகத் தேர்தல்[தொகு]

நற்கீரன், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 கட்டுரையில் முடிவுகளைச் சேர்த்ததற்கு நன்றி. சில தொகுதிகளின் முடிவுகளில் சிக்கல் உள்ளது போல் தோன்றுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் வெற்றி பெற்றது சுயேட்சை வேட்பாளரா அதிகாரப்பூர்வ கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரா என்பதில் பல்வேறு ஊடகங்களில் மாறுபட்ட தகவல்கள் கிடைக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகள் தளம் இங்கே உள்ளது. -- Sundar \பேச்சு 07:05, 12 மே 2006 (UTC)[பதிலளி]

Sundar, சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றது வந்தவாசி தொகுதியில். தளி தொகுதியால் தர்போது குழப்பம் இல்லை
51 Vandavasi JAYARAMAN S Independent
-- Harikishore 07:19, 12 மே 2006 (UTC)[பதிலளி]
Kishore, see en:Talk:Tamil Nadu state assembly election, 2006#Concerns reg accuracy of results. If this ambiguity is already resolved, it's fine with me. Anyway, we can go by the official EC site. -- Sundar \பேச்சு 07:24, 12 மே 2006 (UTC)[பதிலளி]

natkeeran, i just sent two mails to ur gmail id about tamil wikipedia quality watch and few other things. pls check it. we will soon formalise some guidelines about merging content--ரவி 16:06, 15 மே 2006 (UTC)[பதிலளி]

re: Wikimedia updating[தொகு]

Good catch, Natkeeran. Usually they update English first and if there's no problem, they do it for all languages. Let's wait for some more time. -- Sundar \பேச்சு 04:10, 17 மே 2006 (UTC)[பதிலளி]

பொருளியல் கட்டுரை[தொகு]

நக்கீரன் பொருளியல் தொடர்பான கட்டுரை எழுத ஆங்கிலவிக்கி,இலங்கை உயர்தர பாட notes மற்றும் சில தமிழில் வந்த பொருளியல் நூல்களையும் உபயோகிக்கின்றேன். கட்டுரைகள் தொடர்பான ஏதும் சந்தேகம் ஏதும் இருந்தால் தெரிவிக்கவும்.--kalanithe

நன்றி[தொகு]

நன்றி நற்கீரன். உங்களை அடிக்கடி பாராட்ட வேண்டியிருப்பதால் பொதுவாக ஒருமுறை உங்கள் பங்களிப்புகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். :-)

தமிழ் விக்கிபீடியா விளைச்சல்

சிலர் ஆழ உழுவார்கள், நான் அகல உழுபவன். இரண்டுமே தமிழ் விக்கிபீடியாவிற்கு இன்றியமையாதவை. கோடையில் மழை இல்லாதபோது மண்ணைக் கிளறி அகல உழுவதன்மூலம் மழைநீரை ஈர்க்க முடியும், அதுபோல புதுப்பயனர்கள் தேடுபொறிகள் மூலமும் பிற வழிகளிலும் வரும்பொழுது அவர்களுக்கு எந்தத்துறையினரானாலும் ஈடுபாடு ஏற்படுதுபவை இக்கட்டுரைகள். அதே நேரம் மயூரநாதன் போன்றோர் சிறந்த ஒருமித்த கட்டுப்பாட்டுடன் முழுமையான கட்டுரைகளை உருவாக்குகின்றனர். அவை நமக்கு ஏற்றமளிப்பவை. உங்கள் போன்றோர் தொழில்நுட்பக் கட்டுரைகளை உருவாக்குவதிலும் வாய்க்கால்களாம் கொள்கைப் பக்கங்கள் உருவாக்குவதில் முனைப்புக் காடுகிறீர்கள். இரவி, சிவகுமார் போன்றோர் கொள்கை அளவிலும், தர அளவிலும், விக்கி குறியீடு அளவிலும் களை எடுக்கின்றனர். செல்வா, கனகர், மற்றும் பல புதிய பயனர்கள் சிறப்பு திறன்களைப் பெற்று உரமிட்டு வருகின்றனர். இந்த கூட்டு வேளாண்மையின் விளைச்சலை ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் பெற வேண்டும். :-) -- Sundar \பேச்சு 07:41, 9 ஜூன் 2006 (UTC)

சுந்தர், உங்க உவமையைக் கண்டு புல்லரிக்குது :) எல்லாவற்றிலும் விக்கி நடையைக் கையாள்வதில் தமிழ் விக்கிபீடியாவில் உங்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை :)--ரவி 08:28, 9 ஜூன் 2006 (UTC)
:-)) --சிவகுமார் 08:52, 9 ஜூன் 2006 (UTC)
நன்றி இரவி, சிவா. -- Sundar \பேச்சு 09:14, 9 ஜூன் 2006 (UTC)
இதைச் சிறிது திருத்தி எனது பயனர் பக்கத்தில் இட்டுள்ளேன். பல தட்டச்சுப் பிழிகளும் களையப்பட்டுள்ளன. -- Sundar \பேச்சு 10:07, 9 ஜூன் 2006 (UTC)

தமிழ் பெயர்கள்[தொகு]

நற்கீரன், கீழ்கண்ட வார்த்தைகளை எவ்வாறு தமிழில் கொள்ளலாம்?

