கண்ணே ராதா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணே ராதா
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புடி. ஆர். சீனிவாசன்
கதைபி. செல்வகுமார்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
ராதா
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புகே. கெளதமன்
கலையகம்சாருசித்ரா ஃபிலிம்ஸ்
வெளியீடு14 ஆகஸ்ட் 1982
மொழிதமிழ்

கண்ணே ராதா (Kanne Radha) கார்த்திக் , ராதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் தோன்றி இயக்குனர் ராம நாராயணன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1]

கதைச்சுருக்கம்[தொகு]

ராதா (ராதா) சு. சோ. வி. சொக்கலிங்கம் (தேங்காய் சீனிவாசன்) என்ற செல்வாக்குள்ள வியாபாரியின் மகளாவாள். அவள் தனது துடுக்குத்தனமான போக்கினால் தனது உறவினர் கீதாவுடன் (வனிதா) வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, அடிக்கடி திரையரங்குகளுக்குச் சென்று படங்கள் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளாள். இதுபோன்ற ஒரு சம்பவத்தில், இலவசமாக பயணம் செய்ய வேண்டி, தான் கர்ப்பமாக இருப்பதாகவும் ,தன்னை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமென்றும் பொய் கூறி அவளது தோழிகளுடன் ராஜா (கார்த்திக்) என்ற மகிழுந்து ஓட்டுனரின் வண்டியில் படம் பார்க்கச் செல்கிறாள். ராதா தன்னை முட்டாளாக்கியதை ராஜா உணர்ந்து கொள்கிறான். இருப்பினும், அவளது குறும்புத்தனத்தால் ஈர்க்கப்படுகிறான்.

ராஜா, தனது மூத்த சகோதரி, வடிவின் (வடிவுக்கரசி), கண் சிகிச்சைக்காக பணத்தை சேமிக்கிறான். பின்னர் தனது நீண்டகால நண்பரான நடராஜின் தந்தையை சில குண்டர்களிடமிருந்து காப்பாற்றிய ராஜா அவனுடனேயே வண்டி ஓட்டியாக சேர்ந்து தங்கிக் கொள்கிறான். இதற்கிடையில், ராதாவும், ராஜாவும் அடிக்கடிச் ஒருவருகொருவர் சந்தித்து கொள்கிறனர். ராஜா ராதாவிடம் தனது காதலை தெரிவிக்கிறான். அவனது பின்னணி பற்றி தெரியாது என்றாலும் மகிழ்ச்சியுடன் ராதா தானும் ஒப்புக்கொள்கிறாள்.

மறுபுறம், கீதாவுடன் காதலில் விழுந்த நடராஜ், மறுபுறம், ராஜாவை அவளை சந்திக்க ராஜாவை அனுப்புகிறான். ஆனால் நடராஜின் தந்தை அவன் பார்க்கும் மணமகளை நிராகரிக்கிறார். தயக்கம் காட்டிய ராஜா நடராஜிற்காக அப்பெண்ணை பார்க்க ஒப்புக் கொள்கிறான். அங்கே ராதவை கண்ட மகிழ்ச்சியில் திருமணத்தை நடத்திட முடிவு செய்கிறான். கீதாவை திருமணம் செய்து கொள்வதற்காக நடராஜ் ராஜாவின் ஓட்டுனராக நடிக்கிறான். திருமணத்திற்கு முன்பே, வடிவின் கண் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ராஜா ,ராதாவை மணந்து கொள்வதை அவர் தடைசெய்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர், சொக்கலிங்கம் வடிவைத் திருமணம் செய்து கொண்டார் எனவும், ஆனால் அடுத்த நாளே அவரை கைவிட்டுவிட்டார் எனவும், அவரது சகோதரியின் நிலைமைக்கு பழிவாங்குவதற்கே இந்தத் திருமணத்தை பயன்படுத்திக் கொள்வதாக ராஜா வலியுறுத்தி ராதாவை மனைவியாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார், இது ராதாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் பெரும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. ராஜாவின் உண்மையான அடையாளம் (ஓட்டுனராக இருப்பது) தெரிய வரும்போது அவர்களது உறவு மேலும் உடைந்து போகிறது. ராதாவின் பெற்றோர் மீண்டும் மீண்டும் அவனை அவமதிக்கிறார்கள்.

பின்னர், பணத்தை அளித்து ராஜாவை சொக்கலிங்கம் வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார். அதற்கு ராஜா ஒப்புக்கொள்கிறான். இருப்பினும் அவன் மனதில் வேறொரு திட்டமிருக்கிறது. சொக்கலிங்கத்தின் அட்டூழியங்களை வெளியே கொண்டு வரவே பணம் வாங்குகிறான். ஆனால் ராஜா ராதாவை ஆழமாக நேசிக்கிறான் மேலும் அவரது நடவடிக்கைள் பற்றி தகுந்த காரணங்களுடன் ராதாவிடம் கூற சரியான நேரத்திற்காக காத்திருக்கிறான். ஆனால் அவள் ராஜா தனது பணத்திற்காக மட்டுமே அவளை நேசித்தான் என்று நினைத்துக் கொள்கிறாள்.

ஏன் ராஜா சொக்கலிங்கத்திடம் பணம் பெற்றுக்கொள்கிறான் என்பதும், சொக்கலிங்கம் தனது தவறை உணர்ந்து வடிவை ஏறுக்கொண்டாரா ? என்பதும் ராஜாவின் உண்மைக் காதலை ராதா உண்ர்ந்து கொண்டு மீண்டும் இருவரும் இணைந்தனரா என்பதும் படத்தின் மறுபாதிக் கதையாகும்.

நடிகர்கள்[தொகு]

  • ராஜாவாக கார்த்திக்
  • ராதாவாக ராதா
  • நடராஜாக ராஜா
  • கீதாவாக வனிதா
  • நடராஜின் தந்தையாக வி. .கே. ராமசாமி
  • சு. சோ. வி. சொக்கலிங்கமாக தேங்காய் சீனிவாசன்
  • வடிவாக வடிவுக்கரசி
  • ராதாவின் தாயாக வசந்தா
  • குண்டு கல்யாணம்

ஒலிப்பதிவு[தொகு]

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

எண். பாடல் பாடியவர்கள் எழுதியோர்
1 " மாலை சூட கண்ணே ராதா..." எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா வைரமுத்து
2 "குலுங்க குலுங்க இளமை" உமா ரமணன் ஆலங்குடி சோமு
3 "கொட்டுங்கடி கெட்டி மேளம்" மலேசியா வாசுதேவன் வாலி
4 "வாளை பருவத்திலே" பி. சுசீலா, எஸ். பி. சைலஜா வாலி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kanne Radha Vinyl LP Records". musicalaya. பார்க்கப்பட்ட நாள் 2014-01-17. {{cite web}}: Cite has empty unknown parameter: |5= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணே_ராதா_(திரைப்படம்)&oldid=3712361" இலிருந்து மீள்விக்கப்பட்டது