கார்பசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்போவைதரசைடு
எளிய கார்போவைதரசைடு
டைபீனைல்கார்பசைடு
டைபீனைல்கார்பசைடு

கார்பசைடு (Carbazide) என்பது RNH-NH(C=O)NH-NHR என்ற பொது வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதி வினைக்குழுவாகும். கார்பானிக் அமிலத்தை ஐதரசீனுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் இதை வழிப்பெறுதியாக பெற இயலும். கார்போவைதரசைடு ஒரு எளிய கார்பசைடு ஆகும். பகுப்பாய்வு வினைப்பொருளாகப் பயன்படும் டைபீனைல்கார்பசைடு என்ற சேர்மமும் ஒரு பொதுவான கார்பசைடுக்கு உதாரணமாகும் [1].

ஆறு இணைதிறன் கொண்ட நிலையில் குரோமியம் இருக்கும் ஆழ்ந்த நீல நிறத்தில் டைபீனைல்கார்பசைடு உருவாகிறது. இச்சேர்மத்தின் அகத்துறிஞ்சுத்திறன் குணக மதிப்பு 3400 ஆகும். அதாவது மிகக் குறைந்த அளவு குரோமியத்தைக் கூட கண்டறியவியலும் என்பது இதன் பொருளாகும். 25 மில்லி கரைசலில் உள்ள 25 மைக்ரோகிராம் அளவு கூட நிறமாலை சார்ந்த கருவிகளால் அறிய முடியும் அடர்த்தியான நிறத்தைத் தருகிறது. எனவே இதைவிடக் குறைவான அடர்த்தி கொண்ட குரோமியத்தைக் கூட கண்டறியலாம்.

தயோகார்பசைடு[தொகு]

கார்பசைடு அமைப்பில் கந்தக வரிசையொத்த சேர்மம் தயோகார்பசைடு எனப்படும். தயோகார்போவைதரசைடு எளிய தயோகார்பசைடுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

கார்பசோன் மற்றும் தயோகார்பசோன்[தொகு]

பகுதியாக ஆக்சிசனேற்றம் செய்யப்பட்ட கார்பசைடு கார்பசோன் எனப்படும். இதனுடைய பொதுவாய்ப்பாடு R=NNH(C=O)NH-NHR. என்பதாகும். கார்பசோன் அமைப்பில் கந்தக வரிசையொத்த சேர்மம் தயோகார்பசோன் எனப்படும். டைதைசோன் எளிய தயோகார்பசோனுக்கு எடுத்துக்காட்டாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Crossley, H. E. (1936). "Diphenylcarbazide. An internal indicator for use in the titration of iron with dichromate". The Analyst 61 (720): 164. doi:10.1039/AN9366100164. Bibcode: 1936Ana....61..164C. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பசைடு&oldid=2750026" இலிருந்து மீள்விக்கப்பட்டது