  • pantheism
  • panentheism
  • shamanism
  • inclusivism
  • exclusivism
  • phenomenology

அய்யாவழி கட்டிரையில் இது தேவைப்படுவதால் கூடிய விரைவில் தெரிவித்தால் நன்று. நன்றி - வைகுண்ட ராஜா 01:42, 12 ஜூன் 2006 (UTC)

நற்கீரன், இக்கட்டுரையில் சில எழுத்துப்பிளைகளும் சில மொழி பெயர்ப்ப்ய் பிளைகளும் இருக்கலாம் என நினைக்கிறேன். மேலும் எனக்கு 'இரு வார்த்தைகளை இணைக்கும் இடத்தில் ஒற்றெழுத்துகளை சரியாக பயன்படுத்தவும், வார்த்தைகளை சேர்த்து எழுதுவதா பிரித்து எழுதுவதா எனவும் தெளிவு இல்லை. எனவே இவ்வகையான பிளைகளை எனது கட்டுரைகளில் சரி செய்ய கேட்டுக்கொள்கிறேன்(எ.க) மேற்கு(த்) தொடர்ச்சி மலை. - வைகுண்ட ராஜா 23:32, 14 ஜூன் 2006 (UTC)
பாராட்டுக்கு நன்றி! - வைகுண்ட ராஜா 00:14, 15 ஜூன் 2006 (UTC)
நன்றி! - வைகுண்ட ராஜா 00:34, 15 ஜூன் 2006 (UTC)
நற்கீரன், இந்து சமுத்திரம் கட்டுரையை மொழிபெயர்த்துள்ளேன். மற்ற பிளைகளை கவனிக்காவிட்டாலும், தமிழ் பயன்பாடுகளை, (தமிழாக்கப்பட்ட பதங்களையாவது) மேலோட்டமாகவாவது பார்க்கவும். நன்றி - வைகுண்ட ராஜா 22:31, 15 ஜூன் 2006 (UTC)

பதிவுகள் இணையத்தளத்தில் நற்கீரனின் நேர்காணல்[தொகு]

நற்கீரன், உங்கள் நேர்காணலை பதிவுகள் இணையத்தளத்தில் கண்டேன். தமிழ் விக்கிபீடியா குறித்து நல்ல அறிமுகத்தைத் தந்திருக்கிறீர்கள். தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மேலும் பலரை இந்நேர்காணல் அறிமுகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள்.--Kanags 10:50, 21 ஜூன் 2006 (UTC)

உங்கள் நேர்காணல் மிகநன்று. புதுப்பயனர்களை ஈர்க்க உதவும். மயூரநாதன் தான் இத்திட்டத்தைத் துவக்கினார் என்று எண்ணி வந்தேன். அவரிடம் தான் கேட்க வேண்டும். விக்கிபீடியாவின் நம்பகத்தண்மை பற்றிய பொதுவான ஐயங்களுக்கு இங்கு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. (நீங்கள் ஏற்கெனவே பாத்திருக்கலாம்.) -- Sundar \பேச்சு 11:29, 21 ஜூன் 2006 (UTC)

தமிழ் விக்சனரிக்கு உள் இணைப்பு தர இயலும்[தொகு]

தமிழ் விக்சனரிக்கு உள் இணைப்பு தர இயலும் நற்கீரன். இரண்டு எடுத்துக்கட்டுக்கள் இங்கு தருகிறேன்.

ஆங்கில விக்சனரிக்கு ta: வை எடுத்துவிட வேண்டும். பிற மொழி விக்சனரிகளுக்கு அந்தந்த மொழி விக்கி குறியைப் பயன்படுத்த வேண்டும்.--ரவி 14:31, 23 ஜூன் 2006 (UTC)


வலைவாசல்[தொகு]

வலைவாசல் அமைத்தல் குறித்தான நுட்பங்களை நான் இன்று இரவு பல முன்னணி மொழி விக்கிக்களில் பார்த்து வருகிறேன். மேலும் வலை வாசல் அமைத்தல் முறையில் எந்த பகுதியை கேட்கிறீர்கள்? Display, procedure, HTML setting, இதில் எது? தெரிந்தால் அந்தப் பகுதிகளை இன்னும் கூர்ந்து கவனித்து சொல்வேன், நன்றி. - வைகுண்ட ராஜா 09:09, 29 ஜூன் 2006 (UTC)

நற்கீரன், புதிதாக உருவக்கியிருக்கும் நுழைவாயில்:தமிழ்நாடு - ஐ பார்க்கவும். இதை பின்பற்றி வேறு ஒரு தலைப்பில் நுழைவாயில் எளிதில் அமைக்கலாம்.
(எடுத்துக்காட்டாக) இதை பின்பற்றி இந்தியா என்னும் நுழைவாயில் அமைப்பதென்றால்,
  • இப்பக்கத்தின் மூலம் (source) அனைத்தையும் ஒரு புதுபக்கத்தில் (நுழைவாயில்:இந்தியா என்னும் தலைப்பில்) நகல் எடுக்கவும்
  • பின்னர் அந்த நகலில் எங்கெல்லாம் தமிழ்நாடு என்று உள்ளதோ அவ்வனைத்து இடங்களிலும் கவனமாக பார்த்து, ஒன்று விடாமல் இந்தியா என மாற்றவும். ஒவ்வொரு பகுதிகளும் தனித்தனி வார்ப்புருக்கள் ஆதலால் ஒரு இடம் விடுபட்டாலும் பெருங்குழப்பம் ஏற்படும். ஆகையால் கவனமாக அனைத்தையும் மாற்றவும். (தமிழ் நாடுக்கு பதிலாக இந்தியா; வேறு எதையும் மாற்றவேண்டாம்)
  • தலைப்புகளில் மாற்றம் வேண்டுமெனில் செய்யவும். உதாரணமாக அறிமுகம் என்னும் இடத்தில் முகவுரை என மாற்ற வேண்டுமென்றால் அதில் மாற்றவும்.
  • இவ்வனைத்தையும் செய்து பக்கத்தை சேமிக்கவும்
  • இவ்வாறு சேமித்தவுடன் தற்போது நுழைவாயில்:தமிழ்நாடு இருப்பது போன்று நுழைவாயில்:இந்தியா என்னும் பக்கத்தை பார்க்கலாம். பின்னர் ஒவ்வொரு சிவப்பு இணைப்புகளையும் சொடுக்கி அந்தந்த பகுதிகளில் எழுதவேண்டியவற்றை கட்டுரைகளிலும் வார்ப்புருக்களிலும் அமைப்பது போன்று அமைக்கவும். - வைகுண்ட ராஜா 22:50, 29 ஜூன் 2006 (UTC)
எனக்கு நுழைவாயில், வலைவாசல் இரண்டில் எதுவும் தவறு என தெரியவில்லை. - வைகுண்ட ராஜா 22:54, 29 ஜூன் 2006 (UTC)
ஆனால் இத்தலைப்பு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்பது அவசியம். ஏனென்றால் நுழைவாயில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 10 வார்ப்புருக்கள் நுழைவாயில் என்னும் தலைப்பில் வருகின்றன. இவற்றை பிறகு பெயர் மாற்றுவதென்றாலும் சிரமமாகும். அப்படி மாற்றுவதென்றாலும் ஒவ்வொரு நுழைவாயிலுக்கும் 10 வார்ப்புருக்களின் தலைப்புகளை மாற்ற வேண்டியிருக்கும். வேறு புதிய நுழைவாயில்களை அமைப்பதென்றால் இப்பிரச்சனையை முடித்து விட்டு அமைப்பது நல்லது. இது அமைக்கும் விதத்தை விளக்கவே இந்த நுழைவாயிலை அமைத்தேன். நன்றி - வைகுண்ட ராஜா 23:02, 29 ஜூன் 2006 (UTC)

கலைச்சொற்கள்[தொகு]

panentheism - shamanism - exclusivism - phenomenology ஆகிய வார்த்தைகளை நானும் மொழிபெயர்க்க முயற்சி செய்து பார்த்தேன். முடியாததால் தான் உங்களிடம் கேட்டேன். மிகுந்த சிரமமுடைய வார்த்தைகள். முதலில் ism, logy ஆகிய பொது suffix-களை (அனைத்து வார்த்தைகளுக்கும் பொருந்தும் வகையில்) மொழி பெயர்த்தால் மற்றவைகள் சற்று எளிதாகி விடும் என கருதுகிறேன். இப்பதங்களை எவ்வாறு கொள்வது என்பது பற்றி உங்கள் கருத்தை கூறினால் நன்று. - வைகுண்ட ராஜா 19:38, 30 ஜூன் 2006 (UTC)

இவற்றுக்கு முறையே இயம் , இயல் என்ற பின்னொட்டுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மார்க்சியம், கருத்தியல் அத்தோடு சிலவேளை வாதம் என்ற பின்னொட்டும் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு பொதுவுடைமைவாதம். பின்னவீனத்துவம், ஏகத்துவம் போன்றவற்றில் துவம் பயன்படுத்தப்படுகிறது. --மு.மயூரன் 20:05, 30 ஜூன் 2006 (UTC)

மயூரன் கூறிய suffix களை பயன்படுத்தி கீழ்கண்ட விதத்தில் முயற்சி செய்திருக்கிறேன். இது சரி தானா?
  • pantheism - அனைத்திறையியம்?
  • panentheism - அனைத்துள் இறையியம்?
  • shamanism - இறைத்தொடர்பியம் ?
  • inclusivism - இணைப்பியம் ?
  • exclusivism - தவிர்ப்பியம் ?
  • phenomenology - முரண்பாடியல்?
மேலும், pantheism என்பது நாம் காணும் அனைத்தும் இறைவன் என்னும் கோட்பாடாகும். ஆனால் அத்துவைதம் (அத்துவிதம்) எம்பது பரமாத்துமாவும் சீவாத்துமாவும் ஒன்று என்று சொலவது அல்லவா? அதனால் pantheism என்பதை அத்துவிதம் என பொருள் கொண்டால் தவறாகாதா? - வைகுண்ட ராஜா 20:45, 30 ஜூன் 2006 (UTC)

கட்டுரைத்தலைப்புகளில் எழுத்துப் பிழைகளை எப்படித் திருத்துவது?[தொகு]

நற்கீரன், எ+கா: சோ. சிவபாசுந்தரம் என்ற கட்டுரையின் தலைப்பில் எழுத்துப்பிழை இருந்தது. இதனை நகர்த்தல் மூலம் திருத்தினேன். இம்முறை சரிதானா? பகுப்பில் (ஈழத்து எழுத்தாளர்கள்) அது இன்னமும் திருத்தப்படவில்லை. என்ன காரணம்?--Kanags 00:50, 8 ஜூலை 2006 (UTC)

நுழைவாயில்: ஆளுமைகள்[தொகு]

ஆட்கள் தொடர்பான கட்டுரைகள் நபர்கள் என்ற பகுப்புக்குள் வருகின்றன. நபர்கள் என்பதை விடவும் ஆளுமைகள் என்பது பொருத்தமா என செல்வாவிடம் கேட்டுள்ளேன். மேலும் அதற்கு ஒரு நுழைவாயில் அமைத்தால் நன்று. ஆங்கில விக்கியில் ஆட்கள் தொடர்பான நுழைவாயிலுக்கு இணைப்பு முதற்பக்கத்திலேயே இருக்கிறதல்லவா? தவி யிலும் ஆட்கள் தொடர்பான பக்கங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன. கோபி 15:48, 9 ஜூலை 2006 (UTC)

நிர்வாகி தரம்[தொகு]

நற்கீரன், kanags க்கு நிர்வாகி தரம் கொடுக்கலாமே. அவர் த.வி. க்கு நீண்ட காலமாகப் பங்களித்து வருகிறார். த.வி. க்கு வர நீண்டகாலத்துக்கு முன்பிருந்தே இணையத் தமிழில் உள்ளடக்க உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க வகையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தவர். நூலகம் திட்டத்திற்கும் பங்களிக்கிறார். மேலும் விக்கிப்பீடியாவின் நெளிவு சுளிவுகளையும் தெரிந்துவைத்துள்ளார். குறிப்பிடத்தக்க கட்டுரைகளையும் சேர்த்துள்ளார். தொடர்ச்சியான இணைய இணைப்பு வசதியும் அவருக்கு இருப்பதாகத் தெரிகிறது. அத்துடன் அண்மைய மாற்றங்களையும் தொடர்ச்சியாக அவதானித்துப் பொருத்தமான சிறு மாற்றங்களைச் செய்வதோடு பேச்சுப் பக்கங்களில் பயனுள்ள கருத்துக்களையும் சொல்கிறார். அதைவிட அவர் ஒரு நிர்வாகியாவதற்கான பொறுப்புணர்வு கொண்டவராகவே தெரிகிறார். அவருக்கு நிர்வாகி தரம் வழங்கினால் த.வி. இன் தரத்தை உறுதிப்படுத்துவதில் அவரால் சிறப்பாக பங்களிக்க முடியுமல்லவா! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மேலும் நிர்வாகித் தரத்துக்குப் பொருத்தமான இன்னொருவர் செல்வா. அவரும் அண்மைய மாற்றங்களை அவதானித்துக் கருத்துச் சொல்பவர். துறைசார் அறிவும் மொழியறிவும் மிக்க செல்வா தமிழ்விக்கிப்பீடியாவின் தரத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவு செல்வாக்குச் செலுத்தவுள்ளார் என்றே தோன்றுகிறது. கோபி 15:48, 9 ஜூலை 2006 (UTC)

பதிற்குறிக்கு நன்றி நற்கீரன், கனகுவிடம் இப்பொழுதே கேட்கிறேன். செல்வா இணைந்து சிலகாலம்தான். அவருக்கு இன்னும் சிலகாலத்துக்குப் பின்னர் வழங்க நினைப்பது சரிதான். தொடர்ச்சியாக பங்களிக்கத் தேவையான இணைய இணைப்பு, நேரம் மற்றும் மிக முக்கியமாகப் பொறுமை என்பன என்னிடமில்லை என உணர்கிறேன். மேலும் விக்கிபீடியாவிலும் நான் சரியாகத் தேர்ச்சி பெறவில்லை. இக்காரணங்களால் இப்போதைக்கு நிர்வாக வசதிகளின்றி இருக்கவே விரும்புகிறேன். உரிய காலம் வந்ததாக உணரும்போது நானாகவே என்னை நியமித்துக்கொள்ள முன்வருவேன்.--கோபி 16:02, 11 ஜூலை 2006 (UTC)

யூதர்[தொகு]

இயேசுவின் மற்ற உவமைகளை சேர்த்த பிறகு உங்கள் கேள்விக்கு பதில் கிட்டலாம்.....

யூதர் தொடர்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவது போல நீங்கள் உணர்ந்தது தவரில்லை. இது கிறிஸ்தவதில் முதலில் இனைந்த பல யூதரல்லாதோரும் முதலில் கேட்ட கேள்வியாகும்.

கோடை விடுமுறையில் இயேசுவும் யூதரும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரயை எழுத என்னியுள்ளேன் அதில் பதில் கிட்டும்.

--டெரன்ஸ் 01:44, 12 ஜூலை 2006 (UTC)

அய்யா[தொகு]

நற்கீரன் முன்பொருமுறை அய்யாவழியின் சமுதாய பின்புலத்தைப் பற்றி கேள்வி எழுப்பி இருந்தீர்கள். கீழ்காணும் இணைப்புகள் இவ்வியல்பில் சில தகவல் களை தரலாம்.

  • [1]
  • [2]
  • [3] - இவ்விணைப்புஒரு பொது அலசலானாலும் இதிலும் சில பயனுள்ள தகவல்கள் இருப்பது போல் தோன்றுகிறது. இவ்விணைப்பில் "அய்யா", "வைகுண்டர்" ஆகிய பதங்களை தனித்தனியாக Search செய்து படித்தால் எளிதாக இருக்கும்.
  • [4] - இவ்விணைப்பிலும் அய்யா பகுதியை search செய்து பார்க்கவும்.

மேலும் இவ்விணைப்புகள் அனைத்திலும் வைகுண்டர் மீதான சமுதாயப் பார்வையே ஓங்குகிறதாதலால் இவாற்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளவைகளை எமது சார்பு கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இவற்றில் சில குறிப்பிட்ட தகவல்களில் எனக்கு உடன்பாடில்லை. சிலவை அகிலத்திரட்டுக்கு உடன்பாடில்லாதவை. ஆனால் இவற்றில் வைகுண்டர் மற்றும் அய்யாவழி பற்றிய பல கோணப் பார்வைகளை நீங்கள் காண முடியும். அதனால் தான் உங்களுக்கு இவ்விணைப்புகளை கொடுத்திருக்கிறேன். மேலும் இதில் சிலர் அய்யாவழியை தனி சமயமாக சுட்டிக்காட்டுவதைக் காண்க.

உங்கள் கருத்தைக் கூறவும், ஏதேனும் அறிய விரும்பினால் கேட்கவும், நன்றி. - வைகுண்ட ராஜா 00:05, 14 ஜூலை 2006 (UTC)

நேரம் கிடைக்கும் போது நிச்சயமாக செய்கிறேன். ஆனால்,
எனது பார்வையில், அய்யாவோ அய்யாவழியோ, சமுகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தினுடன் ஒப்பிடுகையில் வெளி உலகுக்கு சுத்தமாக தெரியாமலே இருக்கிறது. அடுத்து அவரைப்பற்றி தெரிந்தவர்களில் 95% பேர் அவரை மையப்படுத்தும் அய்யாவழியையோ அகிலத்திரட்டையோ அறிந்திராதவர்களாய் அவரை ஒரு சீர் திருத்த வாதி என்ற ஒரு கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கின்றனர். ஒருவேளை அவர் சீர்திருத்தவாதியாகவும் இருந்திருக்கலாம். ஆனால் (அய்யாவழியின்) சமயப்பார்வையில் அவர் இறைவன். அதுவும் நிர்குண (சர்வசக்திபடைத்த) இறை சக்தி. இறைவனை சமுதாயப் பார்வையில் பார்ப்பது?
(எ.க) பொதுவாக ஏசு என்ற உடன் இறைவன் என்ற பார்வை தான் வரும். ஆனால் காந்தி என்ற உடன் மகான் என்ற பார்வை வரும். ஆனால் இருவரும் சமுதாயப் பார்வையில் மிக மிகச்சிறந்த மனிதர்கள். இருவரையும் ஒரே தட்டில் எடை போடுவது சரியாக இருக்குமா?
ஏசு ஒரு தரப்பால் இறைவன் என நம்பப்படுபவர். மிகச் சிறந்த மனிதர் என பார்ப்போரும் உண்டு(கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள்). இவ்வனைத்து தரப்பினரும் சமூகம் தானே? ஆக சமூகப் பார்வை என்பது அவரை "இறைவன்" என பார்த்தலையும், மிகச் சிறந்த மனிதர் என பார்த்தலையும் உள்ளடக்குமே.
ஆனால் காந்தியோ அவ்வாறல்ல. மிகப்பெரும்பான்மைத் தரப்பால் மிகச்சிறந்த மனிதராக கருதப்படுபவர். இங்கே நம்பிக்கைக்கு இடமில்லை. ஆக காந்தி விஷயத்தில் முழு சமுதாயப் பார்வை பொருத்தமானதே.
இங்கே வைகுண்டர் விஷயமும் ஏசு போன்றதாகும். அய்யாவழி நம்பிக்கையில் முழுமுதற் கடவுள்; சமுதாயத்தில் ஒரு மிகப் பெரிய சீர்திருத்தவாதி. ஆக இரண்டையும் கலந்த முறையில் ஒரு சமுகப்பின்புல பார்வையை அமைப்பது எவ்வாறு? அவ்வாறு அமைக்கப்படின், அதன் அடித்தளம் எதுவாக இருக்க வேண்டும் என கருதுகிறீர்கள்?
ஆனால் அது ஒரு தரப்பினரின் நம்பிக்கை என்னும் உயிர் நாடியை சிதைக்காமல் இருக்க வேண்டும் என்பது மட்டும் எனது ஆணித்தரமான நிலைபாடு. ஏற்றுக்கொள்கிறீர்களா? - வைகுண்ட ராஜா 18:27, 14 ஜூலை 2006 (UTC)

நன்றி[தொகு]

பாராட்டுக்கு உங்களை போன்றவரின் உற்சாகமூட்டும் வசனங்கள் என்பணியை தொடர உதவும். --டெரன்ஸ் 09:29, 15 ஜூலை 2006 (UTC)

படிமம்:Bible41Mar13 35-37.jpeg[தொகு]

இந்த படிமம் ஒரு public domain picture bible இலிருந்து எடுத்தேன் PD என இட்டுள்ளேன் இது சரியா? இது சரியெனில் விக்கி சட்டத்துக்கு உட்பட்டதாக இருந்தால் இன்னும் பல படிமங்களை பதிவேற்றலாம். அதுதான் கேட்கிறேன்.--டெரன்ஸ் 03:41, 17 ஜூலை 2006 (UTC)

நன்றி --டெரன்ஸ் 15:59, 19 ஜூலை 2006 (UTC)

பெயரியல்[தொகு]

நற்கீரன், பதில் கூறவில்லை? இவ்விவாதமும் பழைய அய்யாவழி உரையாடல் போல் ஒரு நீண்ட உரையாடல் ஆகிவிடாது. உங்கள் கருத்தை மட்டுமே கேட்டேன். மேலும், மேலே கூறிய ஆங்கில பெயருக்குரிய (panthiesm, panentheism,... ) கருத்தையாவது விரைவில் கூரி நாம் ஒரு முடிவை எடுத்து விட்டால் நல்லது. ஏனென்றால் அய்யாவழியை சிறப்பு கட்டுரையாகுவதில் தாமதம் இதனாலேயே. இப்பணி நிறைவடைந்து விட்டால், (panthiesm, panentheism,... ) இந்த போன்ற கருத்துக்களை உள்ளடக்கும் ஒரு சிறு பத்தியை சேர்த்து விட்டு பயனர் ரவி கேட்டிருக்கும் சில கேள்விகளுக்கு விடை அளித்து விட்டால், சிறப்பு கட்டுரையாக்குவதில் சிக்கல் தீரும். ஆதனாலேயே துரிதமாக கேட்கிறேன். தவறாக எடுத்துக்கோள்ள வேண்டாம், நன்றி. - வைகுண்ட ராஜா 08:06, 18 ஜூலை 2006 (UTC)

நன்றி[தொகு]

Thanks for the deletion tip. - Ganeshk 01:36, 19 ஜூலை 2006 (UTC)

பொருளியலும் இறையியலும்[தொகு]

பார்க்க: பயனர் பேச்சு:Mayooranathan#பொருளியலும் இறையியலும். :) -- Sundar \பேச்சு 13:27, 20 ஜூலை 2006 (UTC)

ஆம். பல நிலைகளில் மறுக்க முடியாத உண்மை. :) -- Sundar \பேச்சு 13:36, 20 ஜூலை 2006 (UTC)

நன்றி[தொகு]

இணைப்புக்கு நன்றி நற்கீரன். எனினும் என்னால் அதைப்பார்க்க முடியவில்லை. ஏதும் மென்பொருள் தேவையா? --சிவகுமார் 05:16, 21 ஜூலை 2006 (UTC)

சமுகப் பார்வை[தொகு]

மன்னிக்கவும், இங்கு சில பிரச்சனைகள், பதில் தர நீண்ட நேரமாயிற்று.

சொற்கள் பற்றிய குறிப்பு

pantheism - அனைத்திறையியம்?: நாம் காணும் அனைத்திம் இறைவனின் உரு என்பது.
panentheism - அனைத்துள் இறையியம்?: நாம் காணும் அனைத்திலும் இறைவனின் வாசம் இருப்பதாகக் கூறுவது.
shamanism - இறைத்தொடர்பியம் ?: இறைவனுடம் தொடர்பு கொள்வதாக நம்புவது.
inclusivism - இணைப்பியம் ?: அனைத்து கருத்துக்களுள்ளும் உண்மை இருக்கிறது என்பது.
exclusivism - தவிர்ப்பியம் ?: மற்ற அனைத்தும் பொய் என்பது.
phenomenology - முரண்பாடியல்?: குழப்பங்களை கூறுவது.

இவற்றில் ஏதும் மாற்றம் தேவையெனில் அல்லது சரியில்லையெனில் கூறவும்.


இனி அய்யாவழி விஷயத்தில் நம்பிக்கை மற்றும் விமர்சனம் தொடர்பான இரு பார்வைகளையும் ஒரே கட்டுரையில் வைப்பதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லைதான். ஆங்கில விக்கிவில் கிறிஸ்து தொடர்பான சமுதாய்ப் பார்வைக்கும் (பொதுப் பார்வை) மற்றும் நம்பிக்கை தொடர்பான பார்வைக்கும் Jesus மற்றும் Jesus christ இரு கட்டுரைகள் அமைக்கப் பட்டிருப்பதை கண்ட ஞாபகம் இருக்கிறது. ஆனால் இங்கு, அய்யாவழியின் சமுதாயப் பின்புலம் என்னும் தலைப்பில் அல்லது அது தொடர்பான தலைப்பில் கட்டுரை அமைக்கப் போவதினால் அக்கட்டுரையில் அய்யாவழியைப் பற்றிய சமுதாயப் பார்வை மேலோங்கலாம்.


பல கோணப் பார்வைகள் நம்பிக்கையை சிதைப்பதில்லை என்றீர்கள். முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். ஒரு விஷயத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்கள் அதை நம்பாதவர்களை கண்டு பரிதாபப்படுவதே வழக்கம். ஆனால் எனது கேள்வி, எத்தனை பேருக்கு அவ்விதமான நம்பிக்கை இருக்கிறது? சமயவாதிகள் (நான் கண்டவரை அனைத்து சமயங்களிலும்) மிகப் பெரும்பாலும் இவ்வாறில்லையே. அப்படியிருந்திருந்தால், இன்று விஞ்ஞான உண்மைகளில் (விஞ்ஞான ரீதியாக உண்மை என கருதப்படுபவை) சிலவை, அவர்களின் புனித நூல் விளக்கங்களை ஒத்திருப்பின், அவர்கள் அவ்விஞ்ஞான கருத்தில் தொங்கிக்கொண்டு தனது சமயத்தில் இது இத்தனை வருடங்களுக்கு முன் கூறப்பட்டிருக்கிறது, என கூறி பெருமைப்பட மாட்டார்கள். சமயத்தில் ஆழந்த நம்பிக்கை உள்ளவர்கள் அதன் புனித நூலின் ஒவ்வொரு எழுத்தையும் நம்பவேண்டுமே, விஞ்ஞான ரீதியாகவோ அல்லது வேரு விதமாகவோ நிரூபிக்கப்படாவிட்டாலும். ஆனால் இன்று பெரும்பாலும் அவ்வாறில்லை. அய்யாவழியிலும் அகிலத்தின் கருத்துக்களை ஆழ்ந்து நோக்குபவர்களில் இவ்வாறான ஆட்களைப் பெரும்பாலாகப் பார்க்கிறேன்.

பிரஜாபதி அடிகளாரே ஒரு புத்தகத்துக்கு அளித்த நேர்முகத்தில் அகிலத்திரட்டில் வைகுண்டர் பேயை எரித்தார் என்பது உளவியல் ரீதியாக அவர்களின் மனதை திடப்படுத்தவே, என்கிறார். இது அய்யாவழியின் தலைவர் என கருதப்படுபவரின் நிலை. மேலும் போப் ஆண்டவர் Darwin theory, Big Bang theory (Big Bang theory - யை முதலில் எதிர்த்து பின் ஏற்றுக் கொண்டார்), போன்ற கொள்கைகள் வந்த உடன் அவைகளை எதிர்த்தார். ஆக உலகம் முழுவதிலும் இன்று நம்பிக்கை என்பது இவ்வாறிருக்கிறது. அதனால் இது போன்ற நம்பிக்கை சார்ந்த தலைப்புக்களை கையாளும் போது அது சமுதாயப் பார்வையாக இருந்தாலும் அது அதை நம்புபவர்களில் மிகப் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையில் தலையிடுகிறது.

நான் இதை இவ்வளவு விரிவாக சொல்வதேனெனில், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (Peace TV - யில்) (உலகின் இரு முக்கிய சமயத்தின்) இரு சமய ஆய்வலர்கள் ஒரே மெடையில், மாறி மாறி பல தலைப்புக் களில் பேசி, இறுதியில் அதில் ஒரு தரப்பை மற்ற தரப்பிடம் "உங்கள் சமய நூல் தவறு என்று மட்டுமல்ல, உங்கள் சமயநூல் பைத்தியக்காரத்தனமானது" என்று அறிவியல் ரீதியாக பல முரண்பாடுகளைக் காட்டி நிரூபித்து சென்றார்கள். மற்ற தரப்பு பதில் பேச முடியவில்லை.

இவ்விஷயத்தில் நான் கூற விரும்புவது, அறிவியல் ரீதியாக பார்த்தால், தவறு அத்தரப்பிடம் தவறு இருக்கிறது என்றே வைத்திக்கொள்ளுங்கள், ஆனால் அவ்வுரையாடலைப் பார்த்த மக்களில் அத்தரப்பினர் பெரும்பாலானவர்கள் சோர்வுடன் திரும்பியதை பார்க்க நேரிட்டத்து. ஆனால் அக்கூட்டத்திலும் ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்தையும் கண்டு பரிதாபப்படுபவர்கள் இருந்திருக்கலாம். ஆனால் மிகக் குறைவு. இப்படி ஒரு தரப்பை (அவர்களின் நம்பிக்கையை) மூக்கறுக்கும் ஒரு பொத்துக்கூட்டம் எதற்கு? அத்தொலைக்காட்ட்சியில் பெயரோ "Peace TV".

இப்பதிலை ஒரு நீண்டதாக எண்ணி சடைவாக வேண்டாம். சமயவாதிகள் அனைவரும் (பெரும்பாலும்) இன்று இந்நிலையில் இருப்பதால் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நம்பிக்கை தொடர்பான விஷயத்தில் தொகுப்பு அமைக்க வேண்டும் என்றே கூறுகிறேன். அவ்வளவுதான்.


மேலும் "புத்தர், சித்தர், இயேசு, என்று யார் வந்தாலும் அதை இந்துவாக்கி கொள்வது"; இது விஷயத்தில் நிறையப் பேச வேண்டியுள்ளது நீங்கள் விரும்பினால் தொடரலாம்.

ஏனைய விஷயங்களில் உங்கள் கருத்துக் களை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். மேலும் அய்யாவழியில் சமூகப் பின்புலம் கட்டுரையை தொடங்குவதென்றால் எங்கிருந்து, எவ்வாறு தொடங்குவது? தெரியவில்லை; மாதிரி கொடுத்தால் நன்று. - வைகுண்ட ராஜா 13:46, 23 ஜூலை 2006 (UTC)

your comments about my translation[தொகு]

Natkeeran, Thanks for your comments. I felt the same way when i started the translation. The contact us page in english wiki does not look like the contact us page in Tamil. But since this is the first time i am doing something in WIKI i didnt want to change too much in the layout of the page and just went ahead and translated what was already there. May be i need to move on to some other article that is more interesting than this old web page. - Balshu 22:54, 25 ஜூலை 2006 (UTC)

நன்றி Natkeeran. I will start work on the topics you have listed. Sorry for replying back in english but it is easy for me to type it in english rather than in Tamil. I am spending quite some time to get used to the tamil editor. I think in a few days i will be able to quickly reply back in tamil.

Balshu 23:54, 25 ஜூலை 2006 (UTC)

Universal Acceptance[தொகு]

அவ்வாறான ஒரு சமய-சமூக பிணைப்பு கட்டுரையை எழுத முயற்சிக்கிறேன்.

இந்து என்பதை சமயம் என கொள்ளுதல் தவறு என்பது எனது கருத்தும் கூட.

மேலும் உலகளாவியப் பார்வையின் அடைப்படையினாலான பார்வை இந்தியாவில் நிறைய இருக்கின்றன. Universal Acceptance க்கும் இங்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் அதே Universal Acceptance ஐ ஏற்றுக்கொள்ளாத கொள்கைகளை இந்தியத் தத்துவம், Universal Acceptance என்ற பெயரில் ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாதெனில், அவ்வாறான கருத்துக்களை கூறுபவரை அவரது கருத்துக்காக ஏற்றுக்கொள்ள முடியாது. எனில், யார் வந்தாலும் அவரை உடனே இந்து என்று சொல்ல முடியாதல்லவா? - வைகுண்ட ராஜா 21:09, 28 ஜூலை 2006 (UTC)


சொற்கள் பற்றிய குறிப்பு[தொகு]

pantheism - அனைத்திறையியம்?: நாம் காணும் அனைத்திம் இறைவனின் உரு என்பது.
panentheism - அனைத்துள் இறையியம்?: நாம் காணும் அனைத்திலும் இறைவனின் வாசம் இருப்பதாகக் கூறுவது.
shamanism - இறைத்தொடர்பியம் ?: இறைவனுடம் தொடர்பு கொள்வதாக நம்புவது.
inclusivism - இணைப்பியம் ?: அனைத்து கருத்துக்களுள்ளும் உண்மை இருக்கிறது என்பது.
exclusivism - தவிர்ப்பியம் ?: மற்ற அனைத்தும் பொய் என்பது.
phenomenology - முரண்பாடியல்?: குழப்பங்களை கூறுவது.

இவற்றில் ஏதும் மாற்றம் தேவையெனில் அல்லது சரியில்லையெனில் கூறவும்.

நற்கீரன் இவை பற்றிய உங்கள் கருத்து என்ன? கூறவில்லையே. - வைகுண்ட ராஜா 18:48, 30 ஜூலை 2006 (UTC)

தமிழ்நாடு[தொகு]

தமிழில் தமிழ்நாடு என்று சேர்த்தெழுதவும் ஆங்கிலத்தில் பிரித்து எழுதவும் செய்கின்றனர். இதைப் பாருங்கள். வேறு தளங்களில் மாற்றம் உள்ளதா? --Sundar \பேச்சு 14:07, 5 ஆகஸ்ட் 2006 (UTC)

அது Thamizhnadu என்று அல்லவா இருக்க வேன்டும்!!! இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவிற்க்கு ஒரு கடிதம் எழுதலாம் என்று நினைக்கிறேன் புருனோ மஸ்கரனாஸ் 02:36, 14 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி[தொகு]

தங்கள் வரவேற்புக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்புருனோ மஸ்கரனாஸ் 02:31, 14 ஆகஸ்ட் 2006 (UTC)

வாக்குச் சேகரிப்பு[தொகு]

விக்கி மூலம் தளத் தொடக்கத்தை விரைவுபடுத்த இந்த வழு அறிக்கைக்கு வாக்களிக்கவும். அப்புறம், உங்கள் பேச்சுப் பக்கம் நீண்டுவிட்டது. அதை என் பேச்சுப் பக்கத்தில் உள்ளது போல் தொகுத்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 21:25, 25 ஆகஸ்ட் 2006 (UTC)


நாடுகளின் பெயர்கள்[தொகு]

வார்ப்புரு:நாடுகள் மொழிபெயர்ப்பு இல் எல்லா நாடுகளதும் இயன்றவரை இட்டுள்ளேன். இங்கு {{நாடுகள் மொழிபெயர்ப்பு|Afghanistan}} என்பதாக பாவித்தால் நேரடியக வரும்ஆப்கானிஸ்தான் அல்லது பேச்சு பக்கத்தில் முழுப்பட்டியலும் உள்ளது. தமிழ் பெயர்கள் சில இன்னும் சரிப்பார்க்கப்படவில்லை சரிபார்க்கவும்.--டெரன்ஸ் \பேச்சு 02:39, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

படிமங்களை வகைப்படுத்துதல்[தொகு]

படிமங்களை வகைப்படுத்துவது தொடர்பில் பரிசோதனை முயற்சியாக படிமங்கள் என்ற பகுப்பை விக்கிபீடியா பகுப்பிற்குள் வருமாறு செய்தேன். அது சரியோ தெரியவில்லை. 1000 கும் அதிகமான படிமங்கள் வகைப்படுத்தாமல் உள்ளன. மேலும் ஆங்கிலத்தில் நிறையப் பகுப்புக்களும் காணப்படுகின்றன. வேண்டிய பக்கங்களும் தான். இவையெல்லாவற்றையும் இப்பொழுதே சரிசெய்ய வேண்டும். தமிழ் விக்கிபீடியா நன்கு வளர்ந்த பின்னர் மீண்டும் இவைபற்றி சிந்திப்பதை விட ஆரம்ப நிலையிலே சரி செய்வது நல்லது. நன்றி. --கோபி 19:34, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

மன்னிக்கவும். படிமங்கள் பகுப்பு ஏற்கனவே விக்கிபீடியா பகுப்புக்குள் தான் இருந்தது. [5], [6] போன்ற சில பகுப்புக்களை அதனுள் வருமாறு செய்தேன். அது சரியானதா? ஏனைய வகைப்படுத்தப்படாத படிமங்களை எங்ஙனம் பகுப்பது? கோபி 19:49, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

கொள்கை கத்தரிக்காய் என்று :-)[தொகு]

-)). சில நாட்களாக தங்கள் வருகை முன்புபோல் இல்லை. வேலைப்பளு அதிகமா? --சிவகுமார் 04:54, 30 ஆகஸ்ட் 2006 (UTC)

அப்படி சொல்லலாம். --Natkeeran 04:58, 30 ஆகஸ்ட் 2006 (UTC)

ஒரு மாற்று பார்வை[தொகு]

http://www.sinhaya.com/tamil_problem.html

மனித வளர்ச்சி குறியீடு[தொகு]

மனித வளர்ச்சி குறியீடு என்பதை விட மனித வளர்ச்சி சுட்டெண் மிகவும் பொருத்தமானதே. ஆனால் மனித வளர்ச்சி குறியீடு என்பது கூடுதலான கட்டுரைகளுக்கு ஒரு வார்ப்புரு மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதனை மாற்ற மரந்து விட்டேன். சீக்கிரமே செய்கிறேன்.--டெரன்ஸ் \பேச்சு 14:51, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

நீக்கல் உதவி[தொகு]

உயிரியல் வேதியியல் யுத்தம் எனும் கட்டுரை தேவையில்லாமல் என்னால் உருவாக்கப்பட்டுவிட்டது. தயவு செய்து இதை நீக்கிவிடவும்.--ஜெ.மயூரேசன் 04:19, 4 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]


நபர்கள்[தொகு]

ஆங்கில விக்கிபீடியாவில் பட்டப் பெயர்களை கட்டுரைத் தலைப்பில் இடுவதாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டுக்கு, இந்திய இராணுவத் தலைவர் குறித்த இக்கட்டுரையைப் பார்க்கலாம். ஒருமித்த கருத்து இருந்தால், இதை பெயரிடல் மரபு பக்கத்தில் பரிந்துரைக்கலாம்--ரவி 21:16, 5 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

இலக்கணம்[தொகு]

நற்கீரன், நான் 12ஆம் வகுப்பு வரை படித்த இலக்கணம் எல்லாம் நிறைய மறந்து விட்டது. ஆனால், வலையில் ஒரு எடுத்துக்காட்டுக்கு தேடும் போது, தமிழ்த் தாய் வாழ்த்து - தமிழ் தாய் வாழ்த்து ஆகிய இரண்டுக்குமே சம முடிவுகள் உள்ளன. தமிழ்நாட்டு அரசு தளத்திலோ தமிழ்த் தாய் வாழ்த்து என்று தான் இருக்கிறது. எனவே, தமிழ்த் திரைப்படங்கள் என்று இருப்பது பிழையாகாது. இது போலவே ஆங்கிலத் திரைப்படங்கள் என்று இருக்க வேண்டும். நீங்கள் ஆங்கில திரைப்படங்கள் என்று ஒரு பகுப்பை உருவாக்கியதாக நினைவு. இரு பெயர்ச்சொற்கள் இணைந்து கூட்டுப் பெயர்ச்சொற்களை உருவாக்கும்போது, தகுந்த இடங்களில் ஒற்றுச் சொற்கள் வரும். பிற இடங்களில் புணர்ச்சி விதிகள் வரும். பேச்சுப் பக்கம் நீண்டு விட்டது. தொகுத்து வைக்கலாமே? --ரவி 07:00, 9 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

மெய்யெழுத்துக்கள்[தொகு]

நீங்கள் குறிப்பிட்டுள்ளது மெய்யொலிகளைத்தானே? "ட", "ர", "ல" என்பன சட்டென நினைவிற்கு வருவன. இதன் இலக்கணப் பிண்ணனி இப்பொழுது எனக்குத் தெரியவில்லை, முடிந்தால் கேட்டுச் சொல்கிறேன். செல்வாவை வெகுநாட்களாகக் காணவில்லையே? -- Sundar \பேச்சு 15:36, 12 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ள, ழ, ற, ன, ண, ங ஆகிய மெய்யெழுத்துக்களும் சொல்லின் முதலில் வரா.--ரவி 15:59, 12 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

குறுங்கட்டுரை விரிவாக்கம்[தொகு]

நற்கீரன் நீங்கள் ஆரம்பித்த பின்வரும் குறுங்கட்டுரைகளைப் பொருத்தமான விதத்தில் விரிவாக்கி உதவுவீர்களா? நன்றி.

--கோபி 15:59, 17 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

அகரம் அகாரம்[தொகு]

  • அ-அகரம், ஆ-ஆகரம், இ-இகரம், ஈ-ஈகரம், உ-உகரம், ஊ-ஊகரம் ...
  • க-ககரம், ஙகரம், சகரம், ஞகரம் ...
நற்கீரன், இந்தக் குறிப்பு எதற்கு? ஆகாரம், ஈகாரம் என்று தான் சொல்வர் என நினைக்கிறேன்--ரவி 15:43, 23 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